Saturday, April 20, 2019

ரிசர்வு போலீஸ்


உங்கள் உடலில் “Armed Reserve Police!” 

A 142-MM 1-ம.ம.தியரி-

மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தின் கொள்கை {(Theory of the Medicine of Medicinal Meditation (MMM)}.

சிறப்பு ரிசர்வு போலீஸ் இருப்பதைப் போல, உங்கள் உடலிலும் சிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்தம் (சிஒர) இருக்கிறது. ஒரு ஊரில் கலகம் ஏற்பட்டு விட்டால், அந்த கலகத்தை அடக்க, சிறப்பு ரிசர்வு போலீஸ், மேலிடத்தின் உத்தரவின் பேரில், அங்கு சென்று கலகத்தை அடக்கிவிட்டு திரும்பும். 

அதே போலத்தான், உங்களது உடலிலுள்ள சிஒர, வேலை செய்யும்போது, வேலையில் ஈடுபடுகின்ற உறுப்புகளுக்குச் (organs) சென்று, அது கொண்டு வந்த ஆற்றலை (Energy) அவ்வுறுப்புகளுக்குக் கொடுத்து, அவைகளின் தேய்மானத்தைத் தடுக்கும். அதன் மூலம் உடலின் பலவீனம் குறைக்கப்பட்டு, தேக்கமுறும் கழிவுகளும் குறைக்கப்படுகின்றன. உடலின் பராமரிப்பு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. இவ்வாறு நோய்கள் தோன்றுவது தடுக்கப்படுகின்றன.

உதாரணமாக, சாப்பிடும்போது, டி.வி. பார்த்துக்கொண்டே சாப்பிடுவதாக, வைத்துக்கொள்வோம். ஒரு பலாத்கார காட்சி வருகிறது; அதைப் பார்த்தவுடன் மூளையில் அதிர்ச்சி ஏற்படுகிறது; மூளை பாதிக்கக்கூடாது என்பதற்காக, சிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்தம் (சிஒர) மூளைக்குச் சென்றுவிடுகிறது. ஆனால் சிஒர சாப்பிடும் வேலை செய்யக்கூடிய கண்கள், கைகள், உதடுகள், பற்கள், நாக்கு, தொண்டை, இரப்பை ஆகிய உருப்புகளுக்குச் செல்ல வேண்டும். சிஒர அவைகளுக்குச் செல்லாததால், அவ்வுறுப்புகளில் தேய்மானம் ஏற்பட்டு, பலவீனமாகி, நோய்கள் தோன்றுகின்றன 

                 ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

  Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: