E 103 TM-அற்புத,அதிசய 3 மருத்துவங்கள் (முழு
கட்டுரை),
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா
மருத்துவமனை, செல் எண்: 9442035291,
100 ஆண்டுகள் வாழ அற்புதமான, அதிசயத்தக்க மூன்று மருத்துவங்கள். (Three miraculous medicines to live for 100 years)
1.
நோய்கள் என்று எவற்றைச் சொல்கிறோம்?
100 ஆண்டுகள் நோய் நொடி
இல்லாமல் வாழமுடியும். இதில் ஊழ்வினை என்ற விதி குறுக்கிடாமல் இருக்க வேண்டும். விதி
குறுக்கிட்டாலும், அது குறுக்கிடும் வரையிலாவது, நலமாக இருக்க வேண்டும்.
2.
ஏற்கனவே நான் எழுதிய மூன்று கட்டுரைகள்: 1. “நோய்கள் உங்களை
வாழவைக்கும். தேவதூதர்கள்” 2. “நோய்க்குரிய மருந்தே நோயை வாழவைத்துக் கொண்டிருக்கிறது!”
3. ”எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாத நோய்களை தோற்றுவிக்கும் மின்கருவி” அவற்றில் தெளிவுபடக் கூறியிருக்கிறேன் “நோய்கள்
கிருமிகளால் (by Germs) தோற்றுவிக்கப்படுவதில்லை. அவைகள் காற்றினாலும், நீராலும் பரப்பப்படுவதில்லை.
உடலிலுள்ள கிருமிகள் நோய்களைக் குணப்படுத்துவதற்காகப் படைக்கப்பட்டவை.
3.
அப்படியானால், நோய்கள் எப்படித் தோன்றுகின்றன?
சிறுநீர், மலம், வாயு, உமிழ்நீர்,
சளி முதலியன உடலிலுள்ள கழிவுப்பொருட்களாகும். நீங்கள் செய்யும் இயற்கை விதி மீறல்களால்,
அந்த கழிவுப்பொருட்கள் உடலில் தேங்கிவிடுகின்றன. , உடல் பராமரிப்பு செய்யும்போது, தேங்கிய
கழிவுப்பொருட்களை வெளியேற்றுகிறது; அப்படி வெளியேற்றும்போது ஏற்படும் தொந்தரவுகளைத்தான்
நோய்கள் என்று சொல்கிறோம். அந்த தொந்தரவுகளையும் உடல் எதற்காக கொடுக்கிறது? உங்களை
“கழிவுப் பொருட்கள் தேங்கிவிட்டன! அப்பொருட்களை நான் வெளியேற்றுகிறேன்; மேலும் தேங்கிவிடாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்!” என்று உடல் எச்சரிக்கைப் படுத்தத்தான்.
4.
நோய்களின் ஆணி வேர் எது?
உழைப்பு குறையும்போது என்ன
நடக்கிறது? உதாரணமாக இளப்பு (Wheezing) எப்படி தோன்றுகிறது? நீங்கள் அரோமணியின் 11
இயற்கை விதிகளை மீறுகிறீர்கள். அதில் முக்கியமானது உழைப்பு (Labour-10th
Aromani Natural Principle ) குறைகிறது என்று வைத்துக்கொள்வோம். உழைப்பு குறைந்தவுடன்,
செரித்தல் குறைகிறது; இதனால், செரிக்கும் உணவின் அளவு குறைகிறது. உதாரணமாக சரியான உழைப்பு
இருக்கும் போது 500 கிராம் சோறு சாப்பிடுவீர்கள்; உழைப்பு 20% குறைகிறது; செரித்தல்
குறைந்து 20% உணவு செரிக்கப்படாமல் போய்விடுகிறது; செரிக்கப்படாத உணவு கழிவுப்பொருட்களாக
மாற்றப்படுகின்றன. அப்படி மாற்றப்படும் கழிவுப்பொருட்கள்தான், துர்நீர், வாயு, சளி
சிறுநீர், மலம் முதலியன ஆகும். துர்நீரின் ஒரு பகுதி வியர்வையாக வெளியேற முடியாமல்
தோலுக்குக் கீழே தங்கிவிடுகிறது; மற்றொரு பகுதி
மூக்கைச் சுற்றியுள்ள காற்றறை மற்றும் முகத்திலும், தலைப்பகுதியிலும் தங்கிவிடுகிறது.
சளி காற்றுப் பாதைகளில் உள்ள சதைச் சுவர்களில் ஒட்டி தங்கிவிடுகின்றன. வாயு மார்புப்
பகுதி மற்றும் வயிற்றுப்பகுதிகளில் உள்ள காலியிடங்களில் நிரம்பி நிற்கின்றன.
5.
மேற்கூறியவாறு கழிவுப்பொருட்கள் தேங்கிவிடுகின்றன. கழிவுப்பொருட்கள்
தேக்கி வைப்பதற்கு இடம் இல்லாத நிலை வரும்போது, உடல் தனது பராமரிப்பு வேலையைத் துவக்குகிறது.
எந்த கழிவுப்பொருள் அதிகமாகச் சேர்ந்துவிட்டதோ அதை முதலில் வெளியேற்றுகிறது. காற்றறை,
முகம், தலை இவற்றில் அதிகமாக துர்நீர் சேர்ந்திருந்தால், தும்மல் மூலம் அந்த நீரை வெளியேற்றுகிறது.
கொஞ்சம் அதிகமாக நீர் சேர்ந்திருந்தால், தலைவலியை ஏற்படுத்தி, அதைக் குணப்படுத்தியவுடன்
தும்மலை ஏற்படுத்தி குணப்படுத்துகிறது. ஆகவே நோய்களின் ஆணி வேர் உழைப்புக் குறைவுதான்.
6.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது எது?
தோலுக்குக் கீழ் சேர்ந்திருக்கும்
துர்நீர் அதிகமாகிவிட்டால், உடலின் பராமரிப்பு சக்தி, உடல் முழுவதும் நீர்க்கட்டிகளை
தோன்றச் செய்து அரிப்பை ஏற்படுத்துகிறது. அரிப்பினால் நீங்கள் சொரண்டும்போது, நீர்க்கட்டிகள்
உடைந்து துர்நீர் வெளியேறிவிடுகிறது; சொரண்டுவதால் மற்றொரு பலனும் ஏற்படுகிறது; சொரண்டுவதால்,
அடைபட்டிருக்கும் வியர்வைத் துவாரங்களின் அடைப்பு நீக்கப்படுகின்றன; இதைத்தான் “ஒரு
கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது” என்று சொல்லுவது.
7.
மேலும் உங்களுடைய உழைப்பு குறைகிறது மற்றும் அரோமணியின் 10 இயற்கை
விதிகளையும் (உழைப்புக்கு ஒரு விதி; ஆக மொத்தம் 11 விதி) மீறுகிறீர்கள்; ஆகவே கழிவுப்பொருட்களான, துர்நீர், வாயு, சளி, சிறுநீர்,
மலம் ஆகியவை அதிகமாகி தேங்கிவிடுகின்றன. உடனே உடலின் பராமரிப்பு சக்தி, தேங்கிய கழிவுப்பொருட்களை
வெளியேற்றுகின்றது; வெளியேற்றும்போது ஏற்படும் தொந்தரவுதான் மூக்கடைப்பு;; மூக்கில்
நீராக ஒழுகிறது. 4-வது விதியின்படி தாகம் எடுக்காமல், 2லி, 3லி என்று தண்ணீர் குடிக்கிறீர்கள்.
அதன் விளைவுதான் மூக்கில் நீராக ஒழுகுதல்.
8.
மூக்கடைப்பு ஏற்படுத்தும் மோசமான விளைவுகள்!
மூக்கடைப்பால், உள்ளே செல்லும்
காற்றின் அளவு குறைகிறது. காற்றுப் பாதைகளிலும், நுரையீரல்களிலும் காற்றின் அளவு குறைகிறது.
காற்று குறைவதால், அது எடுத்துவரும் வெப்பமும் குறைகிறது; தாகம் எடுக்காமல் நிறைய நீர்
அருந்துவதால், நீரின் அளவு கூடுகிறது; நீரின் அளவு கூடுவதால், குளிர்ச்சி அதிகமாகி
வெப்பத்தின் அளவு குறைகிறது. இவ்வாறு, மூன்று இயற்கை சக்திகளின் (Air, Heat,
Water) சரியான அளவும் மாறி குளிர்ச்சிதான் அதிகமாகிவிடுகிறது; குளிர்ச்சி அதிகரிப்பால்,
சளி இறுக்கமாக ஒட்டிக்கொள்கிறது; இதனால் நுரையீரல்கள் சுயமாக இயங்க முடியாத இறுக்க
நிலை ஏற்பட்டுவிடுகிறது. காற்றுப் பாதைகள்
சுருங்கிவிடுகிறது; இந்த இரண்டு சுறுக்கங்களும் சேர்ந்து காற்று சுயமாக, சரியான அளவு,
செல்ல முடியாத நிலை ஏற்படுவதைதான், மூச்சுத் திணறல், இளப்பு, ஆஸ்த்மா என்று சொல்கிறோம்.
9.
மூச்சுத் திணறல், இளப்பு,
ஆஸ்த்மா- குணப்படுத்தும் மிக மிக மிக எளிய சிகிச்சை முறை
10. மூச்சிறைப்பு, நெஞ்சில் சளி கட்டுதல், ஆஸ்த்மா
ஆகியவற்றிற்கு மிக மிக மிக எளிய மருந்தில்லா மருத்துவம் ஒன்றைச் சொல்லப் போகிறேன்.
மூன்று மிக போடுவதற்கு தகுந்தவாறு எளிமையானது. இதற்குத்தான், நீங்கள் எத்தனை
டெஸ்ட்கள், ஸ்கேன், எக்ஸ்ரே என்று எடுக்க வேண்டியதிருக்கு. எவ்வளவு நேரம்
காத்திருப்பு; எவ்வளவு பணச்செலவு. உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும்
எவ்வளவு துயரங்கள்!
11. மேற்கூறிய நோயுள்ளவர்கள், சளி துப்புவதற்கு ஒரு
குவளையை பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்தமான
புத்தகத்தை அல்லது அன்றைய செய்தித் தாளை எடுத்துக்கொள்ளுங்கள். சிறுபிள்ளைகள்
சத்தம் போட்டுப் பாடங்களைப் படிப்பது போல உரக்கச் சத்தம் போட்டுப் படியுங்கள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து சளி வர ஆரம்பிக்கும். வரக்கூடிய சளியை துப்புங்கள்.
அப்படி தொடர்ந்து படிக்கும்போது, சளியும் நீர் கலந்து இருமலுடன் தொடர்ந்து
வந்துகொண்டே இருக்கும். தேங்கியிருக்கும் சளியின் அளவுக்குத் தகுந்தாற்போல, முழு
சளியும் வெளியேறுவதற்கு அரை மணி நேரம் அல்லது கூட ஆகலாம். முழுச் சளியும்
வெளியேறிவிட்டால், மார்பில் உங்களை அழுத்திக் கொண்டிருந்த இறுக்கம் அல்லது
பிடிப்பு முழுவதும் நீங்கி சுலபமாக உங்களால் மூச்சு விட முடியும்.
12.
இது
எப்படி வேலை செய்கிறது?
வேகமாகச்
சத்தம் போட்டுப் படிக்கும்போது, காற்று வேகமாகச் உள்ளே செல்லுகிறது; சென்ற
காற்று,, காற்றுப் பாதையில் உள்ள உறுப்புகளின் செல்களில் உராய்வை ஏற்படுத்துகிறது;
உராய்வினால், வெப்பம் உற்பத்தியாகிறது. இந்த வெப்பத்தினால், நுரையீரல், மார்புப் பகுதிகளில்
ஒட்டிக் கொண்டிருக்கும் சளி பெயர்ந்து விடுகிறது. வேகமாகச் செல்லும் காற்றும்
வெப்பமும் இணைந்து இருமலைத் தோற்றுவிக்கிறது. இருமல் பெயர்ந்து கிடக்கும் சளியை
நீருடன் கொண்டுவந்து வாய் வழியாக வெளியேற்றுகிறது.. தொடர்ந்து வெளிவரும்பொழுது
மார்பு இறுக்கம் குறைந்து மூச்சு விடுவது சுலபமாகிவிடும்.
13. சளி உற்பத்தியை குறைக்காவிட்டால், தினசரி சத்தம்
போட்டுப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். அதற்குத்தான் அரோமணியின் 11 விதிகளையும்
தவறாது கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் சளி உற்பத்தியைக் குறைக்க முடியும்.
சளியின் தேக்கத்தால்தான் மூச்சிறைப்பு ஏற்படுகிறது; நெஞ்சில் சளி கட்டுகிறது,.
ஆஸ்த்மா வருகிறது. கிருமிகளால் நோய்கள் உண்டாவதில்லை என்பதை இனிமேலாவது நீங்கள்
நம்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
14.
பணம் செலவாகாத முக்கிய மருத்துவங்கள்
மூன்று!
ஆகவே நோய்கள் வரக்கூடாது
என்றால், அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் கடைப்பிடித்து, உடலை வலிமையாக்க வேண்டும்.
உடலில் வலிமை கூடும்போது, தேங்கிய கழிவுப்பொருட்கள் குறைந்துவிடும்; நோய்களும் குறைந்து
விடும்.
15.
நோய்கள் வந்துவிட்டால், அவைகளைக் குணப்படுத்த இரண்டு முக்கியமான
இரு பிரிவுகளில் மருத்துவங்கள் இருக்கின்றன. அவை: 1. மருந்து மருத்துவம் 2. மருந்தில்லா
மருத்துவம். அவற்றை இப்படியும் சொல்லலாம். ஒன்று பணம் செலவாகும் மருத்துவம், மற்றொன்று
பணம் செலவாகாத மருத்துவம்.
16.
மக்கள் பணம் செலவாகாத மருத்துவத்தைத்தான் விரும்புவார்கள் என்று
எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், பணம் செலவாகாத மருத்துவங்களைப் பற்றி புரிதல்
இல்லாததாலும், நோய்களின் தோற்றத்தைப்பற்றி விழிப்புணர்வு இல்லாததாலும் மக்கள் பணம்
செலவாகும் மருத்துவங்களை நாடிச் செல்கிறார்கள்.
17.
பணம் செலவாகாத, மருந்தில்லா மருத்துவங்களைப் பற்றித்தான், இப்பொழுது
இங்கு எழுதப் போகிறேன். பணம் செலவாகாத மருந்தில்லா மருத்துவங்கள் பல இருந்தாலும் அவற்றில்
முக்கியமான மூன்று மருத்துவங்களைப்பற்றி எழுதப்போகிறேன். அவைகள்தான் 1. இரட்டை மருத்துவம்
2. அக்குபங்சர் 3. ரீகி சிகிச்சை.
18. நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் கிடைக்க வேண்டுமா?
இரட்டை மருத்துவம்
(Twin Medicine) இரண்டு மருத்துவங்களைக் கொண்டது. அவை: 1. வாழும் தாய் மருத்துவம்
(Medicine of Living Mother-MLM) 2. மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம் (Medicine of
Medicinal Meditation). வாழும் தாய் மருத்துவம், அரோமணியின் 11 இயற்கை விதிகளை அடிப்படையாகக்
கொண்டு சிகிச்சை அளிக்கிறது. அவ்விதிகளை தவறாது கடைப்பிடிக்கும்போது, உடல் வலிமை பெற்று,
உடலில் தேக்கமுற்ற கழிவுகள் குறைந்துகொண்டே வரும்போது, நோய்களும் குறைந்து கொண்டே வரும்.
புதிய நோய்கள் தோன்றாது. இந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுக்காமல் வேறு எந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்தாலும்,
நோய்களை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியாது.
19.
இரண்டாவது மருத்துவம் மருத்துவ மனப்பயிற்சி மருத்துவமாகும்
(Medicine of Medicinal Meditation-MMM). இந்த மருத்துவம் மனதின் ஆற்றலைக் கொண்டு,
இரத்தத்தோடு இணைந்து சிகிச்சை அளிக்கிறது. ஐந்து மருத்துவ மனப்பயிற்சிகளைக்
{Medicinal Meditations) (மம)} கொண்டு, அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது.
20.
நோய்களுக்கு மருத்துவ மனப்பயிற்சிகளை சுலபமாகத் தேர்ந்தெடுத்து
சுயமாக சிகிச்சை செய்து கொள்ளலாம். நோய் வந்த உடனே சிகிச்சை செய்து அந்த நோயைக் குணப்படுத்தி
விடலாம்.
21. மருத்துவ மனைக்குள் நோயாளியாக நுழைந்து டாக்டராக வெளிவருகிறார்!
மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தோடு
(Medicine of Medicinal Meditation), முதல் மருத்துவம் வாழும் தாய் மருத்துவத்தையும்
(Medicine of Living Mother) இணைத்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது, மன அழுத்தம்,
செரிமானக் குறைவு, பசியின்மை, தூக்கக்குறைவு, மலச்சிக்கல், , தும்மல், மூக்கடைப்பு,
மூக்கில் நீராக ஒழுகுதல், மூக்கில் சதை வளருதல், சளி, காய்ச்சல், வாந்தி, ஆஸ்த்மா,
பல்லீரல் வலி, பல்வலி, ஒவ்வாமை, மூலம், ஆண்மைக்குறைவு,
பெண்மைக் குறைவு, உடல் பருமன் சர்க்கரை, இரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக், இருதய நோய்கள்,
சிறுநீரக செயலிழப்பு, கால் ஆணி, அரிப்பு, கற்கள், கட்டிகள், கேன்சர், பல்வேறு உடல் வலிகள், பெண்களுக்குரிய மனப்பிரச்சனைகள்,
மாதவிடாயில் ஏற்படும் பிரச்சனைகள், கர்ப்பகாலப் பிரச்சனைகள் மற்றும் அனைத்து நோய்களிலிருந்தும்,
நிரந்தரமாக நலம் பெறலாம்.
22.
மற்றொரு சிறப்பு அம்சம் இருக்கிறது. மருத்துவ மனைக்குள் நுழையும் நோயாளி வெளியில் வரும்போது
டாக்டராக வெளி வருகிறார். ஆம்! சிகிச்சையின்போது மம-வையும் கற்கிறார். அதாவது சிகிச்சையே
கற்பதாகிவிடுகிறது. ஆகவே, வீட்டிலிருந்தபடியே அனைத்து நோய்களுக்கும் அவர் சிகிச்சை
எடுத்துக்கொள்ளலாம். பிறருக்கும் சிகிச்சை அளிக்கலாம்.
23.
இம்மருத்துவத்தில் கிடைக்கும் நல்ல அனுபவத்தைக்கொண்டு, தற்பொழுது
வாழும் கற்பனை வாழ்க்கையிலிருந்து கவன வாழ்க்கைக்கு மாறுவது சுலபம். கவன வாழ்க்கையில்
நீங்கள் இந்தப் பூமியில் சொர்க்கத்தைக் காண்பீர்கள்.
24. ஐந்து பஞ்ச பூத ஆற்றல்களா! அப்படின்னா என்ன?
அக்குபங்சர் (Acupuncture)
இது சீன மருத்துவம். ஐந்து பஞ்ச பூத ஆற்றல்கள் ஐந்து மூலகங்களாகும் (Five elements).
அவைகள்: 1. நெருப்பு 2. நிலம் 3. காற்று
4. நீர் 5. ஆகாயம் அல்லது மரம். அந்த ஐந்து மூலகங்களுக்கும் 12 உள்ளுறுப்புகள் இருக்கின்றன.
அவைகள்: இருதயம் (Heart), சிறுகுடல் Small intestine), இருதய வெப்ப மேலுறை (Peri
cardium), மூவெப்ப மண்டலம் (Trible energiser), மண்ணீரல் (Spleen), இரைப்பை (Stomach),
நுரையீரல் (Lungs), பெருங்குடல் (Large intestine), சிறுநீரகம் (Kidney), சிறுநீர்ப்பை
(Urinal bladder), கல்லீரல் (Liver), பித்தப்பை (Gall bladder),
25.
உங்களது தோலின் மேல் பகுதியில் மேற்குறிப்பிட்ட உள்ளுறுப்புகளை
இணைக்கும் 12 சக்தி நாளப் பாதைகளிருக்கின்றன (Energy channels). ஒவ்வொரு சக்தி நாளப்
பாதையிலும், மேற்கூறிய ஐந்து மூலகப் புள்ளிகள் அமைந்துள்ளன. ஆக, 12 சக்தி நாளப் பாதைகளிலும்
சேர்ந்து மொத்தம் 60 மூலகப்புள்ளிகள் இருக்கின்றன. இந்த அண்டத்தின், ஐந்து பஞ்ச பூத
ஆற்றல்கள் உடலின் தோல் வழியாகச் செல்லும் 12 சக்தி நாளப் பாதைகளில், 60 மூலகப்புள்ளிகள்
வழியாக 12 உள்ளுறுப்புகளுக்கு சென்று அவ்வாற்றலைக்
கொடுத்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
26. ஐந்து நொடிகளில் சிகிச்சை அளிக்கும் அதிசய மருத்துவம்!
அரோமணியின் 11 இயற்கை விதிகளை
நீங்கள் மீறும்பொழுது, அக்குபங்சர் சிகிச்சையில் குறிப்பிட்ட 12 உள் உறுப்புக்களில்
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகள் பழுதாகி, அந்த உறுப்புக்களுக்குத் தொடர்புள்ள
பஞ்சபூத ஆற்றல்களின் ஓட்டம் தடைபட்டு விடுகிறது. அதனால் அவ்வுறுப்புகளில் தடைபட்ட பஞ்சபூதங்களின்
ஆற்றல் குறைவு ஏற்படுகிறது. அதனால் உங்கள் உடல் பலவீனமாகி, கழிவுப்பொருட்கள் தேங்கிவிடுகின்றன.
நோயாளியின் கை நாடிப் பிடித்துப் பார்க்கும்போது, எந்த இரண்டு மூலக ஆற்றல் குறைபாடு
என்பதைக் காட்டுகிறது. அந்த இரண்டு மூலகங்களுக்குறிய புள்ளி ஒன்றை 12 சக்தி நாளப் பாதைகளில்
கண்டுபிடித்துத் தொடுவதின் மூலம் அடைபட்ட புள்ளி திறக்கும்படியாகத் தூண்டப்படுகிறது.
அதற்கு ஐந்து நொடிகள் போதும். திறந்த புள்ளி வழியாக தடுக்கப்பட்ட அண்டத்தின் ஆற்றல்
அந்த சக்தி நாளப்புள்ளி வழியாகப் பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்குச் சென்று, ஆற்றலை அளித்துப்
பழுதைச் சரி செய்கிறது. எப்படி சரி செய்கிறது? முதலில் தேக்க முற்ற கழிவுப் பொருளை
நோயாளியின் உடலை விட்டு வெளியேற்றுகிறது. கழிவுப் பொருட்களின் வெளியேற்றத்துக்குப்
பிறகு, செல்கள் அண்ட ஆற்றலால் நிரப்பப்படுகிறது.
நோயாளி நலமடைகிறார். நோயாளி சொல்லும் நோய்களின் தொந்தரவுகளை கேட்டும் ஆற்றல்
குறைவைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம்.
27. பாமரனும் கற்று பயன்படுத்தும் மருத்துவம்!
ரேகி (Reiki) சிகிச்சை முறை:
இது ஜப்பானிய சிகிச்சை முறை. இந்த முறையில் அண்ட ஆற்றலை இரு கைகளிலும் பெற்று, நோயினால்
பாதிக்கப்பட்ட இடத்தில் இரு கைகளையும் வைத்து, ஆற்றலைக் கொடுத்து நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.
28.
ரீகியின் தாரக மந்திரங்கள்: முதலில் உன்னைக் குணப்படுத்திக்
கொள்; கஷ்டத்திலிருக்கும் மனித இனத்தை குணப்படுத்து; செடிகொடிகளையும், பிரியமான வளர்ப்புக்களையும்,
மிருகங்களையும்,, இந்தப் பூமி, ஆகாயம், மற்றும் நீரிலுள்ள அனைத்து உயிரினங்களையும்
குணப்படுத்து; இந்த உலகத்தைக் குணப்படுத்து; கோள்களை குணப்படுத்து; இந்த அண்டத்தைக்
குணப்படுத்து. ரீகி மிகவும் சக்திவாய்ந்தது மற்றும் அதிசயமானது. தனிப்பட்டவர் மற்றும்
உலகளாவிய மாற்றத்திற்கு ஒரு பாதை.
29. நோய்கள் மற்றும் அவற்றைக் குணப்படுத்திய வரலாறு.
நான் எழுதப் போகும் மூலக்
கருத்துக்கு, எனது நோய்கள் மற்றும் அவற்றை குணப்படுத்திய வரலாறும் சொல்லும்போதுதான்
அந்த மூலக் கருத்து வலுப்பெறும்,
30.
கனவு கண்டபடி படிப்பு, வேலை கிடைத்தது! ஆனால் மகிழ்ச்சி இல்லை!
படிப்பை முடித்துவிட்டு,
1969-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வேலையில் சேர்ந்தேன். அன்றையிலிருந்து 1. முகப்பொக்கலங்கள்,
2. கழுத்துப் பகுதி மற்றும் தோல்ப்பட்டை களில் உள்ள நரம்புகள் சுண்டி இழுத்தலால் ஏற்படும்
பயங்கரவலி (ஒரு நாளைக்கு நாலைந்து முறை), 3 வயிற்றோட்டம், 4. வயிற்றுக் கடுப்பு, 5.
சாப்பிடும்போது உதடுகளைக் கடித்துக் கொள்ளுதல், 6. புருவங்களில் கட்டிகள், 7. கண்களில்
கண்கட்டிகள் தோன்றுதல், 8. கன்னங்களில் பொக்கலங்கள் தோன்றுதல், 9. பல் கூச்சம், 10.
பல் வலி, 11. பல்லீரல் வலி, 12. நாக்கில் புண், 13. வாயில் புண் 14. பற்காரை, 15. பற்சொத்தை,
16. வாய்த்துற்நாற்றம், 17; சளி,
18. இருமல், 19. மூக்கில் நீராக ஒழுகுதல், 20. மூக்கடைப்பு, 21. மூக்கில் சதை வளர்ச்சி,
22.மூச்சுத் திணறல், 23. ஆஸ்த்மா, 24. ஒற்றைத் தலைவலி, 25. மலச்சிக்கல், 26. அரிப்பு, முதலிய நோய்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன்.
இவ்வளவு நோய்களா என்று நீங்கள் வியக்கலாம்! 10 வயதில் எனக்கு இடதுகால் ஊனம் ஏற்பட்டது.
அதனால் எனது உடலுழைப்பு வரையறுக்கப்பட்டது; அதனை அதிகரிக்க முடியாது. உடலுழைப்புக்
குறைவினால் கழிவுப்பொருட்களின் தேக்கம் அதிகமாகிவிட்டது. அதனால், அதிக நோய்கள் தோன்றலாயின.
நோய்களைக் குணப்படுத்துவதும் தாமதமானது.
31.
எனது நோய்களை வைத்து ஆராய்ச்சி செய்து, அதன் கண்டுபிடிப்புகளை
எனக்கு வெளிப்படுத்தி. மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்காகவே என்னை ஊனமாகப் படைத்தானோ
இறைவன் என்ற எண்ணம் சமீபகாலமாக வந்துகொண்டே இருக்கிறது.
32.
1984-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி எனது வாழ்வில் மறக்க முடியாத
நாள்!
மூக்கில் தோன்றிய சதை வளர்ச்சி
(Nasal polyp) மூக்கினால் மூச்சுவிடுவதை முழுவதுமாக நிறுத்திவிட்டது. அதன் பிறகுதான்
1979 ஆண்டு அறுவை சிகிச்சை செய்து சதை அகற்றப்பட்டது. மூன்று ஆண்டுக்குள் மீண்டும்
சதை வளர்ச்சி ஏற்பட்டு 1982-ல் அறுவை சிகிச்சை செய்து, வளர்ந்த சதை அகற்றப்பட்டது.
எனது உடலின் மிகவும் மோசமான நிலையில், 1984-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மகான் மகரிஷி
மகேஷ் யோகியின் ஆழ்நிலைத் தியானம் (Transcendental Meditation) கற்று தவறாது பயிற்சி
செய்து வந்தேன். எனது ஆன்மீகப் பவர் அதிகரித்ததால், எனது மனவளம் அதிகரித்து அறியாமை
அகன்றுகொண்டே வந்தது.
33.
இந்த தியானத்தின் பலனாக, 10 ஆண்டுகள் கழித்து, 1992-ல் மூன்றாவது
தடவையாக, மூக்கில் வளர்ந்த சதை அறுத்து அப்புறப்படுத்தப்பட்டது. தூத்துக்குடி அனல்மின்
நிலையத்தின் புகை மற்றும் தூசி எனது மூக்கின் சதை வளர்ச்சியை விரைவு படுத்தியது. ஆகவே
மூக்கடைப்பு முழுமையாக இருந்ததால், 1993-ஆம் ஆண்டு சூன் மாதம் நான்காவது முறையாக வளர்ந்த
சதை அறுத்து எறியப்பட்டது. தொடர்ந்து செய்த ஆழ்நிலைத்தியானத்தினால், மனவளம் அதிகமானது.
அறியாமை குறைந்தது. ஆன்மீக ஆற்றல் கூடியது. நோய்களின் தீவிரம் குறைந்தது.
34. பதினாறு நோய்களிலிருந்து சட்டென்று விடுபட்டேன்!
ஆன்மீக ஆற்றலின் அதிகரிப்பால்,
4-12-1993-ந் தேதி அன்று மதியச் சாப்பாட்டின்போதுதான் இறைவன் அரோமணியின் முதல் இயற்கைவிதியை
வெளிப்படுத்தினான். அந்த விதியும் அரோமணி தொழில் நுட்பமும் சேர்ந்து அளவாகச் சாப்பிடுவதை
வலியுறுத்துகிறது. அன்றையிலிருந்து வயிற்றின் அளவு மிகாமல் சாப்பிட்டு வந்தேன்.
35.
அதன் பலன் பல வியாதிகளிலிருந்து “1. முகப்பொக்கலங்கள், 2. கழுத்துப்
பகுதி மற்றும் தோல்ப்பட்டை களில் உள்ள நரம்புகள் சுண்டி இழுத்தலால் ஏற்படும் பயங்கரவலி
(ஒரு நாளைக்கு நாலைந்து முறை), 3 வயிற்றோட்டம், 4. வயிற்றுக் கடுப்பு, 5. சாப்பிடும்போது
உதடுகளைக் கடித்துக் கொள்ளுதல், 6. புருவங்களில் கட்டிகள், 7. கண்களில் கண்கட்டிகள்
தோன்றுதல், 8. கன்னங்களில் பொக்கலங்கள் தோன்றுதல், 9. பல் கூச்சம், 10. பல் வலி,
11. பல்லீரல் வலி, 12. நாக்கில் புண், 13. வாயில் புண் 14. பற்காரை, 15. பற்சொத்தை,
16. வாய்த்துற்நாற்றம்,” விடுபட்டேன்.
36.
மூக்கில் சதை வளர்ச்சி (Nasal polyp) நின்றுவிட்டது. அது எனக்குப்
பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. 1996-ஆம் ஆண்டு ஆழ்நிலைத் தியானத்தின் மேல்நிலைப் பயிற்சியான ‘சித்திப் (Siddi)’ பயிற்சியை கற்று விடாமல் காலை
மாலை இருவேளையும் செய்து வந்தேன். மனவளம் பல மடங்கு அதிகரித்தது. அறியாமையும் பல மடங்கு
குறைந்தது. ஆன்மீக ஆற்றலும் பல மடங்கு அதிகரித்தது.
37. பழங்களைச் சாப்பிடும் புதிய முறை!
பச்சைக் காய்கறிகளையும்
பழங்களையும் சாப்பிட வைத்து ஆராய்ச்சி செய்து, அரோமணியின் இரண்டாவது இயற்கை விதியை
10-3-1997 அன்று வெளிப்படுத்தினான். அந்த விதி ‘இயற்கை உணவு நோய்களைத் தருகிறது’ என்று
கூறுகிறது. அன்றையிலிருந்து பழங்களை இடலிப் பானையில் ஆவியில் இரண்டு மூன்று நிமிடங்கள்
வேகவைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தேன். ஏனென்றால், பச்சைக்களி மண்ணை சுட்டவுடன்,
சக்தி வாய்ந்த சுட்ட செங்கலாக மாறுவதைப் போல,, வேகவைத்த பழங்கள் சக்தி மிகுந்தவையாக
மாறுகின்றன. அதன் பலன் ஒவ்வாமை நோய்களான சளி, இருமல், மூக்கில் நீராக ஒழுகுதல் ஆகியவை
அடக்கி வாசித்தன. கூட்டுத் தியானங்களை நானே ஏற்பாடு செய்து அதை நடத்தி, தவறாது கலந்துகொண்டு
வந்தேன். மேலும் மனவளம் அதிகரித்தது. அறியாமையும் விலகிக் கொண்டு வந்தது. ஆன்மீக ஆற்றலும்
கூடிக்கொண்டு வந்தது.
38. உணவின் டெம்பரேச்சர் எவ்வளுவு இருக்க வேண்டும்?.
3-11-1997 அன்று இறைவன்
மூன்றாவது விதியை வெளிப்படுத்தினான். மூன்றாவது விதி “உணவின் வெப்ப நிலை (Temperature)
உங்களது உடலின் டெம்பரேச்சரான 37 டிகிரி செண்டிகிரேடு வெப்பநிலைக்குச் சமமாக இருக்க
வேண்டும்” என்று கூறுகிறது. அதாவது உணவை மெல்லும்போதும், விழுங்கும்போதும் சூடாகவோ
குளிர்ச்சியாகவோ உணரக்கூடாது. இவ்விதியின்படி, பொறுமையாக உணவை ஆறவைத்துத்தான் (37
டிகிரி செண்டிகிரேடு) சாப்பிடுவேன். தொடர்ந்து சாப்பிட்டு வரவும், மேலே குறிப்பிட்ட
நோய்களின் தீவிரத் தன்மை குறைந்து கொண்டே வந்தது. தொடர்ந்து செய்து வந்த ‘சித்திப்’
பயிற்சியினால், மனவளம் பெற்றேன்; அறியாமையும் குறைந்தது; ஆன்மீக ஆற்றலும் அதிகரித்தது.
39.
நீர் நிறைய அருந்தலாமா! எவ்வளவு அருந்தலாம்!
20-11-1997 ஆம் ஆண்டு ஆண்டவன்
நான்காவது விதியை வெளிப்படுத்தினான். நான்காவது விதி “தாகம் எடுத்த பிறகுதான் தண்ணீர்
குடிக்க வேண்டும் “ என்பதை வலியுறுத்துகிறது. தாகம் தீரும்வரை எவ்வளவு குடிகிறோமோ அதுதான்
அளவு. அன்றையிலிருந்து தாகம் எடுத்த பிறகு தண்ணீர் குடித்து வந்தேன். முதல் நாளிலே
எனக்கிருந்த ஆஸ்த்மாவிலிருந்து விடுபட்டேன். மூக்கில் சளியும், மூக்கடைப்பும், மூக்கில்
நீராக ஒழுகுதல் இருந்து கொண்டுதானிருந்தது. அதற்குக் காரணம் எனது மூக்கு வளைந்திருந்ததுதான்.
எனக்கு நான்காவது முறையாக மூக்கில், அறுவை சிகிச்சை செய்து வளர்ந்த சதையை அப்புறப்படுத்திய
மறுநாள் சூனியர் டாக்டர் ஒருவர் எனது மூக்கை சுத்தப்படுத்திய பொழுது “ உங்களது மூக்கு
வளைந்திருக்கிறது; சதையை அறுத்து அப்புறப்படுத்தும்
போது, வளைவையும் நிமிர்த்தியிருக்க லாமே! அதை ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை! அதனால்,
தொடர்ந்து சளி பிடிக்கத்தான் செய்யும், சதையும் வளரத்தான செய்யும்” என்றார். தொடர்ந்து
விடாமல் “சித்தி”ப் பயிற்சியை செய்துவந்தேன். மனவளம் பெருகியது; அறியாமை அகன்றுகொண்டே
வந்தது. ஆன்மீக ஆற்றலும் பெருகியது.
40. மூக்குச் சிந்தும்போது மூக்கை வளைக்காதீர்கள்!
12-12-2000-ஆம் ஆண்டு எல்லாம்
வல்ல இறைவன், எனக்கு மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தை (மமம) வெளிப்படுத்தினான். எனது
நோய்கள் முழுவதும் குணமாகாத நிலையில், 2007 ஆம் ஆண்டு சூன் மாதம் அறுவை சிகிச்சை செய்து
வளைந்த மூக்கு சரி செய்யப்பட்டது. அதற்குப் பிறகு எனக்கு மேற்கூறிய தொந்தரவுகள் வெகுவேகமாகக்
குறைந்தது. நோய்கள் வருவதைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை. ஆகவே உணவில் கழிவில்லாமல்
அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்தேன். நோய்கள் வெளிப்பட்டாலும், மம- செய்து அவற்றைக்
குணப்படுத்திவிடுவேன்.
41.
ஆனால் குளிர்காலத்தில் மட்டும், தும்மல், மூக்கடைப்பும், மூக்கில்
நீராக ஒழுகுதல், இளப்பும் (Wheezing) இருந்து கொண்டே இருந்தது. அதற்கு மருந்து மாத்திரைகள்
எடுத்துக் கொண்டேன். மனவளம் அதிகரித்து, அறியாமை குறைந்து, ஆன்மீக ஆற்றல் பெருகியதினால்,
இறைவன் வெளிப்பட்டு, அவன் எனது நோய்களின் பால் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகளாக 5-வது,
6-வது விதிகளை முறையே 12-7-2005- மற்றும் 14-11-2005- தேதிகளிலும் வெளிப்படுத்தினான். 5-வது
விதி, பசி எடுத்த பிறகு சாப்பிட வலியுறுத்துகிறது. இதைக் கடைப்பிடித்தவுடன் எனக்கிருந்த
நோய்களிலிருந்து குணமடைவதில் முன்னேற்றம் கண்டேன்.
42.
6-வது விதி மலம் முழுவதும் வெளியேறிவிட்டதை உறுதிசெய்ய வலியுறுத்துகிறது. இதைக கடைப்பிடித்தவுடன்,
செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், ஒற்றைத் தலைவலி, சளிப்பிடித்தல், காய்ச்சல், பசியின்மை,
காற்றடித்துக்கொண்டிருந்தாலும் வியர்த்தல், சோம்பல், உடல் சூடாக உணருதல், முதலிய நோய்களிலிருந்து
நலம் பெறுவதில் முன்னேற்றம் ஏற்பட்டது.
43. எந்தக் கவலையும் என்னிடம் நீண்ட நேரம் இருப்பதில்லை!
15-2-2006-ந் தேதியன்று
இறைவன் கவனவாழ்க்கை என்னும் புதிய வாழ்க்கைக்கு என்னை மாறச் செய்தான். இந்த வாழ்க்கையில்,
கற்பனை செய்வதையும், திட்டமிடுவதையும், யோசித்து முடிவெடுப்பதையும் இல்லாமல் செய்துவிட்டான்.
அதனால் எந்தக் கவலையும் என்னிடம் நீண்ட நேரம் இருப்பதில்லை. எனது மனம் எப்பொழுதும்
தெளிவாக இருந்தது. எந்த நோய் வந்தாலும், அதன் காரணம் உடனே தெரிந்து விடும். சுற்றுப்புற
சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் எனக்குச் சாதகமாக மாற ஆரம்பித்தன்.
44.
7-வது விதியை 6-3-2011-அன்று இறைவன் எனக்கு வெளிப்படுத்தினான்.
அன்று இளப்பு சட்டென்று விலகியது. அந்த விதி, தூங்கும் அறையில் நல்ல காற்றோட்டத்தின்
அவசியத்தை வலியுறுத்துகிறது. கொசுவத்தி, கொசு வலை பயன்படுத்துவதைத் தடை செய்கிறது.
இந்த விதிகளைக் கடைப்பிடித்த பிறகு 15, டிசம்பர், 2008 லிருந்து குளிர்காலத்தில் இளப்புக்கு
மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். விதிகளை மீறும்பொழுதெல்லாம், சளித்தொந்தரவுகள்
தோன்றின. அப்பொழுதெல்லாம், மருத்துவ மனப்பயிற்சிகளைச் (மம) செய்து அவற்றை சரி செய்துவிடுவேன்.
45. பகலில் தூங்கலாமா வேண்டாமா!
8-வது விதியை 13-6-2013
அன்று இறைவன் வெளிப்படுத்தினான். அதனை நடைமுறைப்படுத்தியவுடன் பகலில் எனக்கிருந்த சோர்வு,
அதனால் ஏற்பட்ட பலவீனம் அதைத் தொடர்ந்து வரும் நோய்கள் ஆகியவற்றிலிருந்து நலம் பெற்றேன்.
இந்த விதி பகலில் தூங்குவதை தடை செய்கிறது.
46.
9-வது விதியைக் கடைப்பிடித்தவுடன், ஒவ்வாமையிலிருந்தும், அதைத்தொடர்ந்து
வரக்கூடிய சளித் தொந்தரவுகளிலிருந்து விடுபட்டேன். 9-வது விதி உடலிலுள்ள துவாரங்கள்
அடைபடாமலிருக்க வலியுறுத்துகிறது.
47.
இப்பொழுது மிகவும் முக்கியமான ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஒரு
மிக முக்கியமான கண்டுபிடிப்பு கண்டுபிடிக்காததால், எனக்கு எடை கூடவில்லை. எந்த நோய்
வந்தாலும், மம-வைக் கொண்டு குணப்படுத்தி விடுவேனே தவிர எனது எடையைக் கூட்ட முடியவில்லை.
பசி குறைவாக இருந்தது; மலச்சிக்கல் இருந்தது; சோர்வு இருந்தது; சோம்பேறித்தனம் இருந்தது.
உடல் பலவீனத்தையும் என்னால் உணர முடிந்தது. ஆனால் காரணம் தெரியவில்லை.
48.
உடலின் செல்களின் சேமிப்பிலிருந்து ஆற்றலை எடுக்கலாமா வேண்டாமா!
.5-10-2019-ந் தேதி அன்றுதான்
எனக்கு, இறைவன் அரோமணியின் 10-வது இயற்கை விதியை வெளிப்படுத்தினான். அந்த விதியைக்
கடைப்பிடித்தவுடன் தான் என்னுடைய செரிக்காமை, பசி எடுக்காமை, மலச்சிக்கல், சோர்வு முதலிய
உடல் நலக்குறைவுகள் சரி செய்யப்பட்டன. அதிகமாக சாப்பிட முடிந்தது; சுறுசுறுப்பாக இயங்க
முடிந்தது. உடல் வலிமையாகி வருவதையும் என்னால் உணர முடிந்தது.
49.
10-வது விதியின்படி உழைப்பிற்கு, நடைப்பயிற்சிக்கு உடலின் செல்களின்
சேமிப்பிலிருந்து ஆற்றல் செல்லக் கூடாது. அதற்கு காலையிலும் மதியமும் சாப்பிட்ட பிறகு
மேற்கூரிய செயல்களைச் செய்ய வேண்டும். எனது உடல் நீண்ட நாட்கள் தேறாமலிருந்ததற்கு,
நான் வெறும் வயிற்றில் இருவேளையும் நடைப்பயிற்சியை மேற்கொண்டதுதான். ஆகவே அந்த நடைப்பயிற்சிக்குத்
தேவையான ஆற்றலை, உடலின் செல்கள், அவைகள் சேமித்து வைத்த ஆற்றலிலிருந்து வழங்கி வந்திருக்கிறது.
சேமிப்புக் குறைந்ததால் எனது உடல் பலவீனமாகவே இருந்திருக்கிறது. வங்கியின் சேமிப்பு
கணக்கிலிருந்து பணம் எடுத்தால், பொருளாதாரம் உயருமா அல்லது குறையுமா!
50.
அரோமணியின் 11-வது இயற்கை விதி, காலை, மாலை இருவேளையும் 20 நிமிட
நேர மருத்துவ மனப்பயிற்சி (Medicinal Meditattion) செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
நான் இதைத் தனியாகச் செய்வதில்லை. எனது நோய்களைக் குணப்படுத்துவதற்காக செய்யும் மருத்துவ
மனப்பயிற்சிகளே போதுமானதாக இருந்தது.
51. மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில்லை!
2014-ஆம் ஆண்டு நவம்பர்
கடைசிவாரம்தான் நான் அக்குபங்சர் சிகிச்சை பயிற்சியில் 5 நாட்கள் பயிற்சி எடுத்துக்
கொண்டேன். 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் எனக்கு நானே அக்குபங்சரிலும் எனக்குள்ள
நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். 2016-ம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகமும்,
கம்பம் அகடமி ஆப் அக்குபங்சரும் சேர்ந்து நடத்திய அக்குபங்சர் ஓராண்டு கோர்சில் சேர்ந்து
படித்து டிபளமோ பட்டயம் பெற்றேன்.
52.
நோய்கள் வராமலிருக்க முடியாது. அரோமணியின் 11 இயற்கை விதிகளில்
எதை ஒன்றை மீறினாலும் நோய்கள் வரத்தான் செய்யும். அதோடு தொழில் ரீதியாக ஏற்படக் கூடிய
பலவீனங்களால் நோய்கள் வரத்தான் செய்யும். நான் தினசரி எட்டு மணி நேரத்திற்குக் குறையாமல்
கம்ப்யூட்டரில் வேலை செய்கிறேன். அதனால் எனது உடல் பலவீனமாகி, கழிவுப்பொருட்களின் தேக்கம்
அதிகமாகும்போது நோய்கள் தோன்றத்தானே செய்யும்! அவ்வாறு தோன்றும்பொழுதெல்லாம், மருத்துவ
மனப்பயிற்சிகளின் மூலமாகவும், அக்குப்பங்சர் மூலமாகவும் சிகிச்சை எடுத்துக் கொண்டு
எனக்கேற்படும் நோய்களைக் குணப்படுத்தி விடுவேன். மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது
கிடையாது.
53. தொலைத்த ஒன்றை 20 ஆண்டுகள் கழித்து மீட்டெடுத்தேன்!
54.
t9-8-1998 ஆண்டிலேயே ரீகி சிகிச்சை முறையை கற்றுக்கொண்டேன்.
அப்பொழுது நான் அரோமணியின் நான்கு இயற்கை விதிகளை மட்டும் கண்டுபிடித்து, அவற்றை நடைமுறைப்படுத்தி
வந்தேன். மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தையும் அறிந்திராத காலம். ஆகவே சளிக்கும்,
இளப்புக்கும் மருந்து மாத்திரைகளைத்தான் எடுத்துக் கொண்டு வந்தேன். அதனால் மிகவும்
நெருக்கடியாக இருக்கும நேரங்களில் ரீகி சிகிச்சையால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
அலுவலகத்தில் எனக்கு ஏற்பட்ட சோதனைகளால், இறைவனின் செயலால், அச்சிகிச்சையை தொடராமல்,
விட்டு விட்டேன். காலப்போக்கில் அதை இறைவன் மறக்கடிக்கச் செய்தான்.
55.
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு நாள் காலை நேரத்தில்,
பல்வலி எடுக்கவும், என்னையறியாமல் பல் வலியிருக்குமிடமான இடது கன்னத்தில் கை வைத்தேன்.
பல் வலி குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து 10 நிமிடங்கள் வைத்திருந்தேன். பல் வலி முற்றிலுமாகக்
குணமாகிவிட்டது. உடனே எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இறைவன், என்னிடமிருந்து
எடுத்த ரீகி ஆற்றலை மீண்டும் தந்துவிட்டான். அதுவும் முக்கியமான நேரத்தில், தேவைப்பட்ட
நேரத்தில் கிடைக்கச் செய்தான். அது எப்படி என்பதை விளக்குகிறேன்.
56.
எனது இடது கால் ஊனமானதால், 75 ஆண்டுகளாக எனது உடலின் முழு எடையையும்
வலது கால் தாங்கி வந்ததால், வலது கால் மூட்டில் வலி எடுக்க ஆரம்பித்துவிட்டது. அதனால்
எனது நடமாட்டம் குறைந்து விட்டது. இது எனக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. இறைவன்
எனக்கு பணித்த பணியை முடிக்காமலே போய்விடுவோமோ என்ற கவலை என்னை மிகவும் நொந்து போகும்
நிலைக்குக் கொண்டு சென்றது. “மீண்டும் பழைய நடை வருமா!” என்ற ஏக்கப் பயம் வந்துவிட்டது.
57.
மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சையைத்
தவிர்த்தேன்!
இரட்டை மருத்துவத்தை மக்களிடையே
எடுத்துச் சென்று, அதன் மூலம் கவனவாழ்க்கையை வாழச்செய்து. இப்பூமியில் மக்கள் சொர்க்கத்தைக்
காணச் செய்வதுதான் இறைவன் எனக்குப் பணித்தப் பணி. இந்த சூழ்நிலையில்தான், நான் இழந்த
‘ரீகி’ ஆற்றலை (ஜப்பான் சிகிச்சை முறை) அவன்
எனக்குக் கிடைக்கச் செய்து மகிழ்ச்சியில் திளைக்கச்
செய்தான். எனது குடும்பத்தார் என்னை மூட்டு அறுவைச் சிகிச்சை செய்ய வற்புறுத்தினார்கள்.
என் கைவசம் அன்றைய தேதியில் மூன்று மருத்துவங்கள் இருந்தன. அவை: இரட்டை மருத்துவம்
(அரோமணியின் 11 இயற்கை விதிகளடங்கிய வாழும் தாய் மருத்துவம் மற்றும் மருத்துவ மனபயிற்சி
மருத்துவம்), அக்குபங்சர் மருத்துவம் மற்றும் ரீகி ஆற்றல் மருத்துவம் (ஜப்பான் சிகிச்சை
முறை). ஆகவே நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பவில்லை. எனவே, அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுத்து விட்டேன்.
58.
மூட்டு வலிக்கு ஒரே நேரத்தில்
நான்கு மருத்துவங்கள்!
என் கைவசம் அன்றைய தேதியில்
மூன்று மருத்துவங்கள் இருந்தன. மூட்டு வலியிலிருந்து விரைவில் குணமடைய ஆயுர்வேத மருந்தையும்
(மாத்திரைகள் மற்றும் காலுக்குத் தேய்க்கும் தைலம்) சேர்த்துக்கொண்டேன். வாரத்துக்கு
ஒரு தடவை அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்வேன். தினசரி காலையிலும் மாலையிலும் 15 நிமிடங்கள் மூட்டு மற்றும்
காலின் கீழ்ப்பகுதி வரை ரீகி ஆற்றலைக் கொடுத்தேன். அது முடியவும் 15 நிமிடங்கள் காலுக்குத்
தைலம் தேய்க்கும்போதே தேய்ப்பதில் கவனத்தைச் செலுத்தி, மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தையும்
சேர்த்துக் கொண்டேன்.
59.
ஓராண்டு காலமாக இவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொள்ளவும், மூட்டு
வலி குறைந்துகொண்டே வந்தது. எனது நடையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. மாத்திரைகள் எடுப்பதை
மூன்று வேளையிலிருந்து இரண்டு வேளையாகக் குறைந்தது. காலையில் மட்டும் தைலத்தோடு மருத்துவ
மனபயிற்சியைச் சேர்த்து அரை மணிநேரம் செய்து வந்தேன். இப்பொழுது வலி குறைந்து விட்டதால்,
மூட்டில் மட்டும் தைலம் தேய்த்து வருகிறேன்.
60.
செயற்கை பற்கள் மேலேயும் கீழேயும் பொருத்தி ஏழாண்டுகள் ஆகிவிட்டதால்,
பல் வலி, ஈரல் வலி இருந்து கொண்டிருந்தது. கம்ப்யூட்டரை அதிகம் பயன்படுத்துவதால், கண்களின்
ஆற்றலை அதிகரிக்கும் அவசியமும் இருந்தது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், ஏழாண்டுகள்
மோட்டார்களின் சத்தத்தில் பணி செய்ததால், காதுகளின் ஆற்றலும் குறைந்திருந்தது. ஆகவே
அதனுடைய ஆற்றலையும் அதிகரிக்க வேண்டியதிருந்தது. அதற்கு ‘’ரீகி’’ ஆற்றனலை பயன்படுத்தினேன்.
61.
இடது கையினால் நோய்களை குணப்படுத்தினேன்!
மூட்டு வலியைக் குணப்படுத்த,
காலையில், மூட்டில் வலது கையினால் தைலம் தேய்க்கும்போது, மனம் மருத்துவ மனபயிற்சி கிகிச்சையை
மேற்கொள்ளும்.. இடது கை சும்மா இருந்ததால், அதை உபயோகமாகப் பயன்படுத்த விரும்பினேன்.
அதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம் அல்லவா!. தைலம் தேய்க்கும் நேரத்தில், 10 நிமிடங்கள்
இடது கையால் வாயைப் பொத்தியும், 10 நிமிடங்கள் கண்களைப் பொத்தியும், 10 நிமிடங்கள்
ஒரு காதுக்கு 5 நிமிடங்கள் வீதம் இரண்டு காதுகளையும் 10 நிமிடங்கள் பொத்தியும் ‘ரீகி’
ஆற்றலைக் கொடுத்தேன். நான் வியக்கும்படியாக, பல் வலி, ஈரல் வலி இல்லாமல் உணவு சாப்பிட
முடிந்தது. கண்களின் பார்வையில் ஒரு தெளிவு தெரிந்தது. ‘THE HINDU’ ஆங்கில நாளிதலைப்
படித்து வருகிறேன். காதுகளின் ஆற்றல் அதிகரித்ததை அறிய முடிந்தது.
62.
கண்களுக்கு ரீகி ஆற்றல் கொடுக்கும்போதே மூக்கிற்கும் ஆற்றல்
கிடைத்து விடுகிறது. அதனால், மூக்கடைப்பும் இல்லாமல் போய் விட்டது.
63. வங்கியில் (Bank) நோயைக் குணப்படுத்தினேன்!
காது, மூக்கு, தொண்டை என்று
சொல்லும்படியாக, ‘ENT’ என்ற வார்த்தை மிகவும் பிரபலமானது. ஆகவே எனக்கு தொண்டையும் ஞாபகத்திற்கு
வந்தது. ஏற்கனவே, “இறைவன் வடிவமைத்த மருத்துவம்” என்ற எனது கட்டுரையில் எப்போதாவது,
சாப்பிடும்போது “புரை” உண்டாவதையும், அதை மருத்துவ மனபயிற்சியைக் கொண்டு குணப்படுத்திக்கொள்வதையும்
தெரிவித்திருந்தேன். ஆகவே தொண்டைக்கு ‘ரீகி’ ஆற்றலைக் கொடுத்து “புரை ஏறுதல்” குறைபாட்டை
நிவர்த்தி செய்தால் என்ன? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கு 10 நிமிடங்களை எப்பொழுது ஒதுக்குவது
என்ற எண்ணத்தில் இருக்கும்போதுதான், வங்கிக்குப் போயிருந்தேன். அங்கே சிறிது நேரம்
காத்திருந்தேன். அந்த நேரத்தில், தொண்டையில் கையைப் பொத்தி 10 நிமிடங்கள் ‘ரீகி’ ஆற்றலை
தொண்டைக்குக் கொடுத்தேன். இப்பொழுது தொண்டையும் ஆற்றல் பெற்று ‘புரை ஏறுதல்” தொந்தரவிலிருந்து
விடுபட்டேன்.
64. மலச்சிக்கலுக்கு இறுதி மரணஅடி விழுந்தது!
நான், பச்சைக் காய்கறிகளையும்,
பழங்களையும் சாப்பிட்டு ஆராய்ச்சி செய்த போது, இறைவன் 10-3-1997-ல் எனக்கு அளித்த பரிசுதான்
‘ஹெர்னியா’ என்னும் குடல் இறக்க நோய். அதற்கு அறுவை. சிகிச்சையைத் தவிர வேறு சிகிச்சை
கிடையாது அது 2002-ம் ஆண்டில் தொடர்ந்து வலி இருக்கவும், மருத்துவ மனபயிற்சி செய்து
வலி வராமல் நிரந்தரமாகக் குணப்படுத்தி விட்டேன். ஆனால், இறங்கிய குடலை, மேலே அதனுடைய
பூர்வீக இடத்துக்குக் கொண்டு போக முடியவில்லை. இறங்கிய நிலையிலேயே இருந்தது. குடல்
இறங்கி இருந்ததால், மலச்சிக்கல் இருந்துகொண்டே இருந்தது. 2018-ம் ஆண்டு பிப்ரவரிமாதம்
முதல் வாரத்தில்தான் ‘ரீகி’ ஆற்றல் சிகிச்சையை மீட்டெடுத்து உபயோகத்துக்குக் கொண்டு
வந்தேன். 10-வது விதியின்படி, காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொண்டதும்
மலச்சிக்கலுக்கு இறுதி அடி விழுந்தது.. அதுவரை எனக்கிருந்த மலச்சிக்கலை மருத்துவ மனபயிற்சியைக்
கொண்டு சரிப்படுத்தி வந்தேன். ‘ரீகி’ ஆற்றலை மீட்டெடுத்த பிறகு, மருத்துவ மனபயிற்சியையும்,
ரீகியையும் சேர்த்து எனது மலச்சிக்கலுக்கு தீர்வு கண்டேன். இரண்டும் சேர்ந்ததால், நேரம்
குறைவாகத் தேவைப்பட்டது. 10-வது விதி,, எனது உடல் மன நலப் பிரச்சனைகளை வெகு சுலபமாக
அதிசயத்தக்க வகையில் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது.
65.
மூன்று மருத்துவங்களைப் பற்றிய மேலும் சில முக்கிய தகவல்கள்
66.
வ.எண்
|
தகவல்கள்
|
இரட்டை
மருத்துவம்
|
அக்குபங்சர்
|
ரீகி
சிகிச்சை
|
கருத்து
|
67.
1
|
தேவையான
படிப்பு
|
பத்தாவது
|
பிளஸ்
2
|
படிப்பு
தேவையில்லை
|
|
68.
2
|
கற்றுக்கொள்ள
கால அளவு
|
ஒன்றரை
மணி நேரம்
|
ஐந்து
நாள் பயிற்சி
|
ஒரு
நாள்
|
|
69.
3
|
சிகிச்சை
நேரம்
|
ஒரு
மணி நேரம்
|
ஒரு
நிமிடம்
|
15 முதல் 20 நிமிடங்கள்
வரை.
|
கொடுக்கப்பட்ட நேரத்தில்
நோயாளிகளிடம் விபரம் கேட்கும் நேரம் சேர்க்கப்படவில்லை.
|
70.
4
|
கற்றுக்கொள்வதற்கு
கட்டணம்
|
ரூ.2500/-
|
5000/-
|
4500/-
|
|
71.
5
|
சிறப்பு அம்சம்
|
நோயாளியாய்
நுழைபவர், டாக்டராக வெளிவருகிறார். .
|
நோய்
வந்த அடுத்த நொடியே சிகிச்சை அளிக்கலாம்
|
நோய்
வந்த அடுத்த நொடியே சிகிச்சை அளிக்கலாம்
|
72.
மேலே கண்ட அட்டவணையில் உள்ள தகவல்களைப் பார்த்தாலே உங்களுக்கு
கற்றுக் கொள்ளும் ஆர்வம ஏற்பட்டிருக்கும். உங்கள் வாழ்நாள் முழுக்க மேற்குறிப்பிட்ட
மூன்று அற்புத மருத்துவங்களைக் கொண்டு உங்கள் உடல் நலத்தைப் பேணிக் காப்பீர்கள்: மருத்துவச்
செலவே வாழ்நாள் முழுக்க இல்லாமல் போய்விடும். அதோடு உங்கள் குடும்ப, உறவினர்கள், நண்பர்கள்
மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் சிகிச்சை அளித்து மருத்துவ சேவை செய்ய முடியும்; மேலும்
மூன்று மருத்துவங்களும் ஆன்மீக ஆற்றலைக் கொண்டுதான் வேலை செய்கிறது. ஆகவே, அவை மூன்றும்
மிக அதிகமான ஆன்மீக ஆற்றலைத் தருகிறது. அந்த ஆற்றல் உங்கள் வாழ்வின் ஏற்றத்திற்கு ஏணியாக
இருந்து செயல்படும்.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Updated: 23-6-2019
0 Post a Comment: