Thursday, April 18, 2019

இயற்கை விதிகளின் மீறலும் உள்ளுறுப்புகள் பழுதும்!


இயற்கை விதிகளின் மீறலும் உள்ளுறுப்புகள் பழுதும்!
அரோமணியின் 11 இயற்கை விதிகளை நீங்கள் மீறும்பொழுது, அக்குபங்சர் சிகிச்சையில் குறிப்பிட்ட 12 உள் உறுப்புக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகள் பழுதாகி, அந்த உறுப்புக்களுக்குத் தொடர்புள்ள பஞ்சபூத ஆற்றல்களின் ஓட்டம் தடைபட்டு விடுகிறது. அதனால் அவ்வுறுப்புகளில் தடைபட்ட பஞ்சபூதங்களின் ஆற்றல் குறைவு ஏற்படுகிறது. அதனால் உங்கள் உடல் பலவீனமாகி, கழிவுப்பொருட்கள் தேங்கிவிடுகின்றன. 

நோயாளியின் கை நாடிப் பிடித்துப் பார்க்கும்போது, எந்த இரண்டு மூலக ஆற்றல் குறைபாடு என்பதைக் காட்டுகிறது. அந்த இரண்டு மூலகங்களுக்குறிய புள்ளி ஒன்றை 12 சக்தி நாளப் பாதைகளில் கண்டுபிடித்துத் தொடுவதின் மூலம் அடைபட்ட புள்ளி திறக்கும்படியாகத் தூண்டப்படுகிறது. அதற்கு ஐந்து நொடிகள் போதும். 

திறந்த புள்ளி வழியாக தடுக்கப்பட்ட அண்டத்தின் ஆற்றல் அந்த சக்தி நாளப்புள்ளி வழியாகப் பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்குச் சென்று, ஆற்றலை அளித்துப் பழுதைச் சரி செய்கிறது. எப்படி சரி செய்கிறது? முதலில் தேக்க முற்ற கழிவுப் பொருளை நோயாளியின் உடலை விட்டு வெளியேற்றுகிறது. கழிவுப் பொருட்களின் வெளியேற்றத்துக்குப் பிறகு, செல்கள் அண்ட ஆற்றலால் நிரப்பப்படுகிறது.  நோயாளி நலமடைகிறார். நோயாளி சொல்லும் நோய்களின் தொந்தரவுகளை கேட்டும் ஆற்றல் குறைவைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம்.

                     ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: