Friday, April 12, 2019

இடம் மாறி இறைவனின் வழிபாடு



D 178-TM--

           இடம் மாறி இறைவனை வழிபாடு செய்கிறீர்கள்!
 இடம் மாறி இறைவனை வழிபாடு செய்கிறீர்கள்! நீங்கள் வழிபடும் இறைவன், உங்களுக்காக ஓரிடத்தில் நிலை கொண்டிருக்கிறான். ஆனால் நீங்களோ வேறொரு இடத்தில் வேறொரு பொருளில், அப்பொருளுக்காக நிலை கொண்டுள்ள இறைவனை வழிபாடு செய்கிறீர்கள். வெளிப்படியாகச் சொல்லுகிறேன்! உங்களிடம் குடி கொண்டுள்ள உண்மைக் கடவுளை விட்டுவிட்டு, கல், இரும்பு,மற்ற உலோக கலவைகளினால் செய்த உருவங்களில் குடிகொண்டுள்ள கடவுளை வணங்குகிறீர்கள். ஏற்கனவே சொன்ன இரண்டு குறைபாடுகளோடு இதையும் சேர்த்து, மூன்று குறைபாடுகளினால்தான், நீங்கள் உடலை வருத்தி, ஏராளமான பொருட் செலவில், காலத்தை விரயம் செய்தும், உங்களுக்கு தேவையான ஆன்மீக ஆற்றலை உங்களால் பெற முடியவில்லை.

இறைவன் இடம் மாறி எங்கிருக்கிறான்?
இறைவன் ஒருவன் உண்டா? அப்படி இருந்தால் அவன் எங்கிருக்கிறான்? உருவமாக இருக்கிறானா? அருவமாக இருக்கிறானா? எல்லோருக்குமே  தெரியும் “இறைவன். பறவையில் இருக்கிறான்; மிருகத்தில் இருக்கிறான்; புளு, பூச்சிகளில் இருக்கிறான்;மரம் மட்டைகளில் இருக்கிறான்; செடி, கொடிகளில் இருக்கிறான். உலோகமான இரும்பில் இருக்கிறான்; கல்லில் இருக்கிறான்; மண்ணில் இருக்கிறான்; ஏன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும்கூட இருக்கிறான். துரும்பிலும் கூட இருக்கும் இறைவன், அவனின் உயர்ந்த படைப்பான மனிதனிடம் இருக்க மாட்டானா? இருப்பான்; இருக்கிறான்.

             ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: