இம--தொலைத்த ஒன்றை 20 ஆண்டுகள் கழித்து மீட்டெடுத்தேன்!
t9-8-1998 ஆண்டிலேயே ரீகி சிகிச்சை முறையை (ஜப்பான் சிகிச்சை முறை) கற்றுக்கொண்டேன். அப்பொழுது நான் அரோமணியின் நான்கு இயற்கை விதிகளை மட்டும் கண்டுபிடித்து, அவற்றை நடைமுறைப்படுத்தி வந்தேன். மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தையும் (Medical of Medicinal Meditation) அறிந்திராத காலம். ஆகவே சளிக்கும், இளப்புக்கும் மருந்து மாத்திரைகளைத்தான் எடுத்துக் கொண்டு வந்தேன். அதனால் மிகவும் நெருக்கடியாக இருக்கும நேரங்களில் ரீகி சிகிச்சையால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அலுவலகத்தில் எனக்கு ஏற்பட்ட சோதனைகளால், இறைவனின் செயலால், அச்சிகிச்சையை தொடராமல், விட்டு விட்டேன். காலப்போக்கில் அதை இறைவன் மறக்கடிக்கச் செய்தான்.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல்
வாரத்தில் ஒரு நாள் காலை நேரத்தில், பல்வலி எடுக்கவும், என்னையறியாமல் பல் வலியிருக்குமிடமான
இடது கன்னத்தில் கை வைத்தேன். பல் வலி குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து 10 நிமிடங்கள்
வைத்திருந்தேன். பல் வலி முற்றிலுமாகக் குணமாகிவிட்டது. உடனே எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு
அளவேயில்லை. இறைவன், என்னிடமிருந்து எடுத்த ரீகி ஆற்றலை மீண்டும் தந்துவிட்டான். அதுவும்
முக்கியமான நேரத்தில், தேவைப்பட்ட நேரத்தில் கிடைக்கச் செய்தான். அது எப்படி என்பதை
விளக்குகிறேன்.
எனது இடது கால் ஊனமானதால்,
75 ஆண்டுகளாக எனது உடலின் முழு எடையையும் வலது கால் தாங்கி வந்ததால், வலது கால் மூட்டில்
வலி எடுக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் எனது நடமாட்டம் குறைந்து விட்டது. இது எனக்கு
மிகுந்த வேதனையைக் கொடுத்தது. இறைவன் எனக்கு பணித்த பணியை முடிக்காமலே போய்விடுவோமோ
என்ற கவலை என்னை மிகவும் நொந்து போகும் நிலைக்குக் கொண்டு சென்றது. “மீண்டும் பழைய
நடை வருமா!” என்ற ஏக்கப் பயம் வந்துவிட்டது.
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.
0 Post a Comment: