Sunday, April 7, 2019

மடல்

தினத்தந்திக்கு மடல்-நோய்கிருமிகள் மற்றும் அரோமணியின் 11 விதிகள் பற்றியது.

J 195-TMJ- கழிவுபொருட்கள்-
     அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை
              57/176A6, 3-வது தெரு, பேரையூர் சாலை,
                 உசிலம்பட்டி-625532.
                  செல் எண்கள்: 9442035291, 7092209028.

அன்புள்ள ஐயா,
வணக்கம். நாம் தினத்தந்தி சந்தாதாரர். 6-4-2019, தினத்தந்தி, கட்டுரை  பக்கத்தில், “நோயை விரட்டுவோம் உடல்நலம் காப்போம்…!” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறீர்கள். அதில் கட்டுரை ஆசிரியர் “மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஆகிய நோய்கள் கொசுக் கடியால் பரவுவதாகக் கூறியிருக்கிறார். நாம் 30-9-2018 அன்று அனுப்பிய மின்னஞ்சல் கட்டுரையில், மேற்குறிப்பிட்ட நோய்கள், கொசுக் கடியால் வருபவை அல்ல. கொசுக்களைப் பற்றிய எனது ஆராய்ச்சியில், பல இரவுகள் கொசுக்கள் என்னைக் கடிக்க அனுமதித்திருக்கிறேன். ஆனால், மேற்குறிப்பிட்ட நோய்கள் என்னை வந்து தாக்க வில்லை.

அனைத்து நோய்களும் கிருமிகளால் தோன்றுவதில்லை; உடல் தன்னைத் தானே பராமரிக்கிறது. அவ்வாறு பராமரிக்கும்போது, உடல் தேங்கிய கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது; அவ்வாறு வெளியேறும்போது, ஏற்படும் தொந்தரவுகளைத்தான் நோய்கள் என்று சொல்லுகிறோம். கழிவுப் பொருட்களின் தன்மை, அவை கொடுக்கும் தொந்தரவுகளின் தன்மை ஆகியவற்றைப் பொருத்து, நோய்களுக்கு பெயரிடுகிறோம். உடலிலுள்ள கிருமிகள் உண்மையில் உடலில் சேர்ந்து வெளியேறமுடியாத கழிவுப்பொருட்களை உண்டு அழிப்பதற்கு இறைவனால் உடலில் படைக்கப்பட்டவை. அது சம்பந்தமான கட்டுரை ஒன்றினை இத்துடன் இணைத்துள்ளேன் (இணைப்பு-1)

கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டதைப் போல வாழ்வியல் விதிகளை மக்கள் கடைப்பிடிப்பதில்லை, வாழ்க்கையில் அரோமணியின் 11 இயற்கை விதிகளை மீறுவதால்தான் நோய்கள் தோன்றுகின்றன. அந்த விதிகளைக் கடைப்பிடித்து வந்தால், இருக்கிற நோய்களிலிருந்தும் நலம் பெறலாம்; நோய்கள் வராமல் தடுத்தும் விடலாம். அந்த 11 விதிகளின் விபரங்களை இத்துடன் இணைத்துள்ளேன் (இணைப்பு-2). 

எமது ஆராய்ச்சிக் கட்டுரைகளை “தினத்தந்தி” நாளிதழில் வெளியிட்டால், மக்கள் அறியாமையிலிருந்தும், நோய்களைப்பற்றிய பயத்திலிருந்தும் விடுபடுவார்கள். ஆகவே எமது கட்டுரைகளை வெளியிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள 
ஹீலர் R.A.பரமன் (அரோமணி)/6-4-2019
அ.ஆ.மை.ம. மருத்துவமனைக்காக
                                           
இணைப்பு: இரண்டு BOOK  கட்டுரை 1 ” நோய்களை வரவேற்று கொண்டாடுங்கள்!;, கட்டுரை 2-”அனைத்து நோய்களுக்கும் அருமருந்து.”


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: