கனவு (dream) கண்டபடி படிப்பு, வேலை கிடைத்தது! ஆனால் மகிழ்ச்சி இல்லை!
a 156
படிப்பை முடித்துவிட்டு,
1969-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வேலையில் சேர்ந்தேன்.
அன்றையிலிருந்து 1. முகப்பொக்கலங்கள்,
2. கழுத்துப் பகுதி மற்றும் தோல்ப்பட்டை களில் உள்ள நரம்புகள் சுண்டி இழுத்தலால் ஏற்படும்
பயங்கரவலி (ஒரு நாளைக்கு நாலைந்து முறை), 3 வயிற்றோட்டம், 4. வயிற்றுக் கடுப்பு, 5.
சாப்பிடும்போது உதடுகளைக் கடித்துக் கொள்ளுதல், 6. புருவங்களில் கட்டிகள், 7. கண்களில்
கண்கட்டிகள் தோன்றுதல், 8. கன்னங்களில் பொக்கலங்கள் தோன்றுதல், 9. பல் கூச்சம், 10.
பல் வலி, 11. பல்லீரல் வலி, 12. நாக்கில் புண், 13. வாயில் புண் 14. பற்காரை, 15. பற்சொத்தை,
16. வாய்த்துற்நாற்றம், 17; சளி,
18. இருமல், 19. மூக்கில் நீராக ஒழுகுதல், 20. மூக்கடைப்பு, 21. மூக்கில் சதை வளர்ச்சி,
22.மூச்சுத் திணறல், 23. ஆஸ்த்மா, 24. ஒற்றைத் தலைவலி, 25. மலச்சிக்கல், 26. அரிப்பு, முதலிய நோய்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன்.
இவ்வளவு நோய்களா என்று நீங்கள் வியக்கலாம்!
10 வயதில் எனக்கு இடதுகால் ஊனம் ஏற்பட்டது.
அதனால் எனது உடலுழைப்பு வரையறுக்கப்பட்டது; அதனை அதிகரிக்க முடியாது. உடலுழைப்புக்
குறைவினால் கழிவுப்பொருட்களின் தேக்கம் அதிகமாகிவிட்டது. அதனால், அதிக நோய்கள் தோன்றலாயின.
நோய்களைக் குணப்படுத்துவதும் தாமதமானது.
எனது நோய்களை வைத்து ஆராய்ச்சி
செய்து, அதன் கண்டுபிடிப்புகளை எனக்கு வெளிப்படுத்தி. மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்காகவே
என்னை ஊனமாகப் படைத்தானோ இறைவன் என்ற எண்ணம் சமீபகாலமாக வந்துகொண்டே இருக்கிறது.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.
0 Post a Comment: