நோய்களை தோற்றுவிக்கும் மின்கருவி! (முக).
G 197-TM- AC-(முக)
குளிரூட்டும் சாதனம் (Air
condition).
பட்டிமன்ற பேச்சாளரின் வருத்தப்படக்கூடிய செயல்பாடு!
எனக்கு வந்த ஒரு தகவல், எனக்கு மிகவும் அதிர்ச்சியைக்
கொடுத்தது. ஒரு பிரபல பட்டி மன்ற பெண் பேச்சாளர். ஒரு பிரபல தமிழ் டிவியில் தொடர்ந்து
பட்டி மன்ற பேச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரை தென் மாவட்டம் ஒன்றில், மகளிர்
உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டு, வந்தார்.
அந்தப் பள்ளியின் ஆசிரியை ஒருவர் பள்ளி காரை எடுத்துச்
சென்று அவரை அழைத்து வந்திருகிறார். அந்தக் கார் ஏ.சி பொருத்தப்படாத கார். ஏ.சி இல்லை
என்றவுடன், காரில் ஏறியதிலிருந்து பள்ளி வரும் வரை அந்த பட்டிமன்ற பேச்சாளர் ஆசிரியை
திட்டித்தீர்த்திருக்கிறார் “ஏ.சி இல்லாத காரை வைத்திருக்கிற, உங்கள் பள்ளிக்கு என்னை
அழைக்க என்ன தகுதி இருக்கிறது? உங்களுடைய தகுதி தெரியாமல், விழாவில் கலந்து கொள்ள சம்மதம்
தெரிவித்தது என் தவறு-----------!” இதுபோல பள்ளி வந்து சேரும் வரை திட்டிக் கொண்டே
வந்திருக்கிறார். அந்த ஆசிரியை கூனிக் குறுகி ஒன்றும் சொல்ல முடியாமல் வந்திருக்கிறார்.
அதைக் கேள்விப்பட்டது முதல், அந்தப் பட்டிமன்ற பேச்சாளர் மீது கோபம் வருவதற்குப் பதில்,
அவருக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஒன்றரை மணி நேரத்தில் பள்ளி வந்துவிடப் போகிறது.
அந்த ஒன்றரை மணி நேரம் கூட வெளியில் நிலவும் தட்ப வெட்ப நிலையைத் தாங்கிக் கொள்ள முடியாத
அளவுக்கு அவர் தனது உடலை கெடுத்து வைத்திருக்கிறார்.
இறைவனின் கட்டளை!
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏ.சி பயன்படுத்துவதைப்
பற்றி எழுதலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்து கொண்டிருந்தேன். காரணம்
சுற்றுச் சூழல் மாற்றம் காரணமாக வெப்ப நிலை கூடிக்கொண்டே போகிறது. அதனால் ஏ.சி பயன்பாடு
அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் எனது கருத்து எடுபடுமா என்ற எண்ணத்தினால்
ஏற்பட்ட தடுமாற்றத்தில் இருந்தேன். பட்டிமன்ற பேச்சாளர் நடந்துகொண்ட முறையைக் கேட்ட
பிறகு, மக்களுக்கு விழிப்புணர்வை (Awareness) உண்டாக்க ”நீ எழிதி ஆக வேண்டும்” என்று
இறைவன் கட்டளை யிட்டான். நானும் உடனே எழுதத் தொடங்கி விட்டேன்.
நோய்கள் என்பது என்ன?,
உடல் ஒரு சிறந்த நிர்வாகி (Administrator); ஒரு
சிறந்த தானியங்கி (Automatic). தனக்குள்ள நோய்களைக் குணப்படுத்தும் வல்லமையைக் கொண்டது..
நோய்கள் என்பது என்ன?, உடல் தன்னைப் பராமரிக்கும்போது,
கழிவுப்பொருட்களை வெளியேற்றுகின்றன. தினசரிப் பராமரிப்பில் காலையில் மலம், சிறுநீர்
வெளியேற்றப்படுகின்றன. அவைகள் சீராக வெளியேறிவிட்டால், நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள்.
அன்று முழுவதும் மகிழ்ச்சியுடனும், சுறு சுறுப்பாகவும் இயங்குகிறீர்கள். அதே மலம் முழுவதும்
சீராக வெளியேறாமல் சிறிது தங்கிவிட்டால், உங்களது சுறு சுறுப்பே போய்விடும். இது உங்களுக்கு
தொந்தரவுதானே! அதை மலச்சிக்கல் (Constipation) என்று சொல்கிறோம்.
உரப்புச் சேராதவர்கள், ஆசையை அடக்க முடியாமல், சிறிது
அதிகமாகக் காரச் சட்டினியைச் சேர்த்துக் கொண்டால், மலம் இரண்டு மூன்று தடவை கடுத்துக்
கொண்டு நழுவி வரும்; சோர்வு இருக்கும்; உடல் பலவீனப்படும். இது உங்களுக்கு ஒரு தொந்தரவுதானே! இதை வயிற்றுக்கடுப்பு (Dysentery) என்று சொல்கிறாம்.
ஆசையினால், பிடித்த உணவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால்,
வயிற்றோட்டம் (Diarrhea) ஏற்படுகிறது. இதனால், உங்களுக்கு சோர்வும், களைப்பும் ஏற்படுகிறது;
இது உங்களுக்கு தொந்தரவுதானே! இதைத்தான் வயிற்றோட்டம் என்கிறோம். மேற்சொன்னவாறு கழிவுப்பொருட்கள் வெளியேறும்போது
ஏற்படும் தொந்தரவுகளைத்தான் நோய்கள் என்று சொல்கிறோம்.
நோய்களுக்குப் பரிகாரங்கள்!
நோய்களுக்குறிய பரிகாரங்களைச் செய்து, அவற்றை வராமல் தடுக்க வேண்டும்., என்ன பரிகாரங்கள்? மலச்சிக்கல் ஏற்படாமலிருக்க, உழைப்போ,
உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்; பிறகு, வெறும் வயிற்றிலோ
அல்லது பசியுடனோ அவற்றை செய்யக்கூடாது; முழுச் சாப்பாட்டை சாப்பிட்ட பிறகுதான் மேற்கொள்ள
வேண்டும்;
ஆசையை அடக்க மனதை வளப்படுத்த வேண்டும். அதற்கு மருத்துவ மனப்பயிற்சியை (Medicinal
Meditation) தவறாது செய்து வர வேண்டும். நோய்கள் வராமலிருக்க அரோமணியின் 11 இயற்கை
விதிகளை (Aromani’s 11 Natural Principles) தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.
ஆகவே உங்களது உடல், உங்களது உடல் மன நலத்தைப் பேணிக்
காக்கும்படியாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பராமரிப்புக்காகவே, உயிருக்கு எண்ணம்,
சொல், செயல் இருப்பதைப்போல, உடலுக்கும் அது, தனியாக எண்ணும்படியாகவும், சொல்லும்படியாகவும்,
செயல்படும்படியாகவும் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உடல் பேசாது; அதற்குப் பதில்
தனக்கு விருப்பமில்லை என்பதை ‘ஒவ்வாமை (Allergy)’ மூலம் வெளிப்படுத்துகிறது.
நோய்களுக்கும் கிருமிகளுக்கும் தொடர்பில்லை!
உங்களுக்கு தெரிய வேண்டிய முக்கியமான மற்றொன்று,
நோய்கள் கிருமிகளால் (By germs) தோன்றுவதில்லை. அவைகளால் காற்று மூலமும் நீர் மூலமும்
நோய்கள் பரப்பப்படுவதும் இல்லை. இதை எனது முந்தைய “நோய்கள் உங்களை வாழ வைக்க வரும்
தேவதூதர்கள்” என்ற கட்டுரையில் விரிவாக விளக்கியிருக்கிறேன்.
நாகரீக வளர்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள்
அனைத்தும் மனிதனின் சவுகரியத்திற்காக, வணிக வளர்ச்சிக்காகக் (Business development)
கண்டுபிடிக்கப்பட்டவை; அப்படி கண்டுபிடிக்கும்போது மனிதனின் உடல் மன நலத்தை கணக்கில்
எடுத்துக்கொள்ளவில்லை. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான் ஏர் கண்டிசன் என்னும் குளிரூட்டும்
சாதனம் (Aircondition). இந்த குளிரூட்டும் சாதனம் மனிதனுக்கு சில சவுகரியங்களைக் கொடுத்தாலும்,
பல மோசமான உடல்மன நலப் பிரச்சனைகளை கொண்டுவந்திருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
ஏர் கண்டிசனால் ஏற்படும் நன்மைகள்!
பெரும்பாலான மக்கள் சூடான மற்றும் ஈரப்பதமான (Humidity) கோடை காலத்தில் தங்கள் வீடுகளில் அல்லது அலுவலகங்களில் வசதியாக இருக்க குளிரூட்டிகளை பயன்படுத்துகின்றனர். இப்பொழுது எல்லாக் காலங்களிலும் கண்மூடித்தனமாக
பயன்படுத்துகின்றனர்.
நீர் இழப்பு மற்றும் நீர்ப்போக்கான ( water
loss and dehydration) அபாயத்தை குறைக்கலாம்.
காற்றுச்சீரமைப்பிகள் (Air conditioners) காற்று வெப்பநிலையை குறைக்கும் என்பதால், அவை வெப்பக் கோளாறுகளைத் (Heat disorders) தடுப்பதில் உதவியாக இருக்கும்
சுற்றுச்சூழல் ஒவ்வாமை,, தூசி ஆகியவற்றைத் தடுக்க உதவுகிறது.
மேற்கூறப்பட்ட நன்மைகளை உடலே கொடுக்கும்படியாக
மிக மிக உயந்த தொழில் நுட்பத்துடன் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக,
மூக்கில் நாசித்துவாரத்தில் உள்ள ரோமங்கள், காற்றில் வரும் தூசியை வடிகட்டித்தான்
அனுப்புகிறது. நமது உடலைச் சரியாகப் பயன்படுத்தாமல், வணிக வளர்ச்சிக்காகக்
கண்டுபிடிக்கப் பட்டதுதான் ஏ.சி.
ஏர் கண்டிசனால் ஏற்படும் தீமைகள்!
பசுமை இல்ல வாயுக்கள் (Green gases) மற்றும் பிற மாசுபடுதல்கள் (Other dusts) தோன்ற மறைமுக
காரணமாக இருக்கிறது., ஆஸ்துமா, மார்பு மற்றும் பிற சுவாச நோய்களில் உள்ள இறுக்கம்(Tightness) போன்ற உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. காற்று குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் செலவழிக்கும் போது உங்கள் தோல், அதன் ஈரப்பதத்தை இழக்கிறது. இதன் மூலம் உணர்திறன் குறைகிறது; தோல் வறட்சி ஏற்படுகிறது. இது சளிச்சுரப்பியின் (MUCOUS MEMBRANE) எரிச்சலையும் வறட்சியையும் ஏற்படுத்தும்
தோலின் செயல்பாடுகள்.
தோல், மூன்று முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது: பாதுகாப்பு, கட்டுப்பாடு அல்லது ஒழுங்குபடுத்துதல் மற்றும் உணர்வு.
தோல் உடலைப்
பாதுகாக்கும் பணியைச் செய்கிறது.
தோலின் முதன்மை செயல்பாடு ஒரு தடையாக (Barrier) செயல்படுகிறது. தோல், உடலுக்கு, இயந்திர தாக்கம் (Mechanical
impact) மற்றும் அழுத்தம், வெப்பநிலை வேறுபாடுகள், கதிர்வீச்சு (Radiation) இரசாயனம் (Chemicals) ஆகியவற்றிலிருந்து
பாதுகாப்பு வழங்குகிறது .
தோல் ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்கிறது.
தோல், உடலியலியலில் உள்ள பல அம்சங்களை ஒழுங்குபடுத்துகிறது: உடலில் உள்ள வியர்வை மற்றும் முடி வழியாக உடல் வெப்பநிலை, மற்றும் வியர்வை வழியாக பரந்த சுழற்சி மற்றும் திரவ சமநிலை மாற்றங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது. இது வைட்டமின் டி தொகுப்பின் ஒரு நீர்த்தேக்கமாக (Reservoir) செயல்படுகிறது.
தோல் ஒரு உணர்வு உறுப்பு (Sense organ) ஆகும்
தோல், சுற்றுச் சூழலில் உள்ள மாற்றங்களைக் கண்டறிந்து, அவற்றிலிருந்து மீள்வதற்கு நரம்பு செல்கள் (Nerve cells) ஒரு பரந்த நெட்வொர்க் கொண்டிருக்கிறது. வெப்பம், குளிர், தொடுதல், வலி ஆகியவற்றுக்கான தனி வாங்கிகள் (Receptors) உள்ளன. இந்த நரம்பு செல்கள் பாதிக்கப்படுவதால் நரம்பியல் (Neuropathy) எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணர்வு இழப்பு ஏற்படுகிறது. ஆகவே நரம்புத் தளர்ச்சி நோயாளிகள் காயத்தினால் பாதிக்கப்படுகையில், வலியை உணர மாட்டார்கள்,
உடலில் ஏற்படும் கழிவுகள்
கண்ணீர், எச்சில்,
வியர்வை, வாயு, சளி, சிறுநீர் மற்றும் மலம் ஆகியவைகள்தான் உடலில் ஏற்படும்
கழிவுகளாகும். உடல் பலவீனமாகும்போது மேற்குறிப்பிட்ட கழிவுகள் அதிகரிக்கின்றன.
இந்த சாதாரண கழிவுகள் சிறுநீர், மலம் முதலியன, உடலின் தினசரி பராமரிப்பால்,
அப்போதைக்கப்போது வெளியேறிக்கொண்டே இருக்கும். அப்படி வெளியேறாமல் தங்கிவிட்டால்,
தேக்கமுற்ற கழிவுகளாக மாறிவிடுகின்றன..
உடலின் பராமரிப்பு
மேற்குறிப்பிட்ட
கழிவுகளை, உடல் மாதப் பராமரிப்பு, காலாண்டுப் பராமரிப்பு, அரையாண்டு பராமரிப்பு
மற்றும் ஆண்டுப் பராமரிப்புகளைக் கொண்டு வெளியேற்றுகின்றன. இப் பராமரிப்புகளை உடல்
எப்படி மேற்கொள்ளுகிறது? பராமரிப்புக்கு உடல் தேர்ந்தெடுக்கும் வெப்பநிலை
குளிர்ச்சி. குளிர்ச்சியானது உடலை சுருக்கி, பிழிந்து தேங்கியுள்ள கழிவுப்
பொருட்களை உடலை விட்டு வெளியேற்றுகின்றன. அதனால்தான் குளிர்காலத்தில் நோயாளிகளின்
எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரிக்கும். இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கும்.
கோடை, வசந்த காலங்களில், மழைக் குணம், மேகமூட்டம், சாரல் பெய்தல் போன்ற நாட்களில்
நிலவும் ஈரப்பதத்தில் உண்டாகும், குளிர்ச்சியைக் கொண்டு, மாத, காலாண்டு மற்றும்
அரையாண்டு பராமரிப்புகளை உடல் மேற்கொள்ளுகிறது. அந்தக் காலங்களில் மக்கள்
தும்மலாலும், இருமல் சளி காய்ச்சல், தலைவலி ஆகியவற்றால் இலேசாக பாதிக்கப்படுவதை
உங்கள் அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு பூமியில் நிலவும் வெப்ப
வேறுபாடுகளைக் கொண்டுதான், உடல் தன்னைப் பராமரிக்கிறது
அரிப்பு
ஆண்டுப்
பராமரிப்பில் வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்களில் ஒன்றுதான் அரிப்பு. இந்த
அரிப்பு நவம்பர் கடைசி வாரத்தில் தோன்றி, மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கும்.
அதற்குப் பிறகு அரிப்பு முழுவதுமாக இல்லாமல் போய்விடும். இந்த இடைப்பட்ட காலத்தில்
நீங்கள் மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும், மாத்திரைகளை நிறுத்தி விட்டால், அரிப்பு
மீண்டும் வந்து விடும். அதுதான் உடலின் வல்லமை. அது மேற்கொள்ளும் ஆண்டுப்
பராமரிப்பை எந்த மாத்திரைகளாலும் தடுக்க முடியாது.
அரிப்பு யாருக்கு வருகிறது?
ஏன் வருகிறது? சரியான உடலுழைப்பு உள்ளவர்களுக்கு வியர்வைத் துவாரங்கள் திறந்தே இருப்பதால்,
அவர்களுக்கு அரிப்பு வராது. என்னைப் போன்ற கால் ஊனமுற்றவர்களுக்கு உடலுழைப்புக் குறையும்போது,
வியர்வைத் துவாரங்கள் அடைபட்டு விடுவதால், அரிப்பு வருகிறது.
அரிப்பு வரும்போது சொறிகிறோம். அதாவது சொரண்டுகிறோம்.
அவ்வாறு சொரண்டுவதின் மூலம் அடைபட்டிருக்கும் வியர்வைத் துவாரங்கள் திறந்து
கொள்கின்றன. இப்படித்தான் உடல் பராமரிப்பு மூலம் துவாரங்களைத் திறக்கச் செய்து,
வரும் எட்டு மாதங்களுக்கு (கோடை காலம் மற்றும் வசந்த காலத்திற்கு) உடலை வேலை
செய்யத் தயார் படுத்துகிறது. இது தெரியாமல்தான், மாத்திரைகளை சாப்பிட்டு அரிப்பை
அடக்கி, உடல் செய்யும் பராமரிப்பு வேலைக்கு இடைஞ்சல் செய்கிறோம்.
ஆண்மைக் குறைவு!
எனது ஆராய்ச்சியில்
நான் கண்டுபிடித்தது என்னவென்றால், மாத்திரை சாப்பிட்டவுடன், எனக்கு தெளிவாகத்
தெரிந்தது, அந்த மாத்திரைகள் அரிப்பை அடக்குகின்ற அதே நேரத்தில், பாலியல் உணர்வை
குறைத்துவிடுகிறது. எந்த நோய்க்கு மாத்திரைகள் சாப்பிட்டாலும், நோய்களை அடக்கி
வைத்து விட்டு, அதன் முதல் பக்கவிளைவாக பாலியல் உணர்வைக் குறைத்து விடுகிறது.
இன்சுலின் தவறாது போடுபவர்களுக்கும் பாலியல் உணர்வு குறைந்து, அவர்கள் தாம்பத்ய
வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி விடுகிறார்கள். கணவன் மனைவி ஆகிய ஒருவருக்கு சர்க்கரை
வியாதி இருந்தால், மற்றவர், கணவனுக்கு/மனைவிக்கு
“தன் மீது அன்பு குறைந்து விடுமோ” என்ற மன அழுத்த எண்ணத்தில் இருப்பார். இதை நான்
எழுத வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.
பல இளைஞர்கள், இடை
வயதினர், முதிய வயதினர் என்னிடம் “சார், எனது ஆண்மைக் குறைவை சரி செய்ய முடியுமா, சரி செய்யுங்கள் சார்!
உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்! எனது மனைவியைப் பார்க்கும்போதெல்லாம், குற்ற
உணர்வு என்னைப் பாடாப் படுத்துகிறது!” என்று அழாத குறையாகச் சொல்வார்கள். அவ்வாறு
கேட்பவர்களில் சர்க்கரை நோயாளிகளும் இருப்பார்கள்.
சர்க்கரை நோயை
மருந்தில்லா மருத்துவங்களும், பிற மருத்துவங்களும் குணப்படுத்திவிடும் என்றாலும்,
நவீன மருத்துவம் “சர்க்கரை நோயாளிகள், இன்சுலின் தவறாது எடுக்காவிட்டால், கால்
போயிடும், கண் போயிடும்” என்று பயமுறுத்துவதால், அவர்கள் பிற மருத்துவங்களில்
சிகிச்சை எடுக்கத் தயங்குகிறார்கள். சர்க்கரை நோயைப் பற்றிய ஒரு ஆராய்ச்சிக்
கட்டுரை “நோய்க்குரிய மருந்தே, நோயை வளர்க்கிறது” என்ற தலைப்பில்
எழுதியிருக்கிறேன். தயவு செய்து, அதைத் தவறாது படியுங்கள். .
நோய்கள் வராமல் தடுக்கும் வழி
எந்த நோயையும்
அரிப்பு உட்பட, வரவிடாமல் தடுக்க வேண்டுமென்றால், உடலை வலிமைப்படுத்தி, கழிவுப்
பொருட்கள் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேறு மருத்துவங்களில் சிகிச்சை
எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அரிப்பின் தாக்கத்தைக் குறைக்கலாமே தவிர, முழுவதுமாக
இல்லாமல் செய்ய முடியாது. மார்ச் முதல் வாரத்தில் தானாகவே போய்விடும்.
மக்கள் அரோமணியின் பதினொரு இயற்கை
விதிகளை, அதிக அளவு மீறும்போது, தேக்கமுற்ற கழிவுகள் நிரந்தரத் தேக்கமுற்ற
கழிவுகளாக மாறிவிடுகின்றன நிரந்தரத் தேக்கமுற்ற கழிவுகள் மேற்சொன்ன
கழிவுப்பொருட்களாக வெளியேற்ற முடியாத நிலையில், கிருமிகள், புழுக்கள் உடலுக்குள்
படைக்கப்படுகின்றன. அவைகள் அந்த நிரந்தரக் கழிவுகளை சாப்பிட்டு அழித்துவிட்டு,
அவைகளும் இறந்துவிடுகின்றன. கிருமிகள் சாப்பிட்டும் அழிக்கமுடியாத
கழிவுப்பொருட்கள்தான் மரணத்திற்குத்
தள்ளிவிடுகிறது. இந்த கழிவுப் பொருட்கள்தான் ஒன்று சேர்ந்து கேன்சர் கட்டியாக
மாறி, நலம் பெறமுடியாத நிலைக்கு நோயாளி தள்ளப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்.
தட்ப வெட்ப மாறுபாடு அவசியமா?
ஏர் கண்டிசன்
சாதனத்தின் மூலம், அறையில் 22 °C, 26 °C வெப்ப நிலை இருக்கச் செய்யப்படுகிறது.
இதுவே தவறு; உடல் மன நலத்தைப் பாதிக்கக் கூடியது. உங்கள் உடலின் வெப்பநிலை 37 °C மற்றும் வெளியில் 39 °C இருக்கிறது ஆகவே வெளியே உள்ள வெப்பநிலைக்கும் அறையின் வெப்பநிலைக்கும் 17 °C, 13 °C என்று வேறுபாடு இருக்கிறது. ஆண்டுமுழுக்க ஏர் கண்டிசன் அறையிலேயே
காலத்தைக் கழிக்கிறார்கள். அவர்களுக்கும், அறைக்கு வெளியில் ஏற்படும் வெப்ப
மாறுபாடுகளுக்கும் உள்ள தொடர்பைத் துண்டித்துவிடுகிறார்கள். ஆனால் அந்த வெப்ப
மாறுபாடுகள்தான் அவர்களின் உடல்மன நலத்தை பாதுகாக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்.
கோடை, குளிர் காலங்களில் நிகழ்வது என்ன?
கோடை காலத்தில் உள்ள
வெப்பம் தோலை விரிவடையச் செய்து, அதிக அளவு வியர்வையை வெளியேற்றி, சிறுநீரின் அளவை
குறைத்துவிடுகிறது. இதன்மூலம், சிறுநீரகத்தின் வேலைப்பளு குறைக்கப்படுகிறது;
வியர்வை, சிறுநீர் வெளியேற்றத்தால்,
உடல்மன நலம் கிடைக்கிறது. குளிர்காலத்தில் நிலவும் குளிரால், தோல் சுருங்கி,
வியர்வைத் துவாரங்கள் அடைக்கப்பட்டு, சிறிதளவு வியர்வை வெளியேற்றி, சிறுநீரின் அளவை
அதிகரிக்கிறது. அதன்மூலம் தோலின் வேலைப் பளு குறைக்கப்படுகிறது. அதே சமயம்
கழிவுப்பொருட்களின் சீரான வெளியேற்றத்தால், நோய்கள் குணமாகி உடல்மன நலம்
கிடைக்கிறது. வசந்த காலத்தில் தோலும், சிறுநீரகம் சீராக செயல்பட்டு வியர்வையையும்,
சிறுநீரையும் வெளியேற்றி, உடல் மன நலம் கிடைக்கிறது.
மூளையும், வியர்வைச் சுரப்பிகளும் தசைகளும் பழுதாகிவிடலாம்!.
மூளையில், உடலின் வெப்பநிலையை (body
temperature) நிலையாக 37 டிகிரி செண்டிகிரேடில் வைப்பதற்கு முறைப்படுத்தும் மையம் ஒன்றிருக்கிறது. அந்த மையம், வியர்வைச் சுரப்பிகள் மற்றும் தசைகளின் (sweat
glands and muscles) உதவிகொண்டு, உடலின் வெப்பநிலையை நிலையாக 37 டிகிரி செண்டிகிரேடில் வைத்திருக்கிறது. வியர்வைச் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டுமென்றால், மூன்று
காலங்களிலும் வெப்ப நிலை மாறுதல்களைச் தோல் சந்திக்க வேண்டும். ஆனால் அப்படிச் சந்திக்காதவாறு
ஏர் கண்டிசன் அறை ஒரே வெப்பநிலையிலேயே வைத்திருப்பதால், மூளையும், வியர்வைச் சுரப்பிகளும்
தசைகளும் பழுதாகிவிடலாம்.
மனைவியைத் தொடும்போது உணர்வு எதுவும் இல்லாமல் போனால்!
காயம் (Shore) ஏற்பட்டுவிட்டால், அது தோலின் அனைத்து செயல்பாடுகளையும் பாதிக்கிறது என்று இருக்கும்போது, தோல் வெப்பநிலை மாறுபாடுகளுக்கு
உட்படுத்தாமல் ஒதுக்கி வைத்தால், அது எந்த அளவுக்கு தோலின் செயல்பாடுகளைப்
பாதிக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு உணர்வை
எடுத்துக்கொள்ளுங்கள். உணர்வு பாதிக்கப்பட்டால், வெப்பம், குளிர், தொடுதல், வலி ஆகியவையினால்
ஏற்படும் உணர்வு உங்களுக்கு இல்லாமல் போய்விடும். தாம்பத்ய உறவின் போது, மனைவியைத்
தொடும்போது உணர்வு எதுவும் இல்லாமல் போனால், உங்கள் நிலையை எண்ணிப் பாருங்க்ள்!
செயற்கை குளிர்ச்சி!
வெப்பம் ஐந்து இயற்கை சக்திகளில் ஒன்று. அந்த
வெப்பம், வெளியே நிலவும் வெப்ப வேறுபாடுகளின் மூலம்தான் தோலுக்குக் கிடைக்கிறது.
ஏர் கண்டிசன் அறையில் வெப்ப வேறுபாடு தடுக்கப்பட்டு, குளிர்ச்சி மட்டும்
கிடைக்கும்படியாக செயற்கை முறையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. உடல் செயற்கையாக
செய்யப்பட்ட எதையும் ஏற்றுக்கொள்வதில்லை.
எனது ஆராய்ச்சியில் கண்டவை: சிந்தடிக் உடைகளை
உடல் ஏற்றுக்கொள்வதில்லை; பருத்தி, பருத்தி அதிகம் கலந்த உடைகளையே உடல் ஏற்றுக்
கொள்கிறது. கம்பளி உடைகளை, கம்பளி போர்வைகளை வெப்பப் பகுதிகளில் உடல் ஏற்றுக்
கொள்வதில்லை. அப்படி இருக்கும்போது, ஆண்டு முழுவதும் செயற்கை முறையில்
குளிர்ச்சியை ஏற்படுத்தி, அதற்குள் வாழ்வதை உடல் எப்படி ஏற்றுக் கொள்ளும்.
உடல், ஆண்டுமுழுவதும் உடலைப் பராமரிப்பு
செய்வதே, வெளியில் நிலவும் வெப்ப வேறுபாடுகளை வைத்துத்தான். அந்த வெப்ப
வேறுபாடுகளையே நிறுத்திவிட்டால், உடல் எப்படி பராமரிப்பு வேலை செய்யும்!
உங்களுக்கு உடல் மன நலம்தான் எப்படி கிடைக்கும்! பராமரிப்பு இல்லாமையால்,
கழிவுப்பொருடகள் தேங்கி, அதன் விளைவு திடீரென்று, குணப்படுத்தமுடியாத நோயாக
வெளிவரும். திடீரென்று மரணம் கூட நிகழலாம்.
ஏர் கண்டிசனை பயன்படுத்தும் முறையில் மாற்றம் தேவை!.
நான் முதன் முறையாக, ஏர் கண்டிசன் அடைக்கப்பட்ட
காரில் 44 கிலோ மீட்டர் பயணமானேன். காரை விட்டு இறங்கியவுடன் தலை வலியுடன்,
சோர்வும் இருந்தது; ஒருவிதமான மயக்கமும் இருந்தது. அன்றையிலிருந்து, ஏர் கண்டிசன்
போட்டுவிட்டு, கார் கண்ணாடியையும் சிறிதளவு திறந்து வெளிக்காற்றை காருக்குள் வர
அனுமதித்தேன். அதற்குப்பிறகு எனக்கு மேற்சொன்ன பிரச்சனைகள் வர வில்லை. இதே போல,
ஏர் கண்டிசன் அறையில் ஏர் கண்டிசன் போட்டு விட்டு, ஜன்னல்களை இலேசாகத் திறந்து
வெளிக்காற்றை உள்ளே அனுமதிக்கலாம்.
வேறொன்றையும் செய்யலாம். வெளியில் நிலவும்
வெப்பநிலைக்கு 10% குறைவான வெப்பநிலை அறைக்குள் இருக்கச் செய்யலாம். வெளியில் 39°C இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அறையில் 3.9°C (39°Cx10/100=3.9°C) குறைவாக
இருக்கும்படியாக ஒரு தானியங்கியை பொருத்தினால், வெளியில் நிலவும் வெப்பநிலைக்குத்
தகுந்தாற்போல, தானாக 10% வெப்பநிலை குறையும்படியாக ஏற்பாடு செய்யலாம்.
கோடை காலத்தில் அலுவலகத்தில் மட்டும். ஏர்
கண்டிசனை பயன்படுத்துவது உங்களது உடல் நலத்துக்கு நல்லது மழைக் குணம், மழை
பெய்யும் போதும் குளிர்ச்சி நிலவுமானால், ஏர் கண்டிசனை நிறுத்தி விடலாம். அவ்வாறு
செய்வது, உங்களது உடல் பராமரிப்புப் பணியைச் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். அலுவலக அறைக்குள் அசவுகரியக் குறைவு இல்லாமல்,
நீங்கள் வேலை செய்கின்ற அளவுக்குக் குளிர்ச்சி இருந்தால் போதும்.
எந்த மருத்துவமும் எடுபடாமல் போய்விடும்!.
ஆகவே ஏ.சி பயன்பாட்டை
குறைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தில் நிலவும் தட்ப வெட்ப வேறுபாடுகளைக் கொண்டுத்தான்,
உடல் பராமரிப்பு வேலைகளைச் செய்து, உடல் மன நலத்தைக் காக்கிறது. ஆகவே உங்களது உடலை
தட்ப வெட்ப மாறுதல்களுக்கு உட்படுத்த வேண்டும். அப்படி உட்படுத்தாத பட்சத்தில், கழிவுப்பொருட்களின்
வெளியேற்றம் தடுக்கப்பட்டு, அப்பொருட்கள் தேங்கிக் கொண்டே வந்து இறுதியில் நாட்கடந்து
தெரியும் நோய்களாக வெளிப்படும். அந்தச் சூழ்நிலையில் எந்த மருத்துவமும் எடுபடாமல் போய்விடும்.
கவன வாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்
ஹீலர் அரோமணி (R.A.பரமன்)
முகவரி
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை
57/176A6,
3-வது தெரு, பேரையூர் சாலை,
உசிலம்பட்டி-625532,
மதுரை மாவட்டம். தமிழ்நாடு.
செல் எண்கள்: 9442035291,
7092209028.
0 Post a Comment: