Sunday, December 23, 2018

பூமியில் சொர்க்கம் விதி 11


     பூமியில் சொர்க்கத்தைக் காண்பீர்கள்!  விதி 11


A 200-MLM-அ.11 விதிகள்      


                      
Copy right to        Er.R.A.Bharaman @ Aromani
Email: twinmedicine@gmail.com
 

  பூமியில் சொர்க்கத்தைக் காண்பீர்கள்!
              அரோமணியின் 11-வது இயற்கை விதி.
கொலை செய்வதும், கொள்ளையடிப்பதும், திருடுவதும், ஏமாற்றுவதும்,  கற்பழிப்பதும், சுருங்கச் சொல்வோமானால், எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் பிறருக்கு எந்தவிதமான கெடுதல் செய்தாலும் அதற்குப் பின்னால் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் மன அழுத்தம் (Depression).

மனதில் தோன்றும் ஆசை, எதிர்பார்ப்புகளை தோற்றுவிக்கிறது. அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேறாதபோது மன அழுத்தங்களாக மாறிவிடுகின்றன. மன அழுத்தங்கள் அடைகாக்கப்பட்டு பெரிய ஆலமரங்களாக மாறும்போதுதான், ஒருவர் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்கு கெடுதல் செய்கிறார்கள். மன அழுத்தம்தான் ஒருவருடைய வாழ்வை பின்னடையச் செய்து அழிப்பது. அந்த மன அழுத்தத்தைப் போக்கிவிட்டால், அவருடைய வாழ்க்கை வளமுடையதாக மாறிவிடுகிறது. இரண்டாம் உலகப் போர் மூண்டு பேரழிவை ஏற்படுத்தியதும், ஹிட்லருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால்தான்.

மன அழுத்தத்தைப் போக்கத்தான், மகான்கள் தோன்றி மதங்களை நிறுவினார்கள். அந்த மதவழிபாடுகளில் மனதுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. மன அழுத்தம் குறையக் குறைய, எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யக்கூடிய குணம் குறைந்து, வாழ்வில் முன்னேற்றம் பெறுகிறார்கள். புத்த மதம் வியாப்சனா தியானத்தை வழிபாடாக வைத்திருக்கிறது. கிறிஸ்து மதவழிபாட்டில். பிரார்த்தனை, இறைப்பாடல்களைப் பாடுவது, இறைச் சொற்பொழிவு மற்றும பைபில் படிப்பது போன்ற அம்சங்கள் இடம் பெறுகின்றன. ஆகவே மதங்களின் நோக்கம் மன அழுத்தத்தைக் குறைத்து, நோய்களைக் குணப்படுத்தி,  மன மனவளத்தைப் பெருக்குவதுதான். மனவளம் அறியாமையைப் போக்குகிறது.

இந்து மதத்தைப் பொறுத்தவரையில், பக்தி முறை வழிபாடு, மனதுக்குப் பயிற்சி அளிக்காமல், உடலுக்கு பயிற்சி அளிக்கும் விதமாகத்தான் அமைந்திருக்கிறது. , திருநீறு பூசுவது, தேங்காய் உடைப்பது, மொட்டை அடிப்பது, பொங்கல் வைப்பது, தீபாராதனை செய்வது, மொளப்பாரி எடுப்பது, போன்ற செயல்கள்தான் பெறுமளவு இடம் பெற்றுள்ளன. அவற்றால் மன அழுத்தம் குறையாது; அதிகப் பலன்கள் இருக்காது. கோயிலுக்குப் போனால், அங்கு சென்று உட்கார்ந்து, இறைவனைப்பற்றிய பாடல்களைப் பாடுவது, பிரார்த்தனை செய்வது, இந்து மதப் புத்தகங்களைப் படிப்பது, திருக்குறளைப் படிப்பது, மருத்துவ மனப்பயிற்சி செய்வது போன்ற மன அழுத்தங்களைக் குறைக்கும் விதமாக நமது வழிபாடுகள் இருக்க வேண்டும்.

எனது 34 ஆண்டுகால ஆராய்ச்சியில்தான், இரட்டை மருத்துவத்தைக் கண்டுபிடித்தேன். அதில், இரண்டாவது மருத்துவமான மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தில் உள்ள மருத்துவ மனப்பயிற்சிகளை கொண்டு எனக்குள்ள பல நோய்களை ஆஸ்த்மா உட்பட குணப்படுத்திக்கொண்டேன். போனஸாக, ஆன்மீகத்திலேயும் தெளிவு பெற்றேன். மருத்துவ மனப்பயிற்சிகளில் நான் பெற்ற அனுபவத்தின் மூலம், இறைவன் எனனை கவன வாழ்க்கைக்கு மாறச் செய்தான். கவனவாழ்க்கையில்தான், உடல் மன நலம்தான் ஆன்மீகம் என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்தான். முழு உடல் மனம் உள்ளவர் கோயிலுக்குப் போக வேண்டியதில்லை ஏனென்றால் அவரே  இறைவனாக காட்சி அளிக்கிறார்; 

தற்பொழுது மக்கள் வாழும்  ‘கற்பனை வாழ்க்கை”யில் முழு உடல்மன நலம் பெற முடியாது; ஏனென்றால் தினசரி மன அழுத்தம் மக்களிடம் சேர்ந்து கொண்டே இருக்கிறது. மன அழுத்தம் அல்லது மனக் கவலைதான் நோய்களைத் தோன்ற வைக்கும் முதல் காரணி. மன அழுத்தம் ஒருவரிடமிருந்து வெளியேறாத வரை, அவர் நோய்களிலிருந்து மீள முடியாது. மதவழிபாட்டின் மூலம் ஓரளவுதான் மன அழுத்தத்தை வெளியேற்ற முடியும். அதனால்தான் மனப்பயிற்சியை வழிபாடாக வைத்திருப்பவர்களும் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், பிறருக்கு தீங்கு செய்கிறார்கள். இலங்கையில் 1.5 லட்சம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். மியான்மாரில், முஸ்லீம்கள் லட்சக் கணக்கில் அகதிகளாக பங்களா தேசத்தில் அடைக்கல மானார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கைதரம் முன்னேறியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அரபு நாடுகளைச் சேர்ந்த எவரும் வேலை தேடி பிறநாடுகளுக்குச் செல்வதில்லை. சீனர்களோ, ஜப்பானியர்களோ பிறநாடுகளுக்கு கூலிகளாக வேலைக்குப் போவதில்லை. அவர்கள், பாதாளச் சிறைகளில் அடைபட்டு, கசை அடிகள் வாங்குவதில்லை.

”கையளவு நெஞ்சத்திலே கடலளவு ஆசை மச்சான்” என்ற சினிமா பாடல் மிகவும் பிரபலமானது. ஆசை ஏற்படுவது இயல்பு. அதைத் தடுக்க முடியாது. ஆனால் அந்த ஆசை, உங்களுடைய வாழ்க்கையை அழித்துவிடக்கூடாது. கவனவாழ்க்கை மனதில் தோன்றும் ஆசையை சீராக்கி வாழ்க்கையை வளப்படுத்துகிறத கவன வாழ்க்கையில்தான் ஒருவர் முழு உடல்  மன நலம் பெறமுடியும்; 100 விழுக்காடு எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், பிறருக்கு தீங்கு செய்ய மாட்டார்கள். அறியாமை பூரணமாக விலகியிருக்கும். அவ்வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எவராலும் கெடுதல் செய்ய முடியாது. அவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் (Field of all possibilities).ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். புதியன பல கண்டுபிடிப்பார்கள்; ஆயுள் நீடிக்கும்; இயற்கை துணை நிற்கும். பயம் என்பது அறவே இருக்காது; நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் நடக்கும். இறைவனின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பார்கள். இறைவன் அவர்களோடு பேசுவான்; இறைவனோடு அவர்கள் பேசுவார்கள் இந்தியாவின் மக்கள் தொகையில் 1% பேர் கவனவாழ்க்கைக்கு மாறினால் போதும்; இந்தியா அமைதிப் பூங்காவாக மாறிவிடும்.

அவ்வளவு சிறப்புக்கள் அவர்கள் பெற அடிப்படை ஏதாவது உண்டா.

அடிப்படை உண்டு. மனப்பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்,ஒரு நாளைக்கு, பிரார்த்தனை, இறைப்பாடல்களைப் பாடுவது போன்ற செயல்களை எவ்வளவு நேரம் செய்கிறார்களோ அவ்வளவு நேரத்திற்குத்தான் பலன் கிடைத்து மன அழுத்தம் குறையும். அனைத்து மத வழிபாடுகளிலும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில மணித்துளிகள்தான் இருக்கும். ஆனால், கவனவாழ்க்கையில்தான், காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குப் போகும் வரை மருத்துவ மனப்பயிற்சி வழிபாடாக மேற்கொள்ளப்படுகிறது. நாள் முழுவதுமுள்ள செயல்களில் முழுக்கவனம் அல்லது ஈடுபாடு செலுத்தப்படுகிறது. மன அழுத்தம் சேரச் சேர வெளியேறிக்கொண்டே இருக்கும். ஆகவேதான் கவனவாழ்க்கை வாழ்பவர்கள் பிறருக்கு எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் தீங்கு செய்ய மாட்டார்கள்.

ஆகவே அரோமணி 11-வது இயற்கை விதி “ மருத்துவ மனப்பயிற்சி செய்யும் நேரத்தின் அளவிற்கு தகுந்தாற்போல, மன அழுத்தம் குறையும், மனவளம் அதிகரிக்கும்; அறியாமை விலகும்; உடல்மன நலம் பெருகும்; வாழ்க்கைத் தரம் உயரும். ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும்..

உங்கள் வாழ்க்கைப் படகு சீராக முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், நீங்கள், தினசரி, கட்டாயம் மருத்துவ மனப்பயிற்சியை காலை 20 நிமிடங்கள், மாலை 20 நிமிடங்கள், இரவு படுக்கையில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும் வரை தவறாது செய்துவர வேண்டும். அப்படி செய்து வந்தீர்கள் என்றால், நீங்கள் பூமியில் சொர்க்கத்தைக் காண்பீர்கள்.

                  கவனவாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்.
                              
                    ஹீலர் R.A.பரமன் என்ற அரோமணி.

  

                          



































முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: