Wednesday, April 17, 2019

1984 செப்டம்பர்

இம--1984-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி எனது வாழ்வில் மறக்க முடியாத நாள்!


மூக்கில் தோன்றிய சதை வளர்ச்சி (Nasal polyp) மூக்கினால் மூச்சுவிடுவதை முழுவதுமாக நிறுத்திவிட்டது. அதன் பிறகுதான் 1979 ஆண்டு அறுவை சிகிச்சை செய்து சதை அகற்றப்பட்டது. மூன்று ஆண்டுக்குள் மீண்டும் சதை வளர்ச்சி ஏற்பட்டு 1982-ல் அறுவை சிகிச்சை செய்து, வளர்ந்த சதை அகற்றப்பட்டது. எனது உடலின் மிகவும் மோசமான நிலையில், 1984-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மகான் மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலைத் தியானம் (Transcendental Meditation) கற்று தவறாது பயிற்சி செய்து வந்தேன். எனது ஆன்மீகப் பவர் அதிகரித்ததால், எனது மனவளம் அதிகரித்து அறியாமை அகன்றுகொண்டே வந்தது.

இந்த தியானத்தின் பலனாக, 10 ஆண்டுகள் கழித்து, 1992-ல் மூன்றாவது தடவையாக, மூக்கில் வளர்ந்த சதை அறுத்து அப்புறப்படுத்தப்பட்டது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் புகை மற்றும் தூசி எனது மூக்கின் சதை வளர்ச்சியை விரைவு படுத்தியது. ஆகவே மூக்கடைப்பு முழுமையாக இருந்ததால், 1993-ஆம் ஆண்டு சூன் மாதம் நான்காவது முறையாக வளர்ந்த சதை அறுத்து எறியப்பட்டது. தொடர்ந்து செய்த ஆழ்நிலைத்தியானத்தினால், மனவளம் அதிகமானது. அறியாமை குறைந்தது. ஆன்மீக ஆற்றல் கூடியது. நோய்களின் தீவிரம் குறைந்தது.

                 ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: