விமானத்தில் நெஞ்சு வலி---(முழு கட்டுரை)
B 207-MM 1-இறைவனின் மருத்துவம்
விமானத்தில் நெஞ்சு வலி வந்துவிட்டால், கைகொடுக்கும் மருந்து!
இறைவன் வடிவமைத்த மருத்துவம் (Medicine designed by God)
மருத்துவ
மனப்பயிற்சி மருத்துவத்தைப் ((Medicine of
Medicinal Meditation) gw;wpa tpsf;fk;.
எனது மலிவுவிலைப் புத்தகம் ‘ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள்’ படித்தவர்கள், மருத்துவ மனப்பயிற்சியைப் பற்றி விளக்கங்கள் பல கேட்டனர். இரட்டை மருத்துவத்தில், இரண்டாவது மருத்துவமான மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முதல் பகுதி மருத்துவ மனப்பயிற்சியைப் (மம-) பற்றியது. ஐந்து மருத்துவ மனப்பயிற்சிகள் (அனைத்து நோய்களையும் குணப்படுத்த வல்லவை. இரண்டாவது பகுதி கவனவாழ்க்கையைப் பற்றியது. மனப்பயிற்சியின் மூலம் குணமான ஒருவர் கவனவாழ்க்கைக்கு மாறுவது சுலபம். இரண்டு பகுதிகளும், அறிவியல் பகுதி, ஆன்மீகப்பகுதி என்று பிரிந்து, இணைந்து செயல்படுகின்றன.
2.
மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தை இறைவன் மகான் புத்தருக்கு வெளிப்படுத்தினான். ஆனால் அவர் ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்து அந்த வழியாகச் சென்றுவிட்டார். மகான் ஓஷோவுக்கு மம-வின் ஐந்தில் ஒரு பகுதியை வெளிப்படுத்தினான். முழுவதும் வெளிப்படுத்துவதற்குள்
இறைவன் அவரை அழைத்துக் கொண்டான். அந்த சிறப்பை எனக்கு அளித்து, மக்களுக்கு மருத்துவ சேவையையும் ஆன்மீக சேவையையும் செய்யும் பெரும் வாய்ப்பினை அளித்தான். அவனுக்கு எனது நன்றியினைத் தெரிவுத்துக் கொள்கிறேன்.
3. நவீன ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, யுனானி, மூலிகை மருத்துவம் ஆகிய அனைத்து நடைமுறை மருத்துவங்களும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை..
தான் படைத்த மனிதன் இப்பூமியில் உடல்மன நலத்துடன் வாழவேண்டும்; அவனுக்கு நோய்கள் வந்துவிட்டால், அதை குணப்படுத்தவும், நோய்கள் வராமல் தடுப்பதற்கும், தப்பு தண்டாக்கள் செய்யாமலிருக்கவும்
(ஊழ்வினை சேராமலிருக்கவும்) மற்றும் ஆன்மீகத்திற்காக தன்னையே வருத்திக் கொள்ளாமலிருக்கவும், அதை வெளியில் தேடாமலிருக்கவும் அவனுடைய உடலிலே இறைவன் ம.ம.ம-வையும் கவனவாழ்க்கையையும் (கவா) இணைத்து, வடிவமைத்திருக்கிறான்.
4. இது தெரியாமல்தான், மனிதன் பல மருத்துவங்களைக் கண்டுபிடித்தான்; பல மதங்களைப் படைத்தான். அவன் வடிவமைத்த, மருத்துவ மனபயிற்சி மருத்துவமும் கவனவாழ்க்கையும் இணைந்த அழகிய சிலையை மூடியிருக்கும் துணியைத்தான் நான் விலக்கினேன்; மமம- வையும் கவனவாழ்க்கையையும் நான் கண்டுபிடிக்கவில்லை.
எப்படி இறைவன், உயிர்வாழ உடலைப் படைத்து அது இயங்குவதற்கு, இருதயம் (Heart), கல்லீரல் (Liver) ,மண்ணீரல் (Spleen), நுரையீரல் (Lungs), சிறுநீரகம் (Kidney)
ஆகியவற்றை
உடலில் பொருத்தியிருக்கிறானோ
அதைப்போலத்தான், அவைகள் இரண்டையும் (மம, கவா) மனிதனின் உடலிலே வடிவமைத்துப் பொருத்தியிருக்கிறான்.
5. மருத்துவ
மனபயிற்சியையும் கவனவாழ்க்கையையும் மனிதனின் உடலில் பொருத்தியதற்கு, இறைவனின் நோக்கம் என்ன?
உடலில்,
அவனது ஊழ்வினைக்காலம் முடியும்வரை இறைவன் தங்கியிருக்கப் போகிறான். அந்தக் காலத்தில் அவன் (மனிதன்) உடல்நலம் பெற்றிருந்தால்தான்,
இறைவன் வசதியாகத் தங்கியிருக்க முடியும். அதற்காகத்தான் வந்த நோய்களை குணப்படுத்துவதற்கு,
மனதைப் பயன்படுத்திச் செய்யும் மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தை (மமம) உடலில் பொருத்தினான். இதேபோல, வேலைகள் செய்யும்பொழுது சிரமம் தெரியாமல் இருக்கவும், உறுப்புகள் தேய்மானமாகி நோய்கள் தோன்றாமலிருக்கவும் கவனவாழ்க்கையை உடலில் பொருத்தினான். இதோடு அவன் விட்டுவிடவில்லை. அப்படி எவன் ஒருவன் இந்த இரண்டையும் பயன்படுத்தி உடல்மன நலத்தோடு கவனவாழ்க்கை வாழுகிறானோ அவனுக்கு பரிசாக நூறு விழுக்காடு (100%) ஆன்மீக ஆற்றலை கிடைக்கச் செய்கிறான்.
6. நமக்கு எது நன்மையளிக்கும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும்!
அந்த ஆற்றலால் நமக்கு என்ன பயன் என்று கேட்கலாம். முக்கியமாக ஊழ்வினையில் உங்களுக்கு நல்லது நடக்கும்படியான மாற்றங்கள் ஏற்படலாம். இதற்கு என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உதாரணமாகச் சொல்ல விரும்புகிறேன். உதவி செயற்பொறியாளரிலிருந்து (Asisstant Executive Engineer) செயற்பொறியாளராக (Executive Engineer) பதவி உயர்வு கிடைத்தது. எனக்கும் எனது மனைவிக்கும் வேலைபார்த்த ஊரிலேயே பதவி உயர்வு பெற்று இருக்க வேண்டும் என்று விருப்பம். அதற்கு முயற்சி செய்து கிடைக்கும் தருவாயில் கிடைக்காமல் போய்விட்டது. இது எங்களுக்குப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது.
கிடைத்த
இடமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் செயற்பொறியாளராக வேலையில் சேர்ந்தேன். அங்கு சேர்ந்தபிறகுதான், தூத்துக்குடியில் வேலையில் சேர்ந்தது எனக்கும் எனது குடும்பத்திற்கும் எவ்வளவு நல்லது என்பதை அறிய முடிந்தது.
7. 1000 குடும்பங்கள் ஒரே இடத்தில் வாழ்ந்ததால், பல்வேறு ஆன்மீக மார்க்கங்களை அறிய முடிந்தது. எனது பங்குக்கு 400 பேருக்குக் குறையாமல் தலைமைப் பொறியாளர் உட்பட ஆழ்நிலைத்தியானத்தில் (Transcendental Meditation) பயிற்சி பெற ஏற்பாடு செய்தேன். மதுரையிலிருந்து ஆழ்நிலைத்தியான ஆசிரியர் திரு.டி.வி.இராஜேந்திரன் அவர்கள் வந்து கற்றுக் கொடுத்தார்.
8. மூன்றாண்டு
கழித்து ஆழ்நிலைதியானத்தின் உயர்நிலைப் பயிற்சியான ‘சித்திப் பயிற்சியை (Siddi)’ நண்பர்களுடன் பாபநாசத்தில் முகாம் போட்டு கற்றுக் கொண்டோம். அரோமணியின் 4 விதிகளையும் கண்டுபிடிக்கத் தேவையான ‘கரு’ அங்குள்ள அனல்மின்நிலைய இயந்திர இயக்கத்தின் தொழில்நுட்பங்கள் எனக்கு உதவியாக இருந்தன.
9. அரோமணியின்
முதல் விதியை விளக்கும் ‘ஒரு ஆஸ்த்மா நோயாளியின் டைரி’ புத்தகம் அங்கிருக்கும்போதுதான் வெளியானது. அங்கிருந்த 7 ½ ஆண்டுகாலமானது எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி நிறைந்த காலமாகும். எனது மகளுக்கு அங்கிருக்கும்போதுதான் திருமணம் நடந்தது. முன்னால் உள்ள ஊரிலேயே இருந்திருந்தால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஏற்பட்டிருக்கும் இழப்பை கணக்கிட்டுச் சொல்ல முடியாது.
10. இறைவனுக்கு
நான் தூத்துக்குடிக்குப் போனால்தான் நன்மை என்று தெரியும். அதனால்தான் நான் முன்னால் வேலை பார்த்த ஊரிலேயே இருப்பதற்கு நான் எடுத்து முயற்சிகளை தவிடுபொடியாக்கினான். இதேபோலத்தான் கவனவாழ்க்கை வாழும் ஒருவருக்கு எது நன்மை, எது தீமை என்பது இறைவனுக்குத் தெரியும். உங்களுக்கு கெட்டது என்று தெரியாமலே அதற்கு முயற்சி செய்வீர்கள். ஆனால் இறைவன் உங்களது முயற்சியை முறியடித்து உங்களுக்கு நல்லது எதுவோ அதையே செய்வான்.
11. கவனவாழ்க்கையில்தான் முழு ஆன்மீக ஆற்றலும் கிடைக்கும்!
மேற்கூறிய
ஆன்மீக ஆற்றலைப் பெறத்தான் மக்கள் கோவில் கோவிலாகபோய் வருகிறார்கள். எவ்வளவு வருத்தினாலும் கிடைக்கும் ஆன்மீக ஆற்றல் மிக மிகக் குறைவுதான். கவனவாழ்க்கைக்கு ஒரு நாளைக்கு 1000 பங்குகள் (1000 parts) ஆன்மீக ஆற்றல் கிடைக்கிறதென்றால், மற்ற வழிபாட்டு முறைகளில், உதாரணமாக, பிரார்த்தனை காலையில் அரை மணிநேரம் மாலை அரைமணி நேரம் மற்றும் ஆழ் மனப்பயிற்சி 30 நிமிடங்கள் (காலை 15 நிமிடம், மாலை 15 நிமிடம்) செய்யும்போது ஒரு நாளைக்குக் கிடைக்கும் பங்குகள் வெறும் 60 மற்றும் 30 பங்குகள் தான். அதனால்தான் கவனவாழ்க்கை வாழ்பவர்கள் ’ ‘அனைத்தையும் சாதகமாக முடிக்கும் (All
possibility) ஆற்றலைப்’ பெற்றுவிடுகிறார்கள்.
கவனவாழ்க்கை வாழ்பவன் துன்பத்தை தைரியமாக எதிர்கொள்கிறான். காரணம் தனக்குப் பின்னால் எப்பொழுதும் “இறைவன் இருந்துகொண்டிருக்கிறான்”, என்ற உணர்வு அவனுக்கு மேலோங்கி நிற்கும். அவன் எதிர்கொண்ட துன்பங்கள் எல்லாம் பின்னாளில் நன்மைக்காக நடந்திருக்கின்றன என்று அறியும்போது மகிழ்ச்சியில் மூழ்கிறான்.
12. மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தின் ஆராய்ச்சியைத் துவக்கினான் இறைவன்!
ஒய்வு பெறுவதற்கு (31-1-2001) ஒரு மாதம் இருக்க, 12-12-2000-ல்தான் மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தை இறைவன் எனக்கு வெளிப்படுத்தினான். இதைத்தொடர்ந்து, அவன் அம்மருத்துவத்தைப் பற்றிய ஆராய்ச்சியை நான் தொடர எனக்கு ஒரு சரியான நல்ல சந்தர்ப்பத்தை வழங்கினான். மின்சார
வாரிய பணியிலிருந்து விடுபட்ட பிறகு நான் ஒரு ஒன்பது மாதங்கள் கோயம்புத்தூரிலேயே இராமநாதபுரத்தில் ஒரு வீடு எடுத்து தங்கினேன். ஊரில் நாங்கள் தங்குவதற்கு வசதியாக இருக்க சொந்த வீட்டில் சில மாறுதல்களைச் செய்ய ஊரில் எனது மனைவி தங்கிவிட்டாள். அது எனக்கு கோயம்புத்தூர் வீட்டிலிருந்து ஆராய்ச்சி செய்வதற்கு வசதியாக இருந்தது.
13. மறக்கமுடியாத ஆராய்ச்சி அனுபவங்கள்!
உடல் பருமனாக, ஒரு ஸ்பூன் பிராந்தி (Brandi) மூன்று நேரமும் சாப்பிட்டால், உடல் எடை போடும் என்று நண்பர்கள் சொன்னது எனது ஞாபகத்தில் இருந்து கொண்டே இருந்தது. இறைவன் தனது ஆராய்ச்சியை துவங்க என்னைத் தூண்டினான். நானும் சாப்பாட்டுக்குப் பிறகு மூன்று வேளையும் வேளைக்கு ஒரு ஸ்பூன் வீதம் மூன்று ஸ்பூன்கள் பிராந்தியை எடுத்துக்கொண்டேன். ஒரு மாதத்திற்குப் பிறகு மறுநாள் பிற்பகல் மூன்று மணியிருக்கும். வயிறு வலி பொறுக்கமுடியாத அளவுக்கு வலிக்கத் தொடங்கியது. மேலும் மலம் வெளியேறுவது போன்ற உணர்வும் சேர்ந்திருந்தது. கழிப்பறையில் உட்கார்ந்தால் மலம் வருவதில்லை. இந்தமாதிரியான வலி எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. எனக்கு பயம் தொற்றிக் கொண்டது.
14. டாக்டரைப்
போய்ப் பார்க்கலாமென்றால், எல்லா டாக்டர்களும் மாலை 6 மணிக்கு மேல்தான் வருவார்கள். மருத்துவ மனபயிற்சி மருத்துவம் கண்டுபிடித்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன, ஆகவே அது எனக்கு ஞாபகத்திற்கு உடனே வரவில்லை. சில நிமிடங்கள் கழித்துத்தான் ஞாபகத்திற்கு வந்தது. உடனே வலிக்குரிய மருத்துவ மனபயிற்சியை (மம) ஆரம்பித்துவிட்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைய ஆரம்பித்தது. மாலை ஆறு மணிக்கெல்லாம் வலி பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு குறைந்துவிட்டது. இருந்தாலும், பயம் நீங்காததால், டாக்டரைப் பார்க்கச் சென்றேன். வரிசையில் உட்கார்ந்திருக்கும்போதே மம வை செய்து கொண்டிருந்தேன். முக்கால் மணி நேரம் கழிந்திருக்கும். என்னை அழைப்பதற்குள் வயிற்று வலி முழுவதுமாக நின்றுவிட்டது. டாக்டரைப் பார்க்காமலே எழுந்து வீட்டிற்கு வந்து விட்டேன். இது எனக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவம்.
பல முறை இரவு நேரங்களில் நல்ல தூக்கத்திலிருக்கும்போது, இளப்பினால் மூச்சுத் திணரல் (Breathing
trouble); ஏற்படும். அப்பொழுதெல்லாம் அரைத்தூக்கத்தில் இளப்புக்குரிய மருத்துவ மனப்பயிற்சியை செய்ய ஆரம்பித்து விடுவேன். மறுநாள் காலையில் தாமதமாக எழுந்திருப்பேன். அப்பொழுது இளப்பு இருக்காது, புத்துணர்ச்சியை உணருவேன். முதல் நாள் இரவு, எப்பொழுது இளப்பிலிருந்து விடுபட்டேன், அதற்குப்பிறகு எப்பொழுது ஆழ்ந்த தூக்கம் தூங்கினேன் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
சில அலுவலகங்களில் 2-வது மாடி ஏறவேண்டியது வரும். மேல் படியை அடையும்போது, இளப்பு ஏற்பட்டு மூச்சுத் திணரல் ஏற்படும், அப்பொழுது அங்கேயே நின்று, உடனே இளப்புக்குரிய மனப்பயிற்சியை செய்வேன். சில நிமிடங்களில் சரியாகி விடுவேன
15. இறைவன் என்னை பச்சை காய்கறிகளையும், பழங்களை மட்டும் சாப்பிட வைத்து ஆராய்ச்சி செய்தபோது, அவன் எனக்கு அளித்த பரிசுதான் ஹெர்னியா (Hernia) நோயாகும். எட்டு ஆண்டுகளாக இந்த நோயினால் எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை. அதற்குபிறகுதான் தொந்தரவு ஆரம்பித்தது. இரவு தூங்கும்போது இறங்கிய குடல் ஏறிக்கொள்ளும். காலையில் இறங்க ஆரம்பிக்கும். அப்பொழுது வலி பயங்கரமாக இருக்கும். நாளடைவில் பகலிலும் வலிக்க ஆரம்பித்தது.
16. அப்படித்தான் ஒரு நாள் பிற்பகல் நான்கு மணிக்கு ஹெர்னியா வலி ஆரம்பித்து விட்டது. தாங்கமுடியாத வலி. அப்பொழுது மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமாக இருந்தது. எனது மனைவி சமயலறையில் வேலையாக இருந்தாள். எனது மனைவியிடம் சொன்னால், அவள் உடனே டாக்டரிடம் போக வேண்டுமென்று வற்புறுத்துவாள். அதனால் 25’x9’ அளவுள்ள நீளமான கூடத்தில் நடந்து கொண்டே ஹெர்னியா வலிக்குறிய மனபயிற்சியை செய்து கொண்டிருந்தேன். இடையில் எனது மனைவி “என்ன செய்றீங்க” என்று கேட்டாள். அதற்கு “வெளியில் ஈரக்காற்று அடிக்கிறது. அதனால் உள்ளுக்குள்ளேயே ‘வாக்கிங்’ போய்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு நடந்து கொண்டிருந்தேன். சரியாக முக்கால் மணி நேரத்தில் வலி நின்றுவிட்டது. இதுவும் அவன் செய்த ஆராய்ச்சியில் எனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம். ஒரு மாதமாக ஹெர்னியா வலி வரும்போதெல்லாம் மம-வை செய்து குணப்படுத்தி வந்தேன். அதற்கு பிறகு அந்த வலி வருவதில்லை. மனைவிக்கே தெரியாமல் வலியைக் குணப்படுத்தியதால், இந்த மருத்துவத்திற்கு ‘இரகசிய மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம்’ என்ற பெயரை ஆரம்பத்தில் வைத்திருந்தேன.
நான்கு முறை (1979, 1982, 1992 மற்றும்
1993 ஆகிய ஆண்டுகளில்) வலதுபுற மூக்கினுள் வளர்ந்த சதையை (Nasal polyp)
அறுவை சிகிச்சைகளின் மூலம் அகற்றியிருக்கிறேன்.
நான்காவது இறுதி முறையாக (1993, சூன்) மூக்கினுள் வளர்ந்த சதை அறுவை சிகிச்சையின் (ழிநசயவழைn) மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அகற்றப்பட்டது. மறுநாள் எனது மூக்கினுள் அடைக்கப்பட்டிருந்த மருந்து கலந்த துணியை ஒரு இளவயது டாக்டர் அகற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் நான் மிகவும் நொந்து போய் வருத்தத்துடன் கேட்டேன், “இனிமேல் சளி பிடிக்காதுங்களா, சதை வளராதா, டாக்டர்!” அதற்கு அவர், “சதையை எடுத்தவர்கள், வளைந்த மூக்கை ஏன் நிமிர்த்தவில்லை என்று தெரியவில்லையே! அதை நிமிர்த்தினால்தான் சளி பிடிக்காமலிருக்கும்;
சதை வளரத்தான் செய்யும்; நாளைக்கு ரவுண்ஸ்க்கு (Rounds) சீவ் வரும்போது ‘வளைந்த மூக்கை ஏன் நிமிர்த்தவில்லை என்று கேளுங்கள்,ஆனால் நான் சொன்னேன் என்று சொல்லாதீர்கள்!’ என்று சொன்னார்.
மறுநாள்
தலைமை டாக்டரிடம் கேட்டேன், “எனது வளைந்த மூக்கையும் நிமிர்த்தியிருக்கலாமே, டாக்டர்!” என்று வருத்தத்துடன் கேட்டேன். அதற்கு அவர், “நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள், அதனால்தான் அந்த ஆபரேசன் செய்யவில்லை! அதனால் என்ன, அடுத்த ஆண்டு உடலை நன்றாக தேத்திக் கொண்டு வாருங்கள், வளைந்ததை ஆபரேசன் செய்து நிமித்தி விடலாம்!” என்றார். வேதனையுடன் ஊர் திரும்பினேன். அப்பொழுது வயது 50, இன்னும் சதை வளரும் என்று இளம் டாக்டர் சொன்னாரே! என்னுடைய வேதனையை எவரிடமும் பங்கு கொள்ள முடியாத நிலையிலிருந்தேன். எனக்குள்ள வேதனையை நான்தான் அனுபவித்து ஆகவேண்டும்.
4-12-1993
முதல் சூன் 2006 வரை, உடல்மன நலத்துக்குரிய 6 இயற்கை விதிகளையும், மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தையும் இறைவன் வெளிப்படுத்தினான். அவற்றைக் கடைப்பிடித்ததினால்,
சூன், 2007 வரை தாக்குப்பிடித்து, தேனி அரசு மருத்துவமனையில் வளைந்த மூக்கை நிமிர்த்தி சரி செய்ய அனுமதிக்கப் பட்டேன். அரை மயக்கத்தில் அறுவை சிகிச்சை அறையில் படுத்திருக்கிறேன். டாக்டர் கம்ப்யூட்டர் உதவியுடன் எனது மூக்கினுள் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளுகிறார். அவர் தனக்குத்தானே “வளைந்த மூக்கை நிமிர்த்தவேண்டும் என்றுதான் (;Case sheet) சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் லேசாக சதையும் வளர்ந்திருக்கிறது (Nasal polyp). அதைப்பற்றி
குறிப்பிடவே இல்லையே! ஹூம். சொல்லாட்டி என்னா! அதையும் (Remove) பண்ணிருவோம்” என்று பேசியது எனக்கு இலேசாக கேட்டது. அப்படி பேசிவிட்டு, வளர்ந்த சதையை சொரண்டி எடுப்பது எனக்கு ’சொரட், சொரட்’ என்ற சத்தத்தை வைத்துத் தெரிந்து கொண்டேன். அப்படி சொரண்டும்போது .எனக்கு வலி என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு அசவுகரியக் குறைவு (Uneasiness) ஏற்பட்டதை
உணர்ந்தேன். உடனே மருத்துவ மனப்பயிற்சியைச் செய்து அதைக் குறைத்துக்கொண்டே வந்தேன்.
வளைந்த மூக்கை நிமிர்த்தும்போது முழு மயக்கத்திற்குச் சென்றுவிட்டேன். பிறகு வார்டில் எனக்கு விழிப்பு வந்தது. அப்பொழுது மூக்கில் நல்ல வலி இருந்தது. உடனே மம- செய்துகொண்டே இருந்தேன். வலி குறைந்து கொண்டே இருந்தது. பிறகு 2 மணிநேரம் கழித்து வலி மாத்திரை தரப்பட்டது. அங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையுடன் மம-வையும் சேர்த்துச் செய்து வந்ததினால், விரைவில் குணமாகி மருத்துவமனையிலிருந்து
விடுவிக்கப்பட்டு வீடு வந்து சேர்ந்தேன். அதுவும் எப்பொழுதும் நினைவுக்கு வரும் மறக்கமுடியாத அனுபவமாகும்.
.
;
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் பேரையூர் பஸ் நிலையத்தில், ஆயதர்மம் போவதற்காகக் காத்திருந்தேன். அங்கு எனது வயதான சகோதரி இருக்கிறார். பஸ் வரக்கூடிய நேரம் நெருங்கியவுடன் உட்கார்ந்திருந்த உயர் மேடைப் பலகையிலிருந்து வலது காலை ஊன்றி எழுந்தேன். ஊனமான இடது காலை கீழே தரையில் ஊன்ற முடியாதபடி தொடை இடுக்கில் பயங்கரமான வலி ஏற்பட்டது. எனது 10 வயதில் 1953-ம் ஆண்டு எனக்கு இதே மாதிரி வலி ஏற்பட்டது எனக்கு அந்த ஞாபகம் வந்தவுடன் எனது பயம் அதிகரித்து விட்டது. காரணம் அந்த வலியினால் நடக்க முடியாமல், மதுரை அரசு மருத்துவமனையில் மாவு கட்டு போட்டு, அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நாட்டு மருத்துவம், நவீன மருத்துவம் என மாறி மாறி எடுத்து, அதனால் படிப்பில் தடங்கல் ஏற்பட்டு, இரண்டு ஆண்டுகள் நடமாட்டம் இல்லாமல் வீட்டிலேயே இருந்தது, இறுதியில் இடது கால் ஊனத்துடன் குணமானது அனைத்தும் அந்த சில நொடிகளில் என் ஞாபகத்திற்கு வந்தது. மீண்டும் அந்தமாதிரி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோமோ என்ற எண்ணம் என் உடலை நடுங்கச் செய்தது. வலிக்குரிய மருத்துவ மனப்பயிற்சி செய்தாலும் கேட்காதோ என்ற எண்ணத்தில் பீதியிலிருந்தேன்.
எல்லாம்
வல்ல இறைவன் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் வலிக்குரிய மனப்பயிற்சியைத் துவக்கினேன். நான் ஆச்சரியப்படும்படியாகவும், ஆறுதலடையும்படியாகவும், வலி குறைய ஆரம்பித்து அரை மணி நேரத்தில் முற்றிலுமாக வலி இல்லாமல் போய்விட்டது.
உடனே, ”மருத்துவ மனப்பயிற்சி அப்பொழுது தெரிந்திருந்தால், எனக்கு ஊனம் ஏற்பட்டிருக்காது; இரண்டு ஆண்டுகள் துன்பம் அனுபவிக்காமல், படிப்பைத் தொடர்ந்திருப்பேன்” என்ற எண்ணமும் எழுந்தது. ’10 வயதில் மருத்துவ மனப்பயிற்சி செய்யும் பக்குவம் உண்டா’ என்ற எண்ணம் உங்கள் மனதில் எழலாம். எனது மகள் வீட்டுக்குப் போகும்போதெல்லாம், 8. 10, 12 வயதிலிருக்கும் என் பேரக் குழந்தைகளுக்கு வலி என்று வந்தால், அவர்களை மருத்துவ மனப்பயிற்சி செய்ய வைத்து குணப்படுத்திருக்கிறேன்.
மேலே சொன்ன நிகழ்வு, அதனால் ஏற்பட்ட அனுபவம் என்றும்
மறக்கமுடியாத வடுவாக மாறிவிட்டது.
17. மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தின் சிறப்பு அம்சங்கள் (Special
features of Medicine of Medicinal Meditation):
தவறிவிழுந்து தலையில் அடிபட்டால், அடிபட்ட இடத்தில் வீங்கி புடைத்துவிடும். பூச்சி கடித்தாளும், கடித்த இடத்தில், வீக்கம் உண்டாகிவிடும். அதற்கு ஊசி, மருந்து என்று சிகிச்சை எடுத்தபிறகுதான் வீக்கம் சிறிது சிறிதாகக் குறையும்.
18. என்னை ஒரு முறை பூச்சி கடித்திருக்கிறது. பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது இரண்டுமுறையும், கீழே குனிந்து எழும்போது ஜன்னல் கதவில் மோதி இரு முறையும் தலை அடிபட்டிருக்கிறது. இருமுறை கதவிடுக்கில் விரல்களை விட்டு நசுக்கிக் கொண்டேன். பேருந்தில் பயணிக்கும்போது பல முறை எனது கால் விரல்களை நடத்துனரும், பயணிகளும் நசிக்கியிருக்கிறார்கள்.
ஒரு முறை மிக்ஸி பாதத்தில் விழுந்திருக்கிறது. இந்த மாதிரியான சிறு சிறு விபத்துக்கள் நடக்கும்போது எவ்வளவு பொறுக்கமுடியாத வலியிருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உடனே வீங்கி புடைத்து விடும்.
19. ஆனால் நான், மேற்கூறிய சிறு சிறு விபத்துக்கள் நடக்கும்போதெல்லாம்,
வலிக்குறிய மனப்பயிற்சியை உடனே செய்யும்போது பத்து நிமிடங்களில் வலி விட்டுப் போகும். தடவிப்பார்த்தால், அடிபட்ட இடத்தில் எந்த வீக்கப் புடைப்பும் இருக்காது, நீண்ட கால வலியாக அதாவது ஒற்றைத் தலைவலி, மூட்டு வலி முதலியன, இருந்தால் மட்டும் மனபயிற்சியை ஒரு மணி நேரம் செய்ய வேண்டியது வரும். இந்தமாதிரி திடீ திடீரென்று வரும் வலிகளெல்லாம் மம செய்த பத்து நிமிடத்திற்குள் சரியாகிவிடும்.
20. இரட்டை மருத்துவம் கண்டுபிடிப்பதற்கு முன்பு எனது நிலை!
மம-வை கண்டுபிடிப்பதற்கு முன்பு எண்ணையில் பொறித்தவை, நெய்யில் தயாரித்த உணவுப் ரட்டை மருத்துவம் கண்டுபிடிப்பதற்கு முன்பு எனது நிலை!
மம-வை கண்டுபிடிப்பதற்கு முன்பு எண்i பொருட்கள், தயிர், இனிப்பு வகை, புளிக்குழம்பு, காரக்குழம்பு, வெந்தயகுழம்பு, பூண்டுக்குழம்பு, பிரியாணி, மீன் உணவுபொருட்கள் ஆகிய அனைத்தும் எனக்குச் சேராதவை. இனி என்ன இருக்கு சாப்பிடுவதற்கு என்று உங்கள் மனதில் தோன்றுகிறதல்லவா! ஆம். உண்மைதான். நான் சாப்பிடுவதற்கு ஒன்று இருக்கிறதென்றால் அது சாம்பார்தான். அதுதான் எனது இன்பத்திலும் துன்பத்திலும் என்னோடு பங்கு கொண்டது. அதற்கு இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
21. சாம்பாரிலும் குளிர்ச்சியைத் தரக்கூடிய முள்ளங்கி, சொரக்காய், முட்டைகோசு முதலியன சேர்த்த சாம்பார் சேராது. தக்காழிப் பழம் சேர்த்த உணவுப் பொருடகள் சேராது. ரசம், அப்பளம் ஆகியவை சேராது. வாழ்க்கை வெறுத்துப் போகாதா? வெறுத்துத்தான் போய்விட்டது! ஆசையை அடக்கமுடியாமல் ஒரு நாள் பிரியாணியோ, நெய்யோ, தயிரோ சேர்த்துக் கொண்டால் போச்சு. இந்த மலச்சிக்கலுடன் கூடிய தலைவலிக்கு உடனே மூக்கு வேர்த்து என்னை வந்து ஒட்டிக்கொள்ளும். தொடர்ந்து அழையா விருந்தாளிகளாக தும்மல் (Sneezing),, மூக்கடைப்பு (Nasal block), மூக்கிலிருந்து நீராக ஒழுகுதல் (Watering nose),
சளி ( Sputum), இளப்பு
(Wheezing) வந்துவிடும். இனி என்ன செய்யமுடியும்!
22. மேற்குறிப்பிட்ட பேய்களை ஓட்ட, டாக்டரிடம் போகவேண்டும். காத்திருப்பு, பரிசோதனைகள், மருந்து மாத்திரைகள் என காசு கரைந்து போய்க்கொண்டே இருக்கும். விரயமான காலம், உடல் பாதிப்பு, சோறு போடும் வேலை பாதிப்பு, எனது குடும்பத்தினருக்கு ஏற்படும் கவலை, பதட்டம் இப்படி ஒரு நீண்ட பட்டியல் தொடரும். ஒரு நாள் கூத்துக்கு இத்தனை பாதிப்பா என்று எரிச்சல் ஏற்படும். இந்தத் தொல்லை வேண்டாம் என்றுதான் மேலே கூறப்பட்ட உணவுப் பொருட்களை ஒதுக்கி வைத்தேன். அதற்கு அது கொடுத்த தண்டணையில், எனது எடை கூடாமலே குறைவான எடையிலே வாழ்ந்து வந்தேன்.
23. 1974-ஆம்
ஆண்டிலிருந்து இளம் சுடுநீரில் தலைக்குத் தண்ணீர் ஊற்றாமல் குளித்து வந்தேன். ஏனென்றால், தலையில் ஊற்றிக் குளித்தால், மூக்கடைப்பும், தலைவலியும் வந்து விடும். ஆகவே வாரத்திற்கு ஒரு முறைதான் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் குளிப்பேன். அப்படியிருந்தும் வாய்வழியாக மூச்சு விடுவது எனக்குச் சாதாரணமாகவும், மூக்கு வழியாக மூச்சு விடுவது அசாதாரணமாகவும் இருந்தது. ஒரு நாளில் பெரும்பகுதி நேரம் வாய் வழியாகவே சுவாதித்துக் கொண்டிருந்தால், எனக்கு எவ்வளவு நரக வேதனை இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! மூக்கில் சதை வளர்ந்து கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணம். சதை வளர்ச்சியை நீக்க, நான்கு முறை (1979, 1982, 1992, யனெ
1993) மூக்கில் அறுவை சிகிச்சை செய்து, ஒவ்வொரு தடவையும் வளர்ந்த சதை அறுத்து எறியப்பட்டது.
24. இரட்டை மருத்துவம் கண்டுபிடித்த பிறகு எனது நிலை!
மேற்கூறிய
சூழ்நிலையில்தான், நான் பணியிலிருக்கும்போது அரோமணியின் நான்கு விதிகளைக் கண்டுபிடித்து, அதைக் கடைப்பிடித்ததில் எனது உடல்நலத்தில் குறிப்பாக மூக்கில் சதை வளர்ச்சி நின்று போனதில் முன்னேற்றம் கண்டேன். 12-12-2000 அன்று ஒய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் இறைவன் மம-வை எனக்களித்தான். மம-தான் சேராத உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்கு துணிச்சலைக் கொடுத்தான். காரணம் காத்திருப்பு, பரிசோதனைகள், மருந்து மாத்திரைகள், காசு கரைதல், கால விரயம், உடல் பாதிப்பு, சோறு போடும் வேலை பாதிப்பு எனது குடும்பத்தினருக்கு ஏற்படும் கவலை, பதட்டம், போன்ற எதுவும் இல்லை.
25. ஆகவே சேராத உணவுப் பொருட்களை உணவில் தயங்காமல், பயமில்லாமல் சேர்த்துக்கொண்டேன். மலச்சிக்கல் அல்லது தலைவலியோ அல்லது தும்மலோ, மூக்கடைப்போ, மூக்கிலிருந்து நீராக ஒழுகினாலோ, சளியோ அல்லது இளப்போ வந்துவிட்டால் உடனே மம-வை செய்து நலம்பெற்று விடுவேன். பிறகு தொடர்ச்சியாக அரோமணியின் மீதமுள்ள ஐந்து விதிகளையும் கண்டுபிடித்து அவற்றையும் கடைபிடித்த பிறகு அனைத்து சேராத உணவுப்பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டு வருகிறேன். கடந்த 9 வருடங்களாக மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாத வாழ்க்கையை கொடுத்த, இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொள்கிறேன்.
26. அரோமணி விதிகளில் ஒன்றிரண்டை பயணம், இடமாற்றம், சூழ்நிலை காரணமாக மீறும்பொழுதெல்லாம்,
மேற்கூறிய நோய்கள் வந்து தலைகாட்டத்தான் செய்யும். அப்பொழுதெல்லாம் மம-வை செய்து குணப்படுத்திவிடுவேன்.
அப்படி ஆயிரக்கணக்கான முறை தலைவலியும், தும்மலும், மலச்சிக்கலும், இளப்பும், கணனியை (Computer) நான் தொடர்ந்து பயன்படுத்துவதால் சளி, அரிப்பு, முதுகு வலி மற்றும் இடுப்பு வலியும், வயிற்று வலியும், நெஞ்சுகரிப்பும், நெஞ்சு வலியும், மாறி மாறி வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் மம-தான் துணை நின்று குணப்படுத்திவிடும்.
மேற்சொன்ன பல நூற்றுக்கணக்கான சிறு சிறு விபத்துக்களின் போதும் மம தான் உதவிக்கு ஓடோடி வந்தது.
’கடுக், கடுக்’ என்று இருக்கும் முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற மெல்லுவதற்கு கடினமான பொருட்களை ஆசைப்பட்டு சாப்பிட்டு விட்டால், உடனே பல்வலி வந்துவிடும், அசைவ உணவை சாப்பிட்டு விட்டால், மறுநாள் பல்வலி உண்டாகும். அப்பொழுதெல்லாம், பல்வலிக்குரிய மனப்பயிற்சியைச் செய்து வலி இல்லாமல் செய்துவிடுவேன். மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம் இருப்பதால், மேற்குறிப்பிட்ட உணவுப்பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன் பல்வலி எனக்கு ஒரு பொருட்டள்ள
மற்றொன்றையும் சொன்னால் மிகவும் வியப்படைவீர்கள். இந்த ஆண்டு (2017) பிப்ரவரி
மாதம் முதல் வாரத்தில் கீழ்த்தாடையில் பல் ஒன்று கூச்சம் எடுத்து வலிக்க ஆரம்பித்தது. அந்தக் கூச்சமும் வலியும் ஒரு பல் சொத்தையாகி விட்டதைத் தெரிவித்தது அந்த இயற்கைப் பல் ஒன்றை வைத்துத்தான் 30 முறை மென்று என்னால் சாப்பிட முடிகிறது. இரட்டை மருத்துவமும், அக்குப்பங்சரின் தொடு சிகிச்சையும் கைவிடாது என்ற நம்பிக்கையில் 10 நாட்கள் வலியோடு சாப்பிட்டு வந்தேன். மெல்லும்போது எனது கவனம் முழுவதும் மெல்லுவதிலேயே இருந்ததால், வலி தெரியாமல்தான் சாப்பிட்டு வந்தேன். மேலும் சாப்பிடுவதற்கு முன்பே மருத்துவ மனப்பயிற்சி மூலம் வலியைக் குறைத்துவிடுவேன். சிறிது சிறிதாக கூச்சமும், வலியும் குறைந்து சொத்தைப் பல் நல்ல பல்லாக மாறிவிட்டது. இதுவும் எனக்கு மறக்க முடியாத அனுபவம்.
சில சமயங்களில் திடீரென்று திரும்பும்போது, வலதுபக்கம் விலா எலும்புப் பகுதியில் சதைப்பிடிப்பு ஏற்படும். அப்பொழுது குனிந்தால், இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பினால், பயங்கரமாக வலி எடுக்கும்; நடக்க எட்டு வைத்தால் வலி எடுக்கும். அப்பொழுதெல்லாம், அப்படியே நின்று மருத்துவ மனப்பயிற்சி செய்வேன்; சில நிமிடங்களில் வலி நீங்கி, சதைப்பிடிப்பிலிருந்து விடுபடுவேன்.
குளிர்ச்சியான ஒரு பொருளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலோ, அல்லது பருவநிலை மாறி மப்பும் மந்தாரமாக இருந்தாலோ, தும்மல் வரும். இலெச்சாக மூக்கில் நீர் வடியும். அப்படி வராமல் சில சமயங்களில், மூக்கில், காற்று வெளியேறும் வலது பக்க துவாரத்தில் நுழைவாயிலில் ஒரு புண் உண்டாகிவிடும். மூக்கின் விடைப்புப் பகுதியில் எனது கை பட்டு விட்டால், பயங்கரமாக வலிக்கும். அப்பொழுதெல்லாம், ஒரே நேரத்தில் அரை மணி நேரம் செய்து, அல்லது ஒரு நாளைக்குக் கால் மணி நேரம் வீதம் இரண்டு நாட்கள் செய்து வலியைக் குணப்படுத்தி விடுவேன் இதேமாதிரி வாய்ப்புண்கள் வந்தாலும் மம- செய்து குணப்படுத்தி விடுவேன்
எனது இடது கால் ஊனம். ஆகவே சமநிலையில் நடக்க இயலாது; கம்புயூட்டரில் பகல் முழுவதும் நிமிர்ந்து உட்கார்ந்து வேலை செய்கிறேன். இதனால் காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது, இடுப்புப் பிடித்துக் கொள்வதால், நிமிர்ந்து நிற்க முடியாது. நிமிர்ந்தால் வலி எடுக்கும். அப்பொழுதெல்லாம், மம- செய்து வலியை இல்லாமல் பண்ணிய பிறகு நிமிர்ந்து நிற்பேன். தினசரி காலையிலும் மம-தான் எனக்கு உறுதுணையாக இருக்கிறது.
கால் ஆணியும் (Leg nail), நகச்சுத்தியும் (Nail tumor) சென்ற ஆண்டுவரை வந்து போய்க்கொண்டிருந்த நோய்களாகும். அவைகளையும் மம-வைச் செய்து குணப்படுத்தி விடுவேன். கடந்த ஓராண்டாக அவை என்னிடம் தலைகாட்டுவதில்லை
சமீபத்தில்,
எனது இடது கை தோல்ப்பட்டை இணைப்பு மூட்டுப் பகுதியில் காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும்போது
வலி எடுத்தது. கையைத் தூக்கமுடியாது; இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அசைக்க முடியாது; பயங்கரமாக வலி எடுக்கும்; எந்தப் பொருளையும் தூக்க முடியாது. அதற்கு மருத்துவ மனப்பயிற்சி செய்து குணப்படுத்தி வருகிறேன்.
27. சிறிது நினைத்துப் பாருங்கள்! ஒவ்வொரு தடவையும் நான் டாக்டரை நாடி ஓடியிருந்தால், எனக்கு ஏற்படும் காலவிரயம், வேலை பாதிப்பு, பண இழப்பு, மனதில் கவலை, குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்களுக்குக்
கவலை முதலியன எவ்வளவு ஆகும் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்! பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், லட்சக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தியிருக்கிறேன். இதில் சிறப்பு என்னவென்றால், நான் நோய்களுக்குறிய மம செய்கிறேன் என்பதே எனது குடும்பத்திலுள்ளவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரியாது. காரணம் நடக்கும்போதும், பேருந்தில் பயணத்தின்போது, உட்கார்ந்து கொண்டும், நின்றுகொண்டும், ரயில் பயணத்தின்போதும், படுக்கையில் படுத்துக்கொண்டும TV
பார்த்துக்கொண்டிருக்கும்போதும் ; செய்வதனால்தான் அவர்கள் அறிய வாய்ப்பில்லை.
28. நடந்து சென்று கொண்டே இருக்கும்போது திடீரென்று இளப்பு (Wheezing) வந்துவிடுகிறது; கையில் உறிஞ்சு மருந்து இல்லை; இளப்புக்குறிய மருத்துவ மனபயிற்சி தெரிந்து வைத்திருந்தால், அங்கேயே ஒரு இடத்தில் உட்கார்ந்து அந்த மம-வை செய்தால், இளப்பிலிருந்து சிறிது நேரத்தில் முழுவதுமாக குணமாகி, புத்துணர்ச்சியுடன் சென்று விடலாம்.
29. அலுவலகத்திற்கு புறப்படும்போது தலைவலி வந்து விடுகிறது; கவலை வேண்டாம்; தலைவலிக்குறிய மம-வை பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்லும்போதே செய்து கொண்டே போனால் அது இல்லாமல் போய்விடும். மீதம் இருந்தால் பேருந்தில் உட்கார்ந்தோ அல்லது நின்றுகொண்டோ செய்யலாம். அலுவலகம் நுழையும் போது, தலைவலி நீங்கி புத்துணர்ச்சியுடன் சென்று வேலையைத் தொடரலாம். இரவில் தூக்கத்தில் நெஞ்சுகரிப்பு அல்லது நெஞ்சு வலியோ (Chest pain) வந்து விடுகிறது. படுத்துக் கொண்டே அதற்குறிய மம-வை பத்து நிமிடங்கள் செய்தால் உடனே சரியாகிவிடும்; குணமானவுடன், தூக்கமும் தானாகவே வந்துவிடும்; மீதத் தூக்கத்தைத் தொடரலாம்.
30. கர்ப்பிணிப் பெண்கள் வலி வரும்போது வலிக்குறிய மம-வை செய்தால், வலி குறைந்து குழந்தைகளை சுலபமாக பெற்றெடுக்கலாம். பத்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் மம-வை செய்து நொய்களிலிருந்து விடுபடலாம் என்பதை பரிசோதித்து உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
31. விமானத்தில் செல்லும்போது ஒருவருக்கு நெஞ்சுவலி வந்துவிடுகிறது; கையில் மாத்திரை இல்லை; விமானத்தில் டாக்டர் எவரும் இல்லை; பயபடவேண்டியதில்லை; கலங்க வேண்டியதில்லை; வலி ஆரம்பித்த உடனே நெஞ்சுவலிக்குறிய மனபயிற்சியை ஆரம்பித்து விட்டால், பத்து நிமிடங்களில் வலி இல்லாமல் போய்விடும்.
32. திடீரென்று தோன்றும் அபாயகரமான நோய்களை குணப்படுத்த மமம-வைத தவிர வேறு மருத்துவங்கள் இல்லை!
ஆசை யாரை விட்டது! சுவையாக இருக்கிறது என்று இரவு சாப்பாட்டை கொஞ்சம் கூடுதலாக சாப்பிட்டு விட்டால், அன்று அதற்குரிய தண்டனையை எதிர்பார்க்கலாம். நல்ல தூக்கத்தில் திடீரென்று கால் நரம்புகளச் சுண்டி இழுத்துப் பாதங்களை முறுக்கும். அப்பொழுது கடினமான பொறுக்க முடியாத வலி இருக்கும். கால்களை தரையில் வைக்க முடியாது. இது ஒரு அவசரகால நோய். உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். எந்த மருத்துவத்தைத் தேடி ஓடுவீர்கள்? நான் உடனே மம-யை செய்து ஒரு சில நிமிடங்களில் சரி செய்து விடுவேன்.
சில சமயங்களில் கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டு கழுத்தைத் திருப்ப முடியாத நிலை ஏற்பட்டு விடும். அப்பொழுதெல்லாம் மம-வை செய்து ஒரு சில நொடிகளில் குணப்படுத்தி விடுவேன்
முக்கியமான
திடீரென்று தினசரி தோன்றக்கூடிய அபாயகரமான நோய் மற்றொன்றைப்பற்றி நான் சொல்லியாக வேண்டும். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே திடீரென்று ‘புரை ஏறு”ம்.’ அப்படி புரை ஏறினால், “நமக்கு தெரிந்த உறவினர் அல்லது நண்பர் நினைக்கிறார்” என்று பிறர் சொல்ல சிறுவயதிலிருந்து கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அடிக்கடி இந்தப் புரை ஏறுதல் சாப்பிடும்போது ஏற்படும். அப்படி ஏற்படும்போது கண்கள் அகல விரியும்; கண்களில் கண்ணீர் கோர்த்து நிற்கும்; இருமல் தொடர்ந்து வரும்; மூச்சுத் திணரல் ஏற்படும்; நான் சிறிது நேரம் ஆடிப் போவேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எனது மனைவியும், மகனும் என்னையே பரபரப்புடனும், பயத்துடனும், பார்த்துக் கொண்டிருப்பார்கள். எனது மனைவி, எனக்குக் குடிக்கத் தண்ணீரை எடுத்துக் கொடுப்பார்; நான் நீர் அருந்த மாட்டேன். நீர் அருந்தினால் விளைவு பயங்கரமாகிவிடும். உடனே புரை ஏறுதலுக்குறிய மருத்துவ மனப்பயிற்சியை செய்வேன். அடுத்த கணம் சளி உருண்டை ஒன்று வாயிலிருந்து வெளியே வந்து விழும். அது விழுந்தவுடன் சரியான நிலைக்கு வந்து விடுவேன். பிறகு சாப்பாட்டைத் தொடருவேன்.
33. ‘புரை ஏறுதல்’ எப்படி நடக்கிறது என்பதை எனக்கு அவன் தெளிவு படுத்தினான். எனது அடிப்படை பண்டயகால நோய் இளைப்பு அல்லது மூச்சிரைப்பு நோய் (றாநநணiபெ). இது சளியை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. நான் மருத்துவ மனப்பயிற்சியை கண்டுபிடித்ததிலிருந்து உணவில் எதையும் ஒதுக்குவதில்லை. ஜனவரி 2015 லிருந்து அக்குபங்சர் மருத்துவத்தைக் கற்று, அதிலும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். இரண்டு மருத்துவ சிகிச்சைகளும் போட்டி போட்டுக் கொண்டு, எனது உடல்நலத்தைப் பாதுகாக்கின்றன. கடந்த காலத்தில், சளியை ஏற்படுத்தும் என்று பயந்து ஒதுக்கிய மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம், கொடிமுந்திரிப்பழம், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, ஆப்பிள், சீதா பழம், மாதுளை என்று அனைத்து விதமான பழங்களையும், எண்ணெய்ப் பலகாரங்களையும், நெய், தயிர், மோர், அப்பளம், தக்காழிப்பழம், புளிக்குழம்பு, மீன் குழம்பு, மீன் வறுவல் சைவ மற்றும் அசைவ பிரியாணி ஆகிய அனைத்தையும் உணவில் சேர்த்துக்கொள்கிறேன்.
வயதுள்ள காலத்தில் சாப்பிடமுடியாத உணவை, வயதான காலத்தில் (74) சாப்பிட்டு அநுபவிக்கும் மகிழ்ச்சியை நல்கிய அவனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
34. மேற்கூறிய
உணவுப் பதார்த்தங்களை சேர்க்கும்பொழுத்து, சிறிதளவு சளி உற்பத்தியாகத்தான் செய்யும். எனென்றால் எனது வயது அந்தமாதிரி. காலையில் கால் மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். அப்படி செய்யும் பொழுது உடலில் ஏற்படும் காற்றோட்ட சுழற்சியும், வெப்ப ஆற்றலும் சேர்ந்து, உடலிலுள்ள சளியை வெளியேற்றி விடும். உடற்பயிற்சி செய்யமுடியாத நாட்களில் சிறிதளவு சளி வெளியேறாமல் தொண்டையில் உணவுக் குழலும், மூச்சுக் குழாயும் சேரும் இடத்தில் பாதையை அடைத்துக் கொண்டு இருக்கும். நான் சாப்பிட ஆரம்பித்து, முதல் கவளத்தை நன்றாக மென்று அனுப்பியவுடன், அந்த உணவும், அந்தச் சளியும் சேர்ந்து மூக்கிலிருந்து வரும் அல்லது செல்லும் காற்றை அடைத்துக் கொள்ளும். உடனே உடலானது ‘புரை ஏறவைத்து’ உயிரைக் காப்பாற்றத் தற்காப்பு நடவடிக்கை எடுக்கும். அந்த தற்காப்பு நடவடிக்கையின் பிரதிபலிப்புதான் கண்கள் அகல விரிதல், கண்களில் நீர் கோர்த்து நிற்பது, அடைத்துக் கொண்டிருக்கும் சளியை வெளியேற்ற இருமல் வருதல், மூச்சுத் திணறல் முதலியன.
35. மேற்கூறிய
சூழ்நிலையில், அடைத்துக் கொண்டிருக்கும் சளியை வெளியேற்றுவது ஒன்றுதான் தீர்வு. வெளியேற்றிய பிறகுதான் அடுத்த உணவுக் கவளத்தை வாயிற்குள் போடமுடியும்’ நீர் அருந்துவது நிலமையை இன்னும் மோசமாக்கி விடும். இந்த சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால், எந்த மருத்துவமும் ஒருவருக்குக் கைகொடுக்காது. அவருக்குச் சிந்திக்க நேரம் கிடையாது. ‘புரை ஏறிய’ மறுவிநாடி அவர் சிகிச்சை செய்தாக வேண்டும்; ஏனென்றால் மூச்சுத திணறல் மிகவும் மோசமாக இருந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் கைகொடுக்கும் ஒரே மருத்துவம் மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம்தான். அம்மருத்துவத்தை தெரிந்து வைத்திருந்தால்,. மறுவிநாடியே புரை ஏறுதலுக்குரிய’ மருத்துவ மனப்பயிற்சியை செய்து அடைத்துக் கொண்டிருக்கும் சளியை வெளியேற்றிவிடலாம். பாதிக்கப்பட்டவர் மருத்துவ மனப்பயிற்சி செய்தவுடன், உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்தும், காற்றுச் சுழற்சியை ஏற்படுத்தியும், அடைத்துக் கொண்டிருக்கின்ற சளியை வெளியேற்றிவிடும்.
36. இதே போல மற்றொரு அவசரகால நோய் ‘மாரடைப்பு
(hநயசவ யவவயஉம)’. முதலில் வியர்த்து பிறகு வலி எடுத்து, அடுத்த நொடியில் இறப்பு அவரை அறவணத்துவிடும். இதுவும் உடனே சிகிச்சை எடுக்கப்பட வேண்டிய நோய். நோயாளி “வியர்வை வந்து வலி எடுத்தவுடன், நெஞ்சு வலிக்குறிய மருத்துவ மனப்பயிற்சி தெரிந்திருந்தால், உடனே அதனைச் செய்து, மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம். அரோமணியின் 9 விதிகளைக் கடைப்பிடிப்பதின் மூலம் நிரந்தரமாக வராமலும் தடுத்து விடலாம்.
மனவழுத்தத்தை அப்போதைக்கப்போது சரிபடுத்தி விடுவேன்!
துயர நிகழ்ச்சிகள் குடும்பத்திலும் வெளியிலும் நடக்கும்போதும், குடும்பத்தாராலும், உறவினர்களாலும், நண்பர்களாலும் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களாலும் மனதளவில் நோகடிக்கப்படும்போதும்,
மனம் வேதனையால் கனக்க ஆரம்பிக்கும். வேறு வேலை செய்ய முடியாத அளவுக்கு மனநிலை மோசமாக மாறியிருக்கும். அப்பொழுதெல்லாம், மனவழுத்தத்துக்குரிய
மம- செய்து மனவழுத்தத்தைப் போக்கி வேலையைத் துவக்கிவிடுவேன். மனவழுத்தத்தைக் (Depression) குணப்படுத்த, நான் அறிந்த அளவில், இந்த மம-தான் சரியான சிகிச்சையாகக் கருதுகிறேன்.
37.
நான் நோய்களுக்குப் பயப்படுவதே இல்லை
சுருங்கச்
சொன்னால், இப்பொழுதெல்லாம், நான் நோய்களுக்குப் பயப்படுவதே இல்லை. அந்த நோய்கள்தான் என்னைக் கண்டு பயப்படுகின்றன. ”என்னடா இவன் எந்த நோயைக்கொண்டு தாக்கினாலும், பொசுக் பொசுக்கென்று மனப்பயிற்சி செய்து, நமது இனத்தானை அவனது உடலில் தங்கவிடாமல் ஓட ஒட விரட்டி விடுகிறானே!” என்று நோய்களெல்லாம் முணு முணுப்பது எனது காதில் விழுந்து கொண்டுதானிருக்கிறது.
38. இந்த மருத்துவத்தில்தான், நோய் குணமாகும்போதே மன அழுத்தமும் வெளியேற்றப்பட்டு, மனக்கவலை நீங்கி, நோயிலிருந்து நிரந்தரக் குணம் கிடைக்கிறது; ஆன்மீக ஆற்றலும் கிடைக்கிறது. குடும்ப தோஷமும் நீங்கி வரும்.
39. ”‘மெடிடேஷன்
(Meditation)’ என்ற ஆங்கிலச் சொல்லின் தோற்றம் ‘மெடெரி (Medari)’ என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது. ‘குணப்படுத்துதல்’ என்பதே அதன் பொருளாகும். ’மெடிஸின் (Medicine), ‘மெடிகல்
(Medical)’, ”மெடிடேட் (Meditate)’, ‘மெடிகேட்
(Medicate)’ போன்ற சொற்களும் இதே சொல்லிலிருந்து தோன்றியவை ஆகும்”. நன்றி, மாத்ருவாணி, மார்கழி 2016. மாதா அமிர்தானந்தமயி டிரஸ்டினால் பிரசுரிக்கப்படும் மாத இதழ்
40.
இறைவன், உங்களுக்காக ஒவ்வொன்றையும், எதையும், எல்லாவற்றையும் செய்யத் தயாராயிருக்கிறான்!
மருத்துவ
மனபயிற்சி செய்து நோயிலிருந்து குணமானவர்கள் அப்படியே கவனவாழ்க்கைக்கு (யுவவநவெiஎந டுகைந) மாறுவது எளிது. கவனவாழ்க்கையின் சிறப்புக்களைப் பற்றி ஏற்கனவே ‘இரட்டை மருத்துவம் (Twin Medicine)’ என்ற தலைப்பில் ‘ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள் என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறேன். தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற கற்பனை வாழ்க்கையில், உங்களது ஊழ்வினையால் விளையும் துன்பங்களுக்கு பரிகாரம் கிடையாது. அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும். இதுதான் பகவத்கீதை சொல்வது. திருவள்ளுவர் பெருமானும் ‘ஊழ்வினையை விட வலிமையுடையது எதுவும் இல்லை’ என்கிறார்.
41. ஆனால், கவன வாழ்க்கையில், உங்களது ‘ஊழ்வினையால்’ ஏற்படும் சோதனைகள் உங்களைப் பாதிக்காதவாறு பாதுகாப்பான். அனைத்தையும் உங்களது நன்மைக்கு மாற்றிவிடுவான். குடும்ப தேவைகளை உப்பு மிளகாய் வாங்கிப்போடுவது முதல் அவனே பார்த்துக்கொள்வான்.
உங்களது வளர்ச்சி, பாதுகாப்பு அனைத்தையும் அவன் கையில் எடுத்துக் கொள்வான்.
“உங்களுடைய
முன்னேற்றங்களுக்காக நீங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. முழு பிரார்த்தனையுடனும்,
நம்பிக்கையுடனும் பிரச்சனைகளை ஒதுக்கி வைத்து அவனிடம் விட்டுவிடுங்கள். இப்பொழுது காரியங்கள் யாவும் புது மாற்றம் பெற்று நல்லதாகவும், சிறந்ததாகவும் மாறும். கடவுள் (செய்வதற்கு) விருப்பமுடனிருக்கிறார்.”.
-டாக்டர்.பஸ்லூர் ரஹ்மான், MBBS.,DV.,MD.,Phd>
இந்திய அக்குபங்சரின் தந்தை- நன்றி- Face Book.
42. ‘இறைவனிடம் பேச’ நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
நீங்கள்
செய்ய வேண்டியதெல்லாம் காலையில் எழுந்ததிலிருந்து படுக்கப் போகும் வரை, செய்யும் செயலில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும்; எண்ணங்களை நீடிக்க அனுமதிக்கக் கூடாது; தனிமையில் உட்கார்ந்து கற்பனையில் மூழ்கக் கூடாது; திட்டமிடுவதற்கும், பிரச்சனைகளின் தீர்வுக்காகவும் நீண்ட நேரம் யோசிக்கக் கூடாது;
43. நடு நடுவே தானாக வரும் எண்ணங்களில் கற்பனையும் வரும், திட்டமும் வரும், பிரச்சனைகளுக்கு தீர்வும் வரும். இவ்வாறு பிரச்சனைகளை தீர்க்கும் முடிவை அவன் கொடுப்பான்; அதற்காக காத்திருக்க வேண்டும்; முடிவுகள் இருவர் பேசிக்கொண்டே செல்லும்போது அவர்கள் மூலமாகக் கிடைக்கலாம். உங்களுக்கு வேண்டியவர்கள் வந்து சொல்லலாம். குழந்தைகள் விளையாட்டிலிருந்து கிடைக்கலாம். டி.வி. நிகழ்ச்சிகளிலிருந்தும் கிடைக்கலாம். அதுவரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.
44. இந்த கவனவாழ்க்கையைதான், வியாசர் பெருமான் பகவான் கிருஷ்ணன் மூலமாக செய்யும் செயலில் முழு ஈடுபாட்டுடன் செய்யும்போது மனம் அமைதி அடைகிறது; வாழ்க்கைக்கு நற்பாதை அமைத்துக் கொடுக்கிறது என்று பகவத்கீதையில் சொல்லியிருக்கிறார்.
45. கிறிஸ்தவ
விவிலிய நூலில், நல்லது கெட்டது அறியக்கூடிய மரத்தின் பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு ஆதாம் ஏவாள் கவனவாழ்க்கைதான் வாழ்ந்திருக்கிறார்கள். அந்த வாழ்க்கையில் அவர்களின் தேவையை இறைவனே பார்த்துக்கொள்கிறான்; அவர்களோடு இறைவன் பேசுகிறான்.
46. நவீன காலத்தில் மகான்கள் ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ரவிசங்கர் ஸ்ரீ, மாதா அமிர்தானந்தமயி ஆகிய அனைவரும் ‘அக்கணத்தில்’ வாழுங்கள் (Living presenty)’ என்று போதிக்கிறார்கள். அவர்களின் போதனைகளின் நடைமுறை வடிவம்தான் கவனவாழ்க்கையாகும்.
47. ”‘நிகழ்காலம்,
இப்பொழுது’, என்பது மட்டும் நிரந்தரமானது. அது எதிர்காலத்தில் இல்லை’” நன்றி மகான் ஜே.கிருஷ்ணமூர்த்தி வசந்த இதழ், சூன், 2014-செப்டம்பர், 2014 கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன், இந்தியா, வெளியீடு.
இறைவன் என்றும் உங்கள் வாழ்வில் பங்கு பெற்று நீங்கள் வளம்பெற, அவனை வணங்கி வேண்டுகிறேன்.
கவனவாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்!
. Healer, Medicinal Meditation Expert,
Er.R.A.Bharaman BE.,FRHS.,RMP(AM).,DAcu, former Superintending Engineer, Tamil
Nadu Electricity Board. Cell:+91 9442035291;+91 7092209028 Please visit my
website www.medicineliving.blogspot.com; email: twinmedicine@gmail.com Copyright
to R.A.Bharaman alias Aromani
Updated:03-11-2016; 22-8-2017
0 Post a Comment: