D 187-TM-இமஆ-
”உண்மைக் கடவுளை’ வழிபடுவதால்
உண்டாகும் பலன்கள்!
ஏற்கனவே கூறியவற்றிலிருந்து, மத வழிபாடுகள் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள இடிவெளியை அகற்றி,
அவனின் இருப்பை உணரவைக்கவும், அவனோடு ஐக்கியப்படுத்தவும் முடிய வில்லை. அதற்கு ஏற்கனவே சொன்ன காரணங்களும் இதற்கும் பொருந்தும். அதாவது இடம் மாறி இறைவனை வழிபாடு செய்வது;
சரியான அளவு மனபயிற்சி இடம்பெறாதது. குறையான அளவில்தான் மனபயிற்சி செய்கிறார்கள். பெரும்பாலான
இந்துக்களின் வழிபாட்டில் மனபயிற்சியே இல்லை
என்பதால், மன அழுத்தத்தையும், மனக்கவலையும் போக்க முடியவில்லை; இளைஞகர்களிடையே ஒழுக்கமும்
பண்பும் வளரவில்லை. அதனால் இறைவனுக்கும் (உண்மைக்கும் ) மனிதனுக்கும் உள்ள இடைவெளி
அப்படியே இருக்கிறது.
உண்மைக்
கடவுளை தினசரி இருமுறை வழிபாடு செய்யும்போது, மனவழுத்தமும் மனக்கவலையும் குறைந்து கொண்டே
வருகின்றன; இவ்வாறு அன்றாடம் சேரும் மனவழுத்தத்தை வெளியேற்றும்போது, எதிர்மறைக் குணங்களும்
குறைந்து கொண்டே வருகின்றன; அதாவது ஒழுக்கமும் பண்பும் வளர்ச்சியடைகிறது; மனவளம் பெருகிக்கொண்டே
வருகிறது; அறியாமை அகன்றுகொண்டே வருகிறது; நல்லது கெட்டது அறியும் அறிவும் வளர்ந்துகொண்டே
வருகிறது; உங்களின் உண்மைக் கடவுள் உங்கள் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்த எல்லா உதவிகளையும்
செய்கிறான். உங்கள் முன்னேற்றத்திற்குரிய எல்லா சந்தர்ப்பங்களையும் வழங்குகிறான். உங்களுக்கும்
உண்மைக் கடவுளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
0 Post a Comment: