திட்டமிடுதல் ஆக்கிரமிப்புக்குச் சமம்!
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028.
இப்பொழுது இரவு 7 மணி.
இப்பொழுது
இரவு 7 மணி. இந்த நேரத்தில் இந்த கட்டுரையை படிக்கும் தொழிலைச் செய்கிறீர்கள். 7.00.01
நேரம் தள்ளி வருகிறது. உங்களது உழைப்பும் தள்ளிப் போகும்.
நீங்கள்
உழைக்கும் 7 மணிதான் உங்கள் நேரம்; ‘அக்கண நேரம்’; அதாவது செயல் நிகழக்கூடிய ‘நிகழ்காலம்’;
அதை அடுத்து வரக்கூடிய காலம்கூட எதிர்காலம்தான். 7.00.01 நேரமும் எதிர்காலம்தான்; உங்களுக்கென்று,
உறுதிப்படுத்தப் படாத காலம்.
அந்த உறுதிப்படுத்த படாத காலத்தில் நடக்கும் நிகழ்வுகளைத்தான் கற்பனையிலும், திட்டமிடுதலிலும்,யோசித்துமுடிவெடுத்தலிலும் நேரத்தைச் செலவிடுகிறீர்கள்.
அதனால் தோன்றும் எண்ணங்களால் விளையும் மனவழுத்தத்தால்தான் 50% துன்பங்களை அனுபவிக்கிறீர்கள். அதாவது துன்ப நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காமலே துன்பங்களை அனுபவிக்கிறீர்கள்.

இறைவன்,
நீங்கள் ஏற்கனவே செய்த நல்லது, கெட்டதுக்கு ஏற்றாற்போல, உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும்
துன்ப நிகழ்வுகளை, எதிர்காலத்தில்தான் திட்டமிட்டு வைத்திருக்கிறான். அதில் நீங்கள்
திட்டமிடுவது அவனுடைய கால நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாகும். ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதுபோல,
உங்கள் கற்பனை, திட்டம், முடிவெடுத்தல் ஆகிய மூன்றும் தவிடுபொடியாக்கப்படுகிறது.
ஆகவே ‘அக்கணம்’
என்னும் ‘நிகழ் காலத்தில்’ வாழ மருத்துவ மனபயிற்சிகளில் அனுபவம் பெற்று, கற்பனை வாழ்க்கையிலிருந்து,
கவனவாழ்க்கைக்கு மாறுங்கள்; புதிய மகிழ்ச்சியான, உலகைக் காண்பீர்கள்!
ஹீலர் அரோமணி.
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
0 Post a Comment: