Thursday, April 18, 2019

நோய்கள் வரக்கூடாது என்றால்


A 150

                   நோய்கள் வரக்கூடாது என்றால்...!

நோய்கள் வரக்கூடாது என்றால், அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் கடைப்பிடித்து, உடலை வலிமையாக்க வேண்டும். உடலில் வலிமை கூடும்போது, தேக்கமுறும் கழிவுப்பொருட்கள் குறைந்துவிடும்; நோய்களும் குறைந்து விடும்.

நோய்கள் வந்துவிட்டால், அவைகளைக் குணப்படுத்த இரண்டு முக்கியமான இரு பிரிவுகளில் மருத்துவங்கள் இருக்கின்றன. அவை: 1. மருந்து மருத்துவம் 2. மருந்தில்லா மருத்துவம். அவற்றை இப்படியும் சொல்லலாம். ஒன்று பணம் செலவாகும் மருத்துவம், மற்றொன்று பணம் செலவாகாத மருத்துவம்.

மக்கள் பணம் செலவாகாத மருத்துவத்தைத்தான் விரும்புவார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், பணம் செலவாகாத மருத்துவங்களைப் பற்றி புரிதல் இல்லாததாலும், நோய்களின் தோற்றத்தைப்பற்றி விழிப்புணர்வு இல்லாததாலும் மக்கள் பணம் செலவாகும் மருத்துவங்களை நாடிச் செல்கிறார்கள்.

பணம் செலவாகாத மருந்தில்லா மருத்துவங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானவை மூன்று. அவைகள்தான் 1. இரட்டை மருத்துவம் (Twin Medicine) 2. அக்குபங்சர் (Acupuncture) 3. ரீகி (Reiki) சிகிச்சை.
               ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: