Friday, April 12, 2019

அண்டம் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது;





அண்டம் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது;

இந்த அண்டம் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது; விரிந்துகொண்டே சென்றுகொண்டிருக்கிறது; புதிது புதிதாக நட்சத்திரங்கள் (Stars) தோன்றிக் கொண்டே இருக்கின்றன. உயிரினங்கள் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே இந்த அண்டத்திற்கு, பரிணாம வளர்ச்சிதான் (Evolution) அடிப்படை கொள்கையாக விளங்குகிறது. எனவே பரிணாம வளர்ச்சிதான் இறைவன் என்று கூட சொல்லலாம். இந்த பரிணாம வளர்ச்சிக்கு ஒரு அறிவு இருந்து செயல்பட வேண்டும். அந்த அறிவை மகான் மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் ஆக்க அறிவு (Creative Inteligence) என்கிறார்.

மேற்சொன்ன பரிணாம வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும், அந்த சகதி அழிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, ஒரு வீட்டில் கொள்ளையடித்து, பணம் நகைகளை எடுத்துச் செல்லும்போது, பொருட்களை பறிகொடுத்தவருடைய வளர்ச்சி தடைபடுகிறது. இவ்வாறு மனித இன வளர்ச்சி தடைப்படும் என்பதால்தான், குற்றவாளிகள் தடயங்களை விட்டுச் செல்கிறார்கள். அந்தத் தடயங்களை வைத்து குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள்.

              ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
D 179-TM-இம.ஆன்மீகம்--

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: