கோழி முட்டையில் இறைவன்!
D 180-TM-இம.ஆன்மீகம்--
பரிணாம வளர்ச்சி
(Evolution) மனிதனுக்கு எந்த வகையில் உதவியாக இருக்கிறது.
ஆக்கப்பட்ட
பொருட்கள் அனைத்தும் மனிதனின் வளர்ச்சிக்காகப் படைக்கப்பட்டவைதான். மிருகங்களும், பறவைகளும்,
மரங்களும், தாவரங்களும்,உணவுக்காகப் படைக்கப்பட்டவை; கற்களும், உலோகங்களும், வேதியல்
பொருட்களும் மனிதனின் நாகரிக வளர்ச்சிக்காக படைக்கப்பட்டவை; கற்களிலும், இரும்பிலும்
இருக்கும் இறைவன் அவற்றைக் கொண்டு வீடுகள் கட்டி மனிதன் வெயில், மழை மற்றும் காட்டு
மிருகங்களிடமிருந்து பாதுகாப்பாக வாழ உதவி செய்கிறான். ஆகவே கற்கள் இரும்பு போன்ற உலோகங்களில், இறைவன் இருந்துகொண்டு, அவற்றின் பரிணாம
வளர்ச்சிக்கு வழிவகுக்கிறான்.
நிலக்கடலைச் செடியை வேறோடு
பிடுங்கிப் பார்த்தால், வேரில் சிறு சிறு முத்துகளைப்
போல, சிறிதும் பெரிதுமாக இருக்கும். அந்தக் முத்துக்களில்தான், இறைவன் தங்கி, அந்த
கடலையின் வளர்ச்சியைப் பார்த்துக் கொள்கிறான். முட்டையில் மஞ்சல் கருவில் இறைவன் இருந்து
கொண்டு, முட்டையின் வளர்ச்சிக்கும், கோழியின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறான். எனவே
எல்லாப் பொருட்களிலும் தங்கி, அந்த அந்த பொருட்களின் பரிணாம வளர்ச்சியை ஊக்கப்படுத்தத்தான்
அப்பொருட்களில் இறைவன் தங்கியிருக்கிறான். இதே போல, மனிதனின் பரிணாம வளர்ச்சியை ஊக்கப்படுத்தத்தான்,
மனிதனில் இறைவன் குடியிருக்கிறான்.
பரிணாம
வளர்ச்சியில், தற்கால மனிதன், ஒரு நொடியில் இங்கிருந்து உலகில், எந்த ஒரு நாட்டுக்கும்
பணம் அனுப்பிவிடுகிறான். இதற்குமேல் அவனின் பரிணாம வளர்ச்சியை சொல்ல வேண்டியதில்லை.
அறிவியல் கண்டுபிடிப்புகள் அவனுடைய துன்பத்தை, துயரத்தைப் போக்க முடியவில்லையே ஏன்?
காரணம் கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சியை ஊக்கப்படுத்தினாலும், மனிதன் செய்யும் குற்றங்களால்,
பரிணாம வளர்ச்சி தடைபடுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். குற்றங்கள் செய்யாமலே
கோடிக்கண்க்கானோர் மனதளவில் துன்பப்படுகிறார்கள்.
மேலே
கூறப்பட்ட மக்களின் துன்பங்களைக் குறைக்கத்தான், மகான்கள் தோன்றி மதங்களை நிறுவினார்கள்.
வெவ்வேறு வழிபாட்டு முறைகள் தோன்றின. ஒரு சில மதங்களில் மனபயிற்சி மட்டும் இடம் பெறும்
படியாக வழிபாடுகள் அமைந்திருக்கின்றன. புத்த மதத்தில் தியானம் என்னும் மனபயிற்சி வழிபாடாக
அமைந்திருக்கிறது. ஒரு சில மதங்களில் உடற்பயிற்சி மட்டும் இடம்பெறும்படியாக குறிப்பாக
இந்து மதத்தில் அமைந்திருக்கிறது. உடற்பயிற்சியும், மனபயிற்சியும் சம அளவில் இருக்கும்போதுதான்
ஆன்மீக ஆற்றல் முழு நிறைவாக கிடைக்க வாய்ப்புண்டு.
ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)
0 Post a Comment: