A199-MM Part 1- மருத்துவ மனபயிற்சி 1-
ஆண்மைக் குறைவு, மன அழுத்தம்,
சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதய வலி, ஹார்ட் அட்டாக், உடல் பருமன் மற்றும் வலி தெரியாத
நோய்களுக்கு மருந்து இல்லாத சிகிச்சை.-மருத்துவ மனப்பயிற்சி-1
மன அழுத்தம்
எங்கே சேருகிறது?
கிராமத்தில் இரு பெண்கள் சண்டையிடும்போது நீங்கள்
கவனித்திருப்பீர்கள். ஒரு பெண் மற்ற பெண்ணிடம் கோபமாக ஆக்கிரசத்தோடு சொல்லுவாள் “ நீ
எனக்குச் செய்த துரோகத்தை நினைக்கும்போது, என் நெஞ்சே கணக்குது” நெஞ்சு கணக்குது என்று
சொல்கிறாள். அதன் பொருள் என்ன? அவளுடைய கோபத்திற்கும் ஆக்கிரோசத்திற்கும் சூத்திரதாரியாக
உள்ள மன அழுத்தம் அவளுடைய நெஞ்சில் அதாவது மார்பில் சேர்ந்திருக்கு என்பது பொருளாகும்.
மனக் கவலை, மன அழுத்தம் ஆகிய எதுவாயிருந்தாலும் அது மார்பில்தான் வந்து சேருகிறது.
ஆகவே மனதில் சேர்ந்துள்ள மன அழுத்தம் என்று சொன்னாலும், அந்த மன அழுத்தம் மார்பில்தான்
சேருகிறது. மன அழுத்தத்தை போக்க வேண்டுமென்றால், அதை மார்பிலிருந்துதான் விரட்ட வேண்டும்.
அந்த அழுத்தத்தை விரட்டும், மருத்துவ மனப்பயிற்சியை உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்.
அதைக் கற்று பயன் பெறுங்கள்
ஒரு சாய்வு நாற்காலியில் நன்றாக வசதியாகச் சாய்ந்து
உட்காருங்கள். தலையை சுவற்றில் சாய்க்காமல், சிறிது தாழ்த்தி இருக்கட்டும். மெதுவாகக்
கண்களை மூடுங்கள். 10 லிருந்து 15 நொடிகள் மனதில் எந்த எண்ணமும் இல்லாமல் மனதை வெறுமனே
வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மனப்பயிற்சி நன்கு அமையும்.
. இப்பொழுது மார்பை மனக்கண்ணால் பாருங்கள். அது
சுருங்கி விரிவதைக் கவனியுங்கள்; மார்பில் இருக்கம் அல்லது பிடிப்பு இருந்தால் அந்த
உணர்வையும் மனதில் நினையுங்கள். தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருங்கள். வேறு எண்ணங்கள்
வரும்போதெல்லாம், அவற்றை நிறுத்தி விட்டு, மீண்டும் மீண்டும் மார்பையே கவனிக்க வேண்டும்.
தொடர்ந்து நினையுங்கள்; எண்ணங்கள் வரும்போதெல்லாம், அவற்றை நிறுத்திவிட்டு, மனதை மெதுவாகத்
திருப்பிக் கொண்டுவந்து மார்பை கவனிக்கச் செய்யுங்கள். மார்பிலிருந்து மன அழுத்தம்
வெளியேறிக் கொண்டே இருக்கும்.
யாராவது உங்களைப் பார்க்க வந்தால், பயிற்சியை நிறுத்திவிட்டு,
20 நொடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்து, வந்தவரிடம் பேசிவிட்டு, மீண்டும் வந்து தொடர்ந்து
செய்யலாம். பசியோடு இப்பயிற்சியைச் செய்யக் கூடாது மன அழுத்தம் அதிகமாக இருந்தால்,
தொடர்ந்து இடைவெளி விட்டு விட்டு மனக் கணம் குறைந்து இலேசாகும் வரை செய்து கொண்டே இருக்க
வேண்டும்.
மனப்பயிற்சியின்
போது நடக்கும் நிகழ்வு.
நீங்கள், மார்பு சுருங்கி விரிவதையும், பிடிப்பு
உணர்வையும் கவனித்தவுடன். மனமானது பிடிப்பு அல்லது இறுக்க உணர்வை எடுத்துக்கொண்டு கீழ்நோக்கிப்
பயணிக்கிறது. பயண வழியெங்கும் இறுக்கத்தை இறக்கிவிட்டு அதன் மூலம் மன அழுத்தத்தை மனதை
விட்டு வெளியேற்றி விட்டு சென்றுகொண்டே இருக்கிறது. ஆழ்மனதை சென்றடையும் போது, மனதில்
இறுக்கமும் இருக்காது; மன அழுத்தமும் இருக்காது; மனதில் கணம் இருக்காது; மனம் இலேசாக
இருக்கும். இந்த இடத்தில்தான், மேல் மனம் ஆழ்மனதோடு இணைகிறது. இங்குதான் ஒரு பெரிய
நிகழ்வு நடக்கிறது. அப்படி இணையும்போது மேல் மனமானது நித்திய இறைவனின் ஆற்றலை எடுத்துக்
கொண்டு மேல் நோக்கி வாழ்க்கையை வளப்படுத்த வருகிறது. இதன் உண்மைத் தன்மையை, நீங்கள் மருத்துவ மனப்பயிற்சியை தவறாது செய்து அறிந்து
கொள்ள முடியும்.
மேலே குறிப்பிட்ட
மருத்துவ மனப்பயிற்சி, மன அழுத்தம், சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதய வலி, ஹார்ட் அட்டாக்,
உடல் பருமன் மற்றும் வலி இல்லாத நோய்களுக்கு மருந்து இல்லாத சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது.
கவன வாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்.
0 Post a Comment: