Monday, September 22, 2014

வளத்தில் உயர்ந்த வளம்-2



                     வளத்தில் உயர்ந்த வளம் (resource) எது?
C 240-MM Part 2-கவனவாழ்க்கை 2-                   
                          கவனவாழ்க்கை-2
                     (Attentive life-2)
                  இரட்டை மருத்துவம்
இரண்டாவது மருத்துவம்: மருத்துவ மனபயிற்சி மருத்துவம் (மமம) பகுதி II (Medicine of Medicinal Meditation-MMM-Part II)


வாழ்க்கையை சுவையாக்க...முடியுமா?

1.ஆதாம் ஏவாள் ஆகிய இருவரின் சாபம் (ஊள்வினை) நீங்க, இறைவன் மறைபொருளாக சொன்ன இரண்டு வார்த்தைகளைக் கண்டுபிடித்து அதன் உட்பொருளை அறிந்து, அதன்படி நடந்து, இறைவனோடு ஒன்றானவன் தமிழன். அவன் கி.மு காலத்தைச் சேர்ந்தவன். கி.மு காலத்தைச் சேர்ந்த தமிழர்கள், ‘நீயும், நானும் அதுதான், மற்ற எல்லாமே அதுதான்என்பதை தெளிவாக அறிந்திருந்தார்கள். ஆகவேதான், அந்த இறைப்பழமொழியை தனது சந்ததிகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். இப் பழமொழி வேறு மொழி பேசுபவர்களிடையே இருக்கிறதா என்று தெரியவில்லை.


2. கடவுளை எவ்வாறு வழிபாடு செய்தால் கடவுளை அடையலாம் அல்லது வளர்ச்சியைக் கொடுக்கும், சரியான வழிபாடு எது என்பதையும் தெளிவாக அறிந்திருந்தார்கள். கடவுள் வழிபாடு என்று சில நிமிடங்கள், சில மணித் துளிகள் என்று மேற்கொள்ளவில்லை. வாழ்க்கையையே வழிபாடாக மாற்றினார்கள். அதன் மூலமாக இறைவனோடு இருந்தார்கள். இறைவனும் அவர்களோடு இருந்தான்.


3. மனம் அதிக அளவு கேளிக்கைகளை விரும்பினாலும், அறியாமை கொடி கட்டிப் பறந்தாலும், விழிப்புணர்வு தாழ்ந்திருந்தாலும், அந்த மனம் வளர்ச்சியடையாத மனம். மனச்சாட்சியை ஒதுக்கிவிட்டு, எண்ணத்தால் எண்ணியும், சொற்களால் பேசியும், செயல்களைச் செய்ய விரும்பினாலும் அந்த மனம் வளர்ச்சியடையாத மனமே என்பதில் தெளிந்த மனம் கொண்டிருந்தார்கள்.


4. மனதின் வளர்ச்சியே ஆன்மீகத்தின் வளர்ச்சியாகும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. மனவளர்ச்சியின் வேகத்திலேயே ஆன்மீகத்தின் வளர்ச்சியும் இருக்கிறது. ஆகவே, உடல் மன நலம்தான் ஆன்மீகம் என்பதைத் தெரிந்து உடல் மன நலத்தைப் பேணிக்காத்து கவன வாழ்க்கை அல்லது இயல்பு வாழ்க்கை என்னும் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆன்மீக வாழ்க்கையின் ஒரு கிளையான காலமற்ற வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அறிவியல் வளர்ந்த இக்காலத்தில் அறிய வேண்டிய அறிவியலை அறியாமல் வாழ்கிறார்கள். ஆனால், அறிவியல் வளராத அக்காலத்தில், அறிய வேண்டிய அறிவியலை அறிந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு கிடைத்த அசைக்க முடியாத சான்றுதான் அந்த இறை பழமொழி. ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்ததின் மூலம், சுறு சுறுப்பாக இயங்கும் பண்பினைப் பெற்றார்கள். இந்தப் பண்பு, இயல்பான வாழ்க்கையைக் கொடுத்தது. இவ் வாழ்க்கை இயற்கையின் முழு ஒத்துழைப்பினால் முயற்சியில்லாத செயல்பாடுகளுக்கு வித்திட்டு வளர்ச்சியைக் கொண்டு வந்தது. இந்த வளர்ச்சி அவர்களுக்கு ஒவ்வொரு மனிதனுக்கு மகிழ்ச்சியை தந்தது.


5. அவர்கள் தனது சந்ததியர்க்கு விட்டுச் சென்ற இறைபழமொழியின் மூலம்,கற்பனை வளத்தில் குறைந்திருந்தார்கள் என்ற மற்றொரு உண்மையும் தெரியவருகிறது


6. இந்தக் கற்பனை வளம் ஒருவரது திறமையைக் குறைக்கிறது; திறமைக் குறைவு வேலையின் அளவைக் குறைக்கிறது; உடல் மன நலத்தைக் குறைக்கிறது; வருவாயைக் குறைக்கிறது; செல்வத்தைக் குறைக்கிறது; ஒட்டு மொத்தத்தில் வளர்ச்சியைக் குறைத்து மகிழ்ச்சியைக் குறைக்கிறது.


7. கற்பனை வளம் குன்றிய ஆங்கிலேயர்கள் உலகின் பெரும்பகுதியை ஆண்டார்கள் என்பதை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. கற்பனை வளம் குறைந்து, மனவளம் அதிகமாக இருந்ததால், கற்பனை வளம் அதிகமாகவும் மனவளம் குறைவாகவும் பெற்ற இந்தியர்களை அவர்கள் ஆண்டார்கள். மனப்பயிற்சி குறைவினால் இந்தியர்களுக்கு மனவளம் குறைந்திருந்தது.


8. மனவளம் குறைந்ததினால், இந்திய அரசர்களிடையே ஒற்றுமை இல்லை. பொறாமை, காட்டிக் கொடுக்கும் குணம், அகம்பாவம், ஆணவம், திறமையின்மை போன்ற எதிர்மறை பண்புகளைப் பெற்றிருந்தார்கள். புதியன கண்டுபிடிக்கும் திறமையின்மையால், ஈட்டி, வாள், கேடயம் ஆகிய யுத்தக் கருவிகளையே பயன்படுத்த முடிந்தது. இவைகள், துப்பாக்கி, பிரங்கி போன்ற தொலைதூர வீரர்களைத் தாக்கும் கருவிகளுக்கு முன்பு தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆகவே 36 மாநிலங்களைக் கொண்ட இந்தியாவை ஒரு மாநில அளவே உள்ள இங்கிலாந்தினால் அடிமைப்படித்தி ஆளமுடிந்தது, ஏன், உலகத்தின் பெரும்பகுதியையே ஆளமுடிந்தது.


9. இதையெல்லாம் உணர்ந்து நாம் நம் வாழ்க்கையில் மன வளப் பயிற்சிகளை பழகிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மனத்தைப் பலப்படுத்தி உள்ளத்தையும் உடல் நலத்தையும் காத்து வாழ்க்கையை சுவையாகவும் சுகமாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

மருத்துவ மனபயிற்சி நிபுணர்
இரா.அ.Aபரமன்(அரோமணி)
(Er.R.A.Bharaman alias Aromani)
cell:9442035291
Please visit the following websites:
www.medicineliving.com;
www. medicineliving.blogspot.com;
copyright to R.A.Bharaman alias Aromani.






முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: