Friday, April 12, 2019

உடற்பயிற்சி, மனபயிற்சி, ஆன்மீகம்


  A 17     
உடற்பயிற்சி, மனபயிற்சி, ஆன்மீகம்
ஆன்மீகம் என்றால், உடற்பயிற்சியாலும், மனபயிற்சியாலும் மனித ஆற்றலை பல மடங்கு பெருக்கிக் கொள்ளும் அறிவியல் முறைதான் ஆன்மீகம். அந்த ஆன்மீகத்தால் கிடைக்கும் ஆற்றல்தான் ஆன்மீக ஆற்றலாகும்.

இந்த கொள்கைக்கு இந்து மதம்தான்,  நடைமுறை உதாரண விளக்கம் கொடுத்திருக்கிறது. அதற்கு நாம் பெருமைப் படலாம். இந்துக்கள் பாதயாத்திரை மேற்கொண்டு மலை உச்சியில் உள்ள கோவிலில் உள்ள தெய்வத்தை வணங்கி வருகிறார்கள். அதாவது பாதயாத்திரையின் மூலம் உடற்பயிற்சியை மேற்கொள்ளுகிறார்கள். கோவிலில் மனபயிற்சி வழிபாடு செய்ய வேண்டும். அங்குதான் இந்துக்கள் தவறு செய்கிறார்கள். ஆனால் சாமியின் உருவச் சிலையை பார்த்துவிட்டு, தெய்வ தரிசனம் நன்றாக கிடைத்தது என்றும் தடங்கல் இல்லாமல் அம்மனைப் பார்க்க முடிந்தது என்றும் மகிழ்ச்சி அடைந்து, அர்ச்சகர் தட்டில் ரூபாயைப் போட்டுவிட்டு, அவர் அளிக்கும் திருநீரைப் பூசிக்கொண்டு ஊர் திரும்புகிறார்கள். இங்கு மனபயிற்சி சிறிதளவு கூட இல்லை. இது ஒரு பெரிய குறைபாடு!

மற்றொரு குறைபாடு என்னவென்றால், பாதயாத்திரை அறுபது, எழுபது கிலோமீட்டர் வரை நடக்கிறார்கள். இது உடலை வருத்திக்கொள்ளுவது ஆகும்; உடலின் நடை திறன் ஒரு நாளைக்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குத்தான் நடந்து, மலை ஏறவேண்டும். தினசரி உணவு உண்கிறோம். பிறகு உழைக்கிறோம். அதற்கு பிறகு ஓய்வு எடுக்கிறாம். இதேபோலத்தான், தினசரி மனபயிற்சியையும், உடற்பயிற்சியையும் நமது அன்றாட செயல்பாடுகளில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதைவிட்டுவிட்டு, ஒரு ஆண்டுக்கும் சேர்ந்து, ஐம்பது, நூறு கிலோமீட்டர் பாதயாத்திரை செல்லுவது உடலை பலவீனமடையத்தான் செய்யும்.

எனது திருச்சி நண்பர் ஒருவர், மத்திய வயதைத் தாண்டியவர், பக்தி வெறிகொண்டு திருப்பதி வரை பாதயாத்திரை செல்வது என்று முடிவெடுத்து, புறப்பட்டிருக்கிறார். இருபது கிலோ மீட்டர் வரை நடந்து கொண்டிருக்கும் போது,திடீர் என்று ‘ஹார்ட் அட்டாக்’ ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு நலமாகி வீடு திரும்பியிருக்கிறார்.  அப்படி பாதயாத்திரை செல்வதை இறைவனும் விரும்பவும் மாட்டான். ஏனென்றால் மனிதன் நலமுடன் இப்பூமியில் வாழ வேண்டும் என்பதற்காகவே மற்ற உயிரினங்களையும், படைப்புகளையும் படைத்திருக்கிறான்.  


            ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: