Wednesday, April 17, 2019

20-11-1997

இம-- நீர் நிறைய அருந்தலாமா! எவ்வளவு அருந்தலாம்!

20-11-1997 ஆம் ஆண்டு ஆண்டவன் நான்காவது விதியை வெளிப்படுத்தினான். நான்காவது விதி “தாகம் எடுத்த பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் “ என்பதை வலியுறுத்துகிறது. தாகம் தீரும்வரை எவ்வளவு குடிகிறோமோ அதுதான் அளவு. அன்றையிலிருந்து தாகம் எடுத்த பிறகு தண்ணீர் குடித்து வந்தேன். முதல் நாளிலே எனக்கிருந்த ஆஸ்த்மாவிலிருந்து விடுபட்டேன். 

மூக்கில் சளியும், மூக்கடைப்பும், மூக்கில் நீராக ஒழுகுதல் இருந்து கொண்டுதானிருந்தது. அதற்குக் காரணம் எனது மூக்கு வளைந்திருந்ததுதான். எனக்கு நான்காவது முறையாக மூக்கில், அறுவை சிகிச்சை செய்து வளர்ந்த சதையை அப்புறப்படுத்திய மறுநாள் சூனியர் டாக்டர் ஒருவர் எனது மூக்கை சுத்தப்படுத்திய பொழுது “ உங்களது மூக்கு வளைந்திருக்கிறது; சதையை அறுத்து  அப்புறப்படுத்தும் போது, வளைவையும் நிமிர்த்தியிருக்க லாமே! அதை ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை! அதனால், தொடர்ந்து சளி பிடிக்கத்தான் செய்யும், சதையும் வளரத்தான செய்யும்” என்றார். தொடர்ந்து விடாமல் “சித்தி”ப் பயிற்சியை செய்துவந்தேன். மனவளம் பெருகியது; அறியாமை அகன்றுகொண்டே வந்தது. ஆன்மீக ஆற்றலும் பெருகியது.

                ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: