ஆன்மீகத்தின் ஆணி வேர் (nail root)
C 241-MM Part 2
இரட்டை மருத்துவம்- மருத்துவ மனபயிற்சி மருத்துவம்
கவன வாழ்க்கை-3
1.‘வேலையில் கவனத்தை செலுத்து’ என்ற
வாக்கியத்தில் முழு ஆன்மீகமும் அடங்கியிருக்கு.‘கவனம்’ அல்லது ‘விழிப்புணர்வு’
என்பது எண்ணங்களை நீடிக்க விடாத மனப்பயிற்சியை
குறிக்கிறது. வேலை என்பது உடற்பயிற்சியை
குறிக்கிறது. அதாவது, எண்ணங்களை நீடிக்க
விடாத மனப்பயிற்சியின் மூலம் வேலையை (உடற்பயிற்சியை)
செய்வதுதான் ஆன்மீகமாகும். ஆகவே, வேலையில் கவனத்தை
செலுத்துவதுதான் சிறந்த இறை வழிபாடாகும்;
சிறந்த ஆன்மீகமும் ஆகும்.
2.
இதிலிருந்து ஒன்றை தெரிந்து கொள்ளலாம். கவனமில்லாமல் செய்யும் உடற்பயிற்சி அல்லது வேலை வழிபாடாகாது;
பயனும் கிடைக்காது. இப்பொழுது மக்கள் எண்ணங்களை அலை
பாயவிட்டு உடற்பயிற்சி/வேலை செய்கிறார்கள். இதில்
எந்த பயனும் இல்லை. கவனமுடன்
செய்யும்போது ,எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் எவருககும் கெடுதல் செய்ய முடியாது.
இதுதான் ஆன்மீகம். இறைவன் உலக மக்களிடம்
எதிர் பார்ப்பதுவும் இதுதான்.
3.
அவ்வாறு கவனமுடன் வேலை செய்யும்போது மன
அழுத்த எண்ணங்கள் வெளியேறி, மன அழுத்தம் காணாமல்
போய்விடுகின்றது. அதாவது, கவலை மனதை
விட்டு நீங்கிவிடுகிறது. நோய்கள் குணமாகின்றன. ஆகவே
உடல் மன நலம்தான் ஆன்மீகம்.
இதை வைத்துதான், தொல்காப்பியர் காலத்திற்கு முந்திய தமிழர்கள், உருவ
வழிபாடு தோன்றாத காலத்துத் தமிழர்கள்,
தனது சந்ததியர்க்கு‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற
இறை பழமொழியை விட்டுச் சென்றன்ர்.
4.
இந்த ஒரு வாக்கியத்தில்தான், அனைத்து மத கோட்பாடுகளும்,
கொள்கைகளும் அடங்கியிருக்கின்றன; அனைத்து மகான்களின் போதனைகளும்
அடங்கியிருக்கின்றன. அதாவது, மத கோட்பாடுகளும்,
கொள்கைகளும். மகான்களின் போதனைகளும், “எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் எவருககும் கெடுதல் செய்ய கூடாது”
என்ற உச்சமட்ட கோட்பாட்டுக்குள் அடங்கிவிடுகிறது. அந்தஉச்சமட்ட கோட்பாட்டினை தன்னுள் கொண்டுள்ளதுதான்‘செய்யும்
தொழிலே தெய்வம்’ என்ற தமிழனின் இறை
பழமொழியாகும்.
4A. ‘தாயின்
கருப்பையில் தோன்றும்போதே ஊழ்வினையும் பதிவாகிவிடுகிறது. இவ்வுலகில் பிறக்கின்ற உயிர், வெள்ள நீர்
செல்கின்ற வழியாகவே செல்கின்ற தெப்பம் (படகு) போல, ஊழ்வினை
வழியாகவே செல்லும் என்பதனைப் பெரியோரின் நூலறிவால் அறிந்தோம்’ என்று கி.பி.
2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கணியன் பூங்குன்றனார்
அவர் இயற்றிய பாடலில் ‘நீர்
வழிப்படு உம் புனை போல்’
என்று தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்.
5.
சங்க காலமான கி.பி. 2-ம்
நூற்றாண்டில் எழுதப்பட்ட அய்ந்து பெருங்காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம்.
சிலம்பு கூறும் மூன்று உண்மைகளில்
ஒன்று ”ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்”
என்பதாகும். “கோவலன் இப்பிறப்பில் செய்தனவெல்லாம்
நல்வினைகளே. ஆயினும் அவன் பொருள்
இழந்து, யாருமற்ற அனாதைபோல் மனைவியுடன் மற்றவர் அறியாமல் நள்ளிரவில்
ஊரைவிட்டுக் கால்நடையாய்ப் புறப்பட்டு வந்ததற்குக் கோவலன் முற்பிறவியில் செய்த
தீவினை” என்கிறான் மாடலன்.
6. ‘திறவோர்
காட்சி’ என்ற வார்த்தையின் மூலம்
‘அறிவுசான்ற பெரியோர் ஆராய்ந்து இயற்றிய நூல்களிலும்-உயிர்
வாழ்க்கை ஊழின் வழியே செல்லும்’
என்பதை தெளிவுபடக் கூறுகிறார் கணியன் பூங்குன்றனார். அதாவது,
அவரது காலத்திற்கு முன்பும் உயிர் வாழ்க்கை ஊழின்
வழியே செல்லும் என்ற கருத்து நிலவியிருந்திருக்கிறது.
அதாவது, கி.பி. 2-ம்
நூற்றாண்டிற்கு முன்பும் கி.மு. காலத்திலும்
மேற்சொன்ன கருத்து நிலை கொண்டிருக்கிறது.
7.
ஊழ்வினையின் ஏஜண்டாகத்தான்
எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றன; சொற்களாக
வெளியேறுகின்றன; செயல்களாக மாறுகின்றன..
8.
ஒருவர் நல்லவராக இருக்கிறார்; சிறந்த பண்பாளர்; இந்த
நற்குணமும் பண்பும்தான், அவரது முற்பிறவியின் நல்வினைகளை/தீவினைகளை இப்பிறவியில் அனுபவிக்க பயன்படுத்தப்படுகின்றது. இப்பிறவியில் நல்ல வழியிலேயே பொருள்
சேர்த்திருப்பார். அவருக்கு ஏற்பட்ட சோதனையில் அப்பொருளை
காவல் துறைக்கும் நீதி மன்ற துறைக்கும்
செலவிடும் கட்டாய சூழ் நிலைக்குத்
தள்ளப்படுகிறார். அவரும் அவரது குடும்பத்தாரும்
‘நேர் வழியிலேதானே சம்பாதித்தோம், அப்படிருக்க நமது பணம் ஏன்
அநியாயமாக போலிசு ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்கும்
தண்ணியா செலவழியுது’ என்று தினம் தினம்
வருத்தப் படுவார்கள்.
9.
உறவினர்களும், சுற்றிருப்பவர்களும்,
‘அய்யோ இந்த நல்ல குடும்பத்துக்கு
இப்படி ஒரு சோதனையா?’ என்று
சொல்லி வேதனைப் படுவார்கள். இன்னும்
சிலர் ‘நல்ல வழியில்தான் சம்பாதித்தார்
ஆனால், போலிஸ் ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்குமே
பணத்தை தண்ணியா செலவழிச்சாரே மனுசன்.
கெட்டதுக்குதான் காலம்னு புரிஞ்ச்சிக்கில. உத்தியோகத்தில
இருக்கும்போது நேர்மையா இருந்து சம்பாதிக்காம விட்டுட்டாரு.
பொழைக்கத்தெரியாத மனுசன்’, என்று கூறுவார்கள்.
10.
இந்த நிலை அந்த நல்லவர்க்கு ஏன்
வந்தது. அவர் முற்பிறவியில், பிறரை
ஏமாற்றி பொருள் ஈட்டியிருப்பார். பணத்தை
பறிகொடுத்தவர்கள் மனம் எவ்வளவு நோகும்
என்பதை அறியச் செய்யவே, இறைவன்,அவரை இப்பிறவியில் நல்லவராக
பிறக்கவைத்து, நேர்மையான முறையில் பணத்தை சம்பாதிக்கவைக்கிறார். அந்த பணத்தை
போலிஸ் ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்கும் செலவளிக்கும்படி செய்கிறார், இதன்மூலம் அந்த நல்லவர் மனத்தை
வேதனைப் படவைக்கிறார். முற்பிறவியில் அவரிடம் பணத்தை பறிகொடுத்தவர்கள்,எவ்வளவு வேதனைபட்டார்களோ, அந்த
அளவுக்கு இப்பிறவியில் வேதனையை அனுபவிக்கிறார். இவ்வாறுதான்
நல்லவர்கள் வேதனையை அனுபவிக்கிறார்கள்.
11.
இராமாயணத்தில், இராமருடைய,
’உண்மையை பின்பற்றக்கூடிய குணம்தான்’, அவருடைய ஊழ்வினையை அனுபவிக்க,
இறைவனால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்ற இராமர் காட்டுக்குப்புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். மகனைப்
பிரிந்த துக்கம் தாளாமல், தசரதர்
இறந்து விடுகிறார்.
12. அவருடைய நலம் நாடுபவர்கள்“இராமர்
பெருமானே! தந்தைதான் இறந்து விட்டாரே இறந்ததோடு
அவருடைய வாக்குறுதியும் செத்துவிட்டதே! பிறகு ஏன் நீங்கள்
காட்டுக்குச் செல்லவேண்டும்! மீண்டும் நாட்டுக்கு திரும்ப வேண்டும்” என்று
கேட்கின்றனர். அதற்கு இராமர் “தந்தை
கொடுத்த வாக்குறுதி உண்மைதானே! அவர் இறந்ததினால் உண்மை
பொய்யாகிவிடுமா!” என்று கேட்டுவிட்டு தனது
பயணத்தைத் தொடர்கிறார்.
13.
மகாபாரதத்தில், கர்ணன்
தனது பிறப்பின் இகசியம் தெரியாமல் வளர்ந்து
வருவதால், பாதுகாப்பற்ற நிலைககுத் தள்ளப்படுகிறான். இதனால், யார் அறிவுரை
கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் சந்தேகக்கண்
கொண்டு பார்ப்பான். இந்த குணத்தைத்தான், இறைவன்
அவனுடைய ஊழ்வினையை அனுபவிக்க பயன்படுத்துகிறார். அரசன் சாலியா பாண்டவர்களின்
மாமன். துரியோதனனும், கர்ணனும் அவனை நல்ல முறையில்
உபசரித்து தங்கள் பக்கம் இழுத்துக்
கொள்கிறார்கள். போர் உச்சக்கட்டத்தின் போது,
சாலியா ’அர்ச்சுனனின் தலையை குறி வைக்காமல்
இதயத்தை நோக்கி குறி வைத்து
அம்பு எய்தும்படி அறிவுரை கூறுகிறான்’. அந்த
அறிவுரையை கர்ணன் சந்தேகப்படுகிறான். இதனால்,
போரில் தோல்வி யடைந்து மடிகிறான்.
14.
ஆகவே, ஊழ்வினைக்குத்
தகுந்தாற்போல எண்ணங்கள்; அந்த எண்ணங்கள் போல
வாழ்வு. இதுதான் ஆன்மீகத்தின் ஆணிவேர்.
15.
ஒரே குடும்பத்தில் கோபம், அவசரப் புத்தி,
போட்டு கொடுக்கும் குணம், நேர்மை, பொறாமை
ஆகிய குணங்களைக் கொண்ட பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
அந்த குணங்களைக் கொண்டுதான் ஊழ்வினையை கழிக்க இறைவன் காய்களை
நகர்த்துகிறான். அந்த குணங்களினால் குடும்பத்தில்
பிரச்சனைகள் வரலாம். அப்பொழுதெல்லாம் பிரச்சனையை
உண்டாக்கும் பிள்ளைமீது மற்றவர்கள் கோபம் கொள்வதோ வெறுப்பதோ
கூடாது. பிள்ளைகள் மற்றும் தாய் தந்தை
ஆகிய அனைவரின் ஒட்டு மொத்த ஊழ்வினைதான்
அந்த குடும்பத்தின் ஊழ்வினையாகும். ஆகவே பிரச்சனை எழும்போது,
அனைவரும் பொறுமையாக இருந்து, ஊழ்வினைக்காக இறைவன் நடத்தும் செயல்கள்
என்று உணர்ந்து, அதனை எதிர்கொள்ளவேண்டும்.
16.
ஊழ்வினையிலிருந்து தப்பிக்கமுடியாது.
ஊழிற்
பெருவலி யாவுல மற்றொன்று
சூழினுந்
தான்முந் துறும்.”
அதாவது,
ஊழ்வினையைப் போல வலிமையுடையது எதுவும்
இல்லை. அதிலிருந்து தப்பிக்க ஓடி ஒழிந்தாலும். அது
உனக்கு முன்பு வந்து அங்கு
நிற்கும் என்று வள்ளுவப் பெருமான்
கூறுகிறார்.
17.
ஆனால், ஊழ்வினையை குறைக்கலாம். அது எப்படி என்பதை
பின்பு பார்க்கலாம்.
Email:twinmedicine@gmail.com
R.A.Bharaman (Aromani), 9442035291.
Copy right to R.A.Bharaman
0 Post a Comment: