உண்மைக் கடவுளை வழிபடும் முறை (worship method)
D 188-TM- இரட்டை மருத்துவத்தின் ஆன்மீகம்-
D 188-TM- இரட்டை மருத்துவத்தின் ஆன்மீகம்-
உண்மைக் கடவுளை வழிபடும் முறை!
மன அழுத்தத்தை போக்க வேண்டுமென்றால், அதை மார்பிலிருந்துதான்
போக்க வேண்டும். அந்த அழுத்தத்தை விரட்டும்,
மருத்துவ மனப்பயிற்சியை (Medicinal meditation) உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். அதைக்
கற்று பயன் பெறுங்கள்
ஒரு சாய்வு நாற்காலியில் நன்றாக வசதியாகச் சாய்ந்து
உட்காருங்கள். தலையை சுவற்றில் சாய்க்காமல், சிறிது தாழ்த்தி இருக்கட்டும். மெதுவாகக்
கண்களை மூடுங்கள். 10 லிருந்து 15 நொடிகள் மனதில் எந்த எண்ணமும் இல்லாமல் மனதை வெறுமனே
வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மனப்பயிற்சி நன்கு அமையும்.
. இப்பொழுது மார்பை மனக்கண்ணால் பாருங்கள். அது
சுருங்கி விரிவதைக் கவனியுங்கள்; மார்பில் இறுக்கம் அல்லது பிடிப்பு இருந்தால் அந்த
உணர்வையும் மனதில் நினையுங்கள். தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருங்கள். வேறு எண்ணங்கள்
வரும்போதெல்லாம், அவற்றை நிறுத்தி விட்டு, மீண்டும் மீண்டும் மார்பையே கவனிக்க வேண்டும்.
தொடர்ந்து கவனியுங்கள் அல்லது நினையுங்கள்; எண்ணங்கள் வரும்போதெல்லாம், அவற்றை நிறுத்திவிட்டு,
மனதை மெதுவாகத் திருப்பிக் கொண்டுவந்து மார்பை கவனிக்கச் செய்யுங்கள். மார்பிலிருந்து
மன அழுத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும்.
யாராவது உங்களைப் பார்க்க வந்தால், பயிற்சியை நிறுத்திவிட்டு,10
நொடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்து, வந்தவரிடம் பேசிவிட்டு, மீண்டும் வந்து தொடர்ந்து
செய்யலாம். பசியோடு இப்பயிற்சியைச் செய்யக் கூடாது மன அழுத்தம் அதிகமாக இருந்தால்,
தொடர்ந்து இடைவெளி விட்டு விட்டு மனக் கணம் குறைந்து இலேசாகும் வரை செய்து கொண்டே இருக்க
வேண்டும்.
மேலே கூறப்பட்ட மருத்துவ மனபயிற்சி என்னும்
வழிபாட்டு முறையை தினசரி காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் ஒரு வேளைக்கு 20 நிமிடங்கள்
என செய்து வர வேண்டும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும்.
0 Post a Comment: