அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால் ஏற்படும் மந்த(inertia) உணர்வு வலி மருத்துவ மனபயிற்சி
A 119-MM 1-ம.ம 5-
ஹீலர்:
அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க!
இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை
வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!
இப்ப உங்க
வயிறு விரிஞ்சு சுருங்குவதை மனக்கண்ணால பாருங்க அல்லது கவனியுங்க! அதோடு வயிற்றில்
உள்ள மந்த உணர்வையும், சேர்த்து கவனியுஙக அல்லது நினைச்சுக்கிட்டே இருங்க அல்லது
உணருங்க!
வேறு
எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப்
பற்றியோ குறுக்கிட்டா, அவற்றை
நிறுத்திட்டு, வயிறு சுருங்கி விரியுறதையும், மந்த உணர்வையும் மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே
இருங்க!
மந்த உணர்வு
குறைந்து கொண்டே வரும்! அது குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. குணமான பிறகு
மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க.
இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.
நோய்களிலிருந்து
நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர
வேண்டும்.
ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.
0 Post a Comment: