A 175-
நாம் எதற்காக கடவுளை வணங்குகிறோம்;
வழிபாடு செய்கிறோம்?
நாம்
நோய் நொடி இல்லாமல், நலமாக வாழ்வதற்கும், நாம் நினைப்பது நடந்தேறுவதற்கும், துன்பம்
துயரங்கள் இல்லாமல் வாழ்வதற்கும், நமது வாரிசுகள் வளமான வாழ்வு பெறுவதற்கும், பொருளாதார
நிலை உயர்வதற்கும் இறைவனுக்கு வழிபாடு செய்கிறோம். அதாவது மேற்சொன்னவை நடப்பதற்கு, நமக்கு ஆன்மீக ஆற்றல் அதாவது இறைவனின் அருள் கிடைக்கவேண்டும். ஆகவே வழிபாட்டின்
நோக்கம் இறைவனின் அருளைப் பெறுவதுதான்.
இறைவனின் அருளைப் பெற்றுவிட்டீர்களா?
இந்தியாவில்
120 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவற்றில் பெரும்பாலார் இந்துக்கள். இவர்களில் எத்தனைபேர் கோவில்களுக்குச் சென்று, மேற்சொன்ன
பலன்களைப் பெற்றிருக்கிறார்கள். 15 முதல் 20 ஆண்டுகள் வரை விரதமிருந்து, பாதயாத்திரைகள்
மேற்கொண்டு, இருமுடிகள் சுமந்து வழிபாடு செய்திருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேர்
மேற்சொன்ன பலன்களை அனுபவித்திருக்கிறார்கள்.
20
ஆண்டுகள் வரை சென்றவர்கள் கூட “20 ஆண்டாக போய் வருகிறேன். அப்படி ஒன்னும் எனக்கு நல்லது
நடக்கல!” என்றுதான் புலம்பக் கேட்டிருக்கிறேன்.
உடலை வருத்தி, நிறையப் பொருள் செலவழித்தும், நிறைய கால விரையம் செய்தும் இறைவனின் அருள்
என்னும் ஆன்மீக ஆற்றல் கிடைக்கவில்லை என்றால், நமது வழிபாட்டில் குறைகள் இருக்கின்றன
என்றுதானே பொருள். அந்தக் குறைகளைக் கண்டுபிடித்து
சரி செய்து விட்டால், நாம் இறை ஆற்றலைக் குறைவின்றி பெறலாம்.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
0 Post a Comment: