திருநீரு பூசுவது வழிபாடா?
D 181-TM-இம.ஆன்மீகம்
நமது வழிபாட்டு முறை சரியில்லாததால்
என்ன நடக்கிறது?
நமது
வழிபாட்டு முறை சரியில்லாததால், மக்கள், பேராசை, கோபம், பயம், பதட்டம், பொறாமை, பொறுமையின்மை,
அமைதியின்மை, பாலியியல் துன்புறுத்தல் போன்ற எதிர்மறைக் குணங்களால் (Negative attributes)
ஆட்டிவிக்கப்படுகிறார்கள். ஊழ்வினைகளின் (Fates) பாதிப்புகளாலும் மக்கள் துயரத்திற்குள்ளாகிறார்கள்.
இந்த ஊழ்வினைப் பாதிப்புகளாலும், மக்கள் தவறுகள்,
குற்றங்கள் இழைக்கிறார்கள். ஆகவே அதன் விளைவாக, இப்பொழுது மட்டுமல்ல, எப்போதுமே மக்களை
ஆட்டிப் படைப்பது மன அழுத்தமும், மனக்கவலையும்தான். இந்த இரண்டும்தான், மக்களிடையே
நோய்கள் தோன்றுவதற்கு முழு முதற் காரணமாக அமைந்து விடுகிறது. ஆகவே நோய்களினாலும், நமது
மனக்கவலை அதிகமாகிவிடுகிறது; பொருளாதாரம் மந்த நிலைக்கு வந்து விடுகிறது. மக்களுக்கு
வாழ்வே அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது.
மேற்கூறப்பட்ட
நிலைக்குப் போகவிடாமல் மக்களைக் காப்பாற்றுவதற்குதான்
மதங்களின் வழிபாட்டு முறைகள் கைகொடுத்தன. ஆகவே மதவழிபாடு, எதிர்மறைக் குணங்களைப் குறைக்கிறது;
ஊழ்வினைப் பாதிப்புகளையும் குறைக்கிறது, அதனால்
தவறுகளும், குற்றங்களும் குறைந்து, மன அழுத்தத்தையும், மனக் கவலையையும் போக்கி, நோய்களிலிருந்து
விடுபட்டு, பொருளாதார மேம்பாடு அடைய வழிவகை செய்கிறது. நமது வழிபாட்டு முறை மேற்குறிப்பிட்ட
நிலையை அடைய உதவியதா? இல்லையே! நாளுக்கு நாள் குற்றங்கள்தான் அதிகரித்து வருகின்றன.
மக்களுடைய துன்பங்களும் துயரங்களும் சொல்லொணாத அளவுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன.
பொள்ளாச்சியில் பெண்பிள்ளைகளுக்கு நடந்த பாலியியல் கொடுமைகள் ஒன்று போதாதா, நமது வழிபாட்டு
முறை இளைஞர்களுக்கு ஒழுக்கத்தையும், பண்பையும் வளரவைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத்
தெரிகிறது.
இந்து
மத வழிபாடுதான், மக்களுக்கு ஒழுக்கத்தையும், பண்பையும் காக்கும்படியாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அதை நடைமுறைப் படுத்தும்போதுதான் தவறு செய்யப்படுகிறது. நடைப் பயணம் மேற்கொண்டு,
மலை உச்சியில் உள்ள தெய்வத்தை வைத்து மனபயிற்சி செய்ய வேண்டும் என்றுதான் நமது வழிபாடு
சொல்கிறது. ஆனால் மனபயிற்சி செய்யாமல் திருநீரைப் பூசி வந்துவிடுகிறார்கள். வழிபாட்டின்
சிறப்பு அம்சத்தையே சாகடித்து விடுகிறார்கள்.
ஹீலர் ஆர்.எ/பரமன் (அரோமணி)
0 Post a Comment: