Friday, April 12, 2019

வலிபடும் முறை


  எப்படி வழிபட வேண்டும்?

 D 177-TM-இரட்டை மருத்துவத்தின் ஆன்மீகம்-இம         

உங்கள் தினசரி நடக்கும் திறனுக்குத் தகுந்தவாறு நடந்து, மலையில் ஏறி முடித்தவுடன், கோவிலில் உட்கார்ந்து இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடலாம்; பிரார்த்தனை செய்யலாம்; திருக்குறளைப் படிக்கலாம்; திருவாசகம், திருப்பாவை, இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து பக்கங்களைப் படிக்கலாம் வழிபாட்டுக்குரிய மருத்துவ மனபயிற்சி (Medicinal Meditation) செய்யலாம்.. அதன் மூலம் பக்தர்களுக்கு மனபயிற்சி கிடைக்கிறது. உடற்பயிற்சியும், மனபயிற்சியும் சேர்ந்து செய்யும் போதுதான்  பக்தர்களுக்கு  முழு நிறைவான ஆன்மீக ஆற்றல் கிடைக்கிறது.

இதற்கு உதாரணம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் உடற்பயிற்சி மட்டும் செய்தார். ஆகவே தனது ‘இமேஜை’ காப்பாற்றிக்கொள்ள பெரும்பாடு பட்டார். வெளியில் செல்லும்போதெல்லாம், தொப்பியும், கூலிங் கிளாஸ் கண்ணாடி போட்டுக்கொண்டுதான் செல்லுவார். நல்லவராகத்தான் நடிப்பார். வில்லன் வேடத்தில் நடிக்க மாட்டார்.

மேற்கூறியதற்கு எதிர்மாறாக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் செயல்பாடுகள் இருக்கும். ’இமேஜை’க்’ காப்பாற்றிக்கொள்ள சிரமப்பட்டதே இல்லை; வாயில் சிக்ரெட்டுடன், மேக்கப் இல்லாமல், வழுக்கைத் தலையுடன், முகச் சவரம் செய்யாமல் சிரித்துக்கொண்டே ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பார். கதாநாயகன், வில்லன் ஆகிய இருவேடங்களிலும் நடிப்பார். மக்கள் அப்படியும் அவரை ஏற்றுக் கொண்டார்கள். அதற்குக் காரணம், சூப்பர் ஸ்டார் தியானம் என்னும் மனபயிற்சியும், யோகாசனம் என்னும் உடற்பயிற்சியும் தவறாது செய்து வருகிறார். முன்னவர் உடற்பயிற்சி மட்டும் செய்து வந்தார். பின்னவர் உடற்பயிற்சியும், மனபயிற்சியும் சேர்ந்து செய்து வருகிறார்.

            ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: