Friday, April 12, 2019

யோசிக்க கூடாது

 தொழில் தெய்வத்தை” வழிபடும் முறை!


  D 194-TM-இமஆ-              
காலையில் எழுந்தது முதல் படுக்கப்போவது வரை உங்களது செயல்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும். குளிக்கும்போது குளிக்கும் செயலிலும், சாப்பிடும்போது சாப்பிடுவதிலும், நடக்கும்போது நடையிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும். அதாவது வேறு எண்ணங்கள் வரும்போதெல்லாம், அந்த எண்ணங்களை நிறுத்திவிட்டு, செயலில் அல்லது வேலையில் மனதின் கவனத்தை ஈடுபடுத்தச் செய்ய வேண்டும்.

வேலையில் கவனத்தைச் செலுத்தும்பொழுது என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன?
தொழில் தெய்வத்தை வழிபடும்போதும், உடல் அறிவியற்பகுதியாகவும், மனம் ஆன்மீகப் பகுதியாகவும்   இரண்டாகப் பிரிந்து பிறகு இணைந்து பணியாற்றுகின்றன.

அறிவியற் பகுதி:
குளிக்கும் செயலில் கவனத்தை செலுத்துகிறீர்கள்; கவனத்தைச் செலுத்தியவுடன், மனதின் உத்தரவின் பேரில், சிஒரத்தமானது, உடலை தேய்த்துக்கொண்டிருக்கும் கைகளுக்கு சென்று, அது கொண்டுவந்த ஆற்றலை கைகளுக்குக் கொடுத்து, அவைகளின் தேய்மானத்தைக் குறைக்கிறது.

ஆன்மீக பகுதி: மனமானது கைகளால் தேய்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் சிரம உணர்வையும், மன அழுத்ததையும், மனக் கவலையையும் எடுத்துக் கொண்டு கீழ் நோக்கி அல்லது உள்நோக்கிப் பயணிக்கிறது: சென்றுகொண்டே வழிநெடுக சிரம உணர்வையும், மன அழுத்ததையும், மனக் கவலையையும் விட்டுக் கொண்டே செல்கிறது. அவ்வாறு சென்று ஆழ்மனதை அடையும்போது, சிரம உணர்வும் இருக்காது, மன அழுத்தமும், மனக் கவலையும் இருக்காது; அந்த நிலையில், மேல் மனம், ஆழ்மனதுடன் ஐக்கியமாகி, நித்திய ஆற்றல் என்னும் இறை ஆற்றலை எடுத்துக் கொண்டு மேல் நோக்கி வருகிறது; அவ்வாறு கிடைக்கும் இறை ஆற்றல்தான் உங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்துகிறது. மேலே குறிப்பிட்ட அதிசயங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.

கவனவாழ்க்கையிலிருக்கும்போது, நீண்ட நேரம் யோசிக்கக் கூடாது; திட்டம் தீட்டக் கூடாது; யோசித்து முடிவு எடுக்கக் கூடாது. நீங்கள் “அக்கணத்தில் வாழவேண்டும்” இறந்த காலத்திற்காகவோ, எதிர்காலத்திற்காகவோ வாழக்கூடாது. அப்படி வாழும்போதுதான், துன்பங்களும் துயரங்களும் வருகின்றன.

நமது இந்து மத மகான்கள் ரவி சங்கர் ஷீ, அமிர்தானந்த மயீ ஆகியோர் “நிகழ்காலத்தில் வாழ அதாவது அக்கணத்தில் வாழ” அறிவுறுத்தியிருக்கிறார்கள்.  மகான் ஜே.கே என்னும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் “ஒரு நாளில் இருவேளை தியானம் செய்வதைக்காட்டிலும், நாள் முழுவதையும் தியானமாக்குவதுதான் சிறந்த பலனளிக்கும்” என்று சொல்கிறார்.  கிருஷ்ண பகவான் “செய்யும் தொழிலில் அல்லது செயலில் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். அது மனதின் அமைதிக்கும், வாழ்க்கை வளத்திற்கும் வழிவகுக்கும்” என்று செய்யும் தொழிலில் தெய்வமிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.  அப்படி வாழும்போதுதான், மேற்கூறிய அதிசயங்கள் நடக்கும்.

           கவனவாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்!
               ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

                      
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: