இறைவன் (Almighty) எங்கிருக்கிறான்? அவனை வழிபட!
D 185-TM-இமaa-இ
இறைவன் எங்கிருக்கிறான்? அவனை
வழிபட!
அவன் தன்னிருப்பிடத்தை படித்தவர்,
படிக்காதவர் என்று பாராமல்,அனைத்து மக்களுக்கும், தொண்டு தொட்டு, தெரியப்படுத்திக்
கொண்டே இருக்கிறான். ஆனால்
மக்கள்தான் அறியாமையால் அதை அறியாமலிருக்கிறார்கள்; புரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள்.
கிராமத்தில் இரு பெண்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைப் பார்த்திருப்பீர்கள். பாதிக்கப்பட்ட
பெண் கண்களில் கோபம் தெறிக்க சொல்லுவாள் “உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு, ‘நீ என் ரூபாயை
எடுக்கலன்னு!” உடலில் பல இடங்களிருக்க ”நெஞ்சைத் தொட்டு சொல்லு” என்று ஏன் நெஞ்சைக்
குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அவள் படியாதவள்; அந்த வார்த்தையை எவரிடமும் கற்று வரவில்லை.
தானாகவே வருகிறது. ”நெஞ்சைத் தொட்டு சொல்லு”
என்ற சொல்லில் மறைந்திருக்கும் சொல் “உண்மையைச் சொல்” என்பதாகும். ஆகவே நெஞ்சில் உண்மை
மறைந்திருக்கிறது. உண்மைதான் இறைவன்; இறைவன்தான்
உண்மை. “வாய்மையே வெல்லும்” ”இறையே வெல்லும்“ “இறைவனே வெல்வான்” இதற்கு ஏதாவது
மாற்றுக் கருத்து உண்டா!
உங்கள் மார்பில் உள்ள இறைவன்தான்
உங்கள் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறான்.
உங்கள் வளர்ச்சிக்காக உள்ள இறைவனை விட்டுவிட்டு, கல்லின் வளர்ச்சிக்கும், உலோக வளர்ச்சிக்கும்
உள்ள இறைவனை வணங்கினால், உங்களுக்கு வளர்ச்சி எப்படி கிடைக்கும்!.
ஆகவே
மக்களுக்கு இறைவன் இருக்கும் இடத்தைத் தெரியப்படுத்தி விட்டேன். அவனை நீங்கள் இனி வழி படலாம். மனம் ஒரு கோவில்;
அந்தக் கோவிலில் கர்ப்பக் கிரகமான மார்பில் குடியிருக்கும் இறைவனை வழிபட வேண்டும்.
ஒவ்வொருவருடைய மார்பிலும் அவன் குடியிருப்பதால்,
மார்பை நோக்கி மனதை ஈடுபடுத்தி வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டு முறையைத்தான்,
எனது மருத்துவ மனைக்கு வருபவர்களுக்குச் சொல்லித் தருகிறேன். ஒரு முக்கால் மணி நேரம்
செய்ய வைத்து, அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்த பிறகு அனுப்பி வைக்கிறேன்.
மருத்துவ
மனபயிற்சி என்னும் வழிபாட்டு முறையை தினசரி காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் ஒரு வேளைக்கு
20 நிமிடங்கள் என செய்து வர வேண்டும். இது ஆன்மீகப் பாதையில் துவக்கம்தான்; இதுதான்
இறுதி கிடையாது. இந்த வழிபாட்டு முறையை வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்து வர வேண்டும்.
உங்களுடைய வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைத்துக் கொண்டே வரும்.
இறைவன் உங்களிடம் குடிகொண்டிருப்பதை
நீங்கள் அறியாமல் தடுப்பது எது?
அவனுக்கும் (உண்மைக்கும்)
உங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதால்தான், உங்களது மார்பில் குடியிருக்கும்
அவனின் இருப்பை உங்களால் உணர முடியவில்லை; உங்கள் பாதுகாப்புக்காக, உங்களுடனேயே அவன் வருவதை உணர முடியவில்லை; “எல்லாம் அவன் செயல்” என்ற தாரக மந்திரத்தை
நம்ப முடியவில்லை. எல்லாத் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்கிறீர்கள். அந்த இடைவெளி
எதனால் ஏற்பட்டது? அந்த இடைவெளி வெற்றிடமாக இருக்கிறதா! அல்லது எதனாலும் நிரப்பப்பட்டுள்ளதா?
வெற்றிடமாக இல்லை; மன அழுத்தத்தாலும், மனக்கவலையாலும் நிரப்பப்பட்டுள்ளது.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
0 Post a Comment: