Tuesday, May 7, 2019

ஆற்றலை வழங்காது

இம--சாமி சிலை மனிதனுக்கு இறை ஆற்றலை வழங்காது!


பொருட்களின் அக ஆற்றல் என்னும் இறை ஆற்றல் வரையறுக்கப்பட்டது (Restricted) !

உயிரற்ற பொருட்கள் மற்றும் மனிதன் உட்பட பிற உயிரினங்கள் அனைத்திலும் இறைவன் குடியிருக்கிறான். அவை அனைத்திலும் குடியிருந்து அவற்றின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறான். கோழி முட்டையில், மஞ்சகருவிலிருந்துகொண்டு, கோழி இனப்பெருக்கத்திற்கு வழி வகுக்கிறான். அதோடு அக்கருவிலிருக்கும் இறை ஆற்றல் முடிந்து விடுகிறது அந்த இறை ஆற்றல் அதைத் தாண்டி புறாவின் இனபெருக்கத்திற்கோ அல்லது வேறு பறவை இனபெருக்கத்திற்கோ, வேலை செய்ய ஆற்றல் கிடையாது. ஆகவே மஞ்ச கருவிலிருக்கும் ஆற்றல் வரையறுக்கப்பட்டது. 

இதே போல, கல்லாகட்டும், இரும்பாகட்டும், ஐம்பொன்னாகட்டும், பஞ்ச உலோகமாகட்டும், அவற்றில் குடியிருக்கும் இறைவன் அப்பொருட்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த மட்டும் ஆற்றல் கொண்டவன். அதற்கு மேல் வேறு பொருட்களுக்கோ அல்லது உயிரினங்களுக்கோ ஆற்றலைக் கொடுத்து வளர்ச்சியை ஊக்கப்படுத்த இயலாது. 

ஆகவே, கல்லால் ஆன அல்லது உலோகக் கலவைகளால் ஆன சாமி சிலைக்கு இறை ஆற்றல் வரையறுக்கப்பட்டது. அதில் உள்ள ஆற்றலைக் கொண்டு, தன்னை வணங்குபவனுக்கு, இறை ஆற்றலை அளித்து அவனின் வளர்ச்சியை ஊக்க படுத்த இயலாது.

                  ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: