தொழில் (profession) தெய்வத்தை” ஏன் வழிபட வேண்டும்?
D 192 TM-இமஆ
“தொழில்
தெய்வத்தை” ஏன் வழிபட வேண்டும்?
தற்பொழுது
மக்கள் வேலை செய்யும்போது, கால் பாகம்தான் வேலையில் கவனத்தைச் செலுத்துகிறார்கள்; முக்கால்
பாகம் மனதினை அலை பாயவிட்டு எதையாவது நினைத்துக் கொண்டே வேலை செய்கிறார்கள். இவ்வாறு
வேலை செய்வதால், மனதில் மன அழுத்தம் சேருகிறது; பின்னாலேயே மனகவலையும் வந்து விடுகிறது.
அதைப் பின்பற்றி நோய்களும் வந்து விடுகின்றன. அப்படி வாழும் தற்போதைய வாழ்க்கைதான்
“கற்பனை வாழ்க்கையாகும் (Imagin life)”
இதற்கு மருத்துவ மனபயிற்சி வழிப்பாட்டினை காலை 20 நிமிடங்கள், மாலை 20 நிமிடங்கள் செய்வதால்
போக்கிவிடலாம். ஆனால் ஊழ்வினையால் ஏற்படும் பாதிப்புகளால் தோற்றுவிக்கப்படும் மனவழுத்தமும்
மனகவலையும் அவ்வளவு சுலபமாக போகாது. உதாரணமாக, இளவயதில் குழந்தைகளோ, கணவனோ, தாய், தந்தையரோ,
நெருக்கமான உறவுகளோ அகால மரணமடைந்து விட்டாலோ, பயங்கரமான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டாலோ,
அதனால் உண்டாகும் மனவழுத்தமும், மனகவலையும் அவ்வளவு சுலபமாகப் போய்விடுமா! இந்தமாதிரி
மனப்பிரச்சனைகளைப் போக்கத்தான் “தொழில் தெய்வத்தை” வழிபட வேண்டும்.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
0 Post a Comment: