Monday, July 8, 2019

உடல் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது?.


 உடல்  எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது?.      
தினசரி உடலின் கழிவுப் பொருட்களான சிறுநீர், மலம், வாய்வு, நெஞ்சை அடைத்துக்கொள்ளும் ஏப்பம், சளி ஆகியவை வெளியேறும்படியாகத்தான் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குகை மனிதர்களுக்கு அப்படித்தான் கழிவுப்பொருட்கள் வெளியேறிக்கொண்டிருந்தன.

சமவெளிக்கு வந்து, நெருப்பின் உபயோகத்தைக் கண்டுபிடித்து வாழும்போதுதான். முதன் முதலாக இரண்டு வாழிவியல் விதிகளை மீறுகிறான். முதலாவதாக, இயற்கை உணவையும், சமைத்த உணவையும் சேர்த்தே சாப்பிடுகிறான்.

இரண்டாவதாக  தாகம் எடுத்து ஆறுகளில் தண்ணீர் குடித்து வந்தான். மண்பானையைக் கண்டுபிடித்தவன் வீட்டிற்கே தண்ணீரை கொண்டு வந்து தாகம் எடுக்காமல் தண்ணீர் குடித்தான். ஆக இந்த இரண்டு விதி மீறல்களால், அவனது உடலில் வாய்வு, ஏப்பம், சளி ஆகியவை அதிகமாக உற்பத்தியாகி  வெளியேறின. அதனைக் கண்டு பயந்த ஆதி மனிதன் மருந்தைக் கண்டுபிடித்தான். அதில் சில மருந்துகள் கழிவுப் பொருட்களை தினசரி வெளியேற்றின. சில உடனடி நிவாரணியாக, அந்த கழிவுப்பொருட்களை வெளியேற்றாமல்    உள்ளேயே தேங்க வைத்தன.

உடல் பராமரிப்பு செய்து தேங்கிய கழிவுப் பொருட்களை வெளியேற்றின; வெளியேறும்போது, வாந்தி, பேதி, மயக்கம், தும்மல் போன்ற தொந்தரவுகளைக் கொடுத்துக்கொண்டு வெளியேறின; அந்த தொந்தரவுகளைத்தான் நாம் நோய்கள் என்று சொல்கிறோம். 
           ஹீலர் அரோமணி
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா        மருத்துவமனை, செல் எண்: 9442035291, 

தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: