Friday, April 12, 2019

மக்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள்

D191-TM-இமஆ
மக்களால்  பின்பற்றப்படாத வார்த்தை

“செய்யும் தொழிலே தெய்வம்” என்று நமது மூதாதையர் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நீங்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு ஏதாவது ஒரு தொழில் செய்தாக வேண்டும். அந்தத் தொழிலில் நீங்கள் சிறக்க வேண்டுமென்றால், உங்கள் தொழிலில் கவனம் வைக்க வேண்டும்.

ஏற்கனவே “உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு!” என்ற வார்த்தை படித்த, படிக்காத மக்களிடையே இறைவனால் ‘தானிருக்குமிடத்தை’ தெரிவிக்க,   உலவவிட்ட வார்த்தை. அதேபோலத்தான், மற்றொரு வார்த்தையையும் மக்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள், ஆனால் அந்த வார்த்தையின்படி பின்பற்ற மாட்டார்கள்.

சாலையில் சைக்கிள் ஓட்டி வந்த பையன் கீழே சறுக்கி விழுந்த போது, தூக்கி விட்ட பெரியவர் சொல்லுகிறார் “கவனமாக ஓட்டி வரக்கூடாது!” காய்கறி நறுக்கிக்கொண்டிருக்கிற மனைவி கையை அறுத்துக்கொள்ளும்போது கணவன் கூறும் ஆறுதல் வார்த்தை “கவனமாக பார்த்து அறுக்கக் கூடாது!” பையனின் மார்க் அட்டையைப் பார்த்து “வகுப்பில வாத்தியார் சொல்லித் தரும்போது கவனிச்சாத்தான மார்க் வாங்கப் போற! கிரிக்கெட் விளையாடுறதையே நினைச்சுக்கிட்டிருந்தா!” என்று சொல்லிக்கொண்டே அந்த அட்டையில் கையெழுத்தைப் போடுகிறார் பைனின் தந்தை.

ஒரு வியாபாரி தன் நண்பரிடம் கூறுகிறார் “என் பையனை கல்லாவில் உட்கார வச்சிருந்தேன். கவனக் குறைவால் சில்லரை எண்ணிக்கொடுக்கும்போது ஒரு நூறு ரூபாயை அதிகமாகக் கொடுத்துட்டான்!” இவ்வாறு மக்கள் “கவனம்” என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்களே தவிர, அதன் உண்மையான பொருளை அறிந்து, கவனத்தை வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் செலுத்த தெரியவில்லை. இந்தக்  “கவனம்” என்ற வார்த்தை உங்களது வாழ்க்கையை எவ்வாறு தலைகீழாகப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமலிருக்கிறீர்கள்!.

                   ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: