Monday, September 22, 2014

மூல காரணங்கள்


நோய்களை குணப்படுத்தும் பொதுவான ‘ஊடகம் (Media) எது!?


B 238-MM 1-

    இரட்டை மருத்துவத்தில் ஆன்மீகமும் அறிவியலும்!
நோய்கள் தோன்றுவதற்குரிய பொதுவான காரணம் என்ன? (What is the common cause for the occurrence of all the diseases?)
1. நோய்கள் தோன்றுவதற்குரிய பொதுவான முழு முதற் காரணம் செரித்தல் கோளாறுதான் (indigestion), இக்கோளாறினால் உடல் உறுப்புகளின் இயக்கம் நிலை தடுமாறி இயல்பான நிலையிலிருந்து கோளாறான இயக்கத்திற்கு மாறுகிறது, இவ்வியக்க மாற்றம் கழிவுப் பொருட்களான சிறுநீர், மலம், வியர்வை, சளி, வாயுவு ஆகியன வெளியேறுவதில் சிக்கலை உண்டாக்குகிறது. இந்தச் சிக்கல் நோய்களை வரவழைக்கிறது. இந்நோய்களின் வரவால், மனவழுத்தத்தில் ஆரம்பித்து மனககவலையில் முடிகிறது. ஆகவே அனைத்து நோய்களுக்கும் மூல காரணங்கள் 1) செரித்தல் கோளாறு (indigestion) 2) கழிவுப் பொருட்கள் ( problems in proper exit of excretion materials, namely, sweating, urine, faeces, waste gas, and mucus)  வெளியேறுவதில் சிக்கல் மற்றும் 3) மனவழுத்தம் (stress)

.2. எல்லா நோய்களுக்கும் மேலே கூறப்பட்ட மூன்றும்தான் காரணங்கள் என்று நிரூபிக்கமுடியுமா?
ஆம். நிரூபிக்கமுடியும். உடற்பயிற்சியும் (physical exercise), மனப்பயிற்சியும் (meditation) நோய்களை குணப்படுத்தும் என்பதில் யாருக்காவது ஐயப்பாடு உண்டா)? இருக்காது.

3. ஒருவர் வலிக்காக மருத்துவ மனப்பயிற்சி (medicinal meditation) செய்யும் போது என்ன நடக்கிறது?   
ம.ம.மருத்துவத்தில் அறிவியல் பகுதி, ஆன்மீகப்பகுதி என்று இரண்டு பகுதிகளாகப் பிரிந்து, ஒரே சமயத்தில் அப்பகுதிகளில் செயல்பாடுகள் நடைபெற்று உடல் மன நலம் கிடைக்கிறது.

4. ம.ம.மருத்துவத்தில் அறிவியல் பகுதி (science part)
ஒருவர் மருத்துவ மனப்பயிற்சியை ஆரம்பித்தவுடன், சிறப்பு ஒதுக்கப்பட்ட அதிகபடியான இரத்தம் {சிஒஅஇ(SREB)} வலிக்ககக்கூடிய இடத்திற்கு விரைந்து அனுப்பப்படுகிறது (யாரால்?); ஆற்றலை  வலிக்கு மாற்றுகிறது; வலி குணமாகிறது.

5. இரத்தத்தின் ஆற்றல் வலிக்கு மாற்றுவதால் அது எப்படி குணமாகிறது?
வலிக்கக்கூடிய இடத்தில் ஆற்றல் மாறியவுடன், உடல் முழுவதும் வெப்பம் பரவுகிறது. வெப்பத்தைப் பெற்றவுடன், வியர்வை வெளியேறுகிறது; நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் ஏப்பம் வெளியேறுகிறது; வழக்கத்துக்கும் மாறாக உமிழ்நீரும் மற்றும் சிறுநீரும் (saliva, and urine) அதிகமாக சுரக்கிறது; மல அடைப்பிருந்தால் அது வெளியேறும்; சளி நெஞ்சிலிருந்தும், வயிற்றிலிருந்தும் வாய் வழியாக வெளியேறுகிறது; மல ஆசன வாயிலிருந்து வாயு வெளியேறுகிறது.

6. மருத்துவ மனப்பயிற்சியால் உண்டான வெப்பத்தினால், வியர்வை எப்படி வெளியேறுகிறது?
வெப்பத்தைப் பெற்றவுடன், தோல் விரிவடைகிறது; வியர்வைத் துவாரங்களும் விரிவடைகின்றன. இதனால், அடைத்துக் கொண்டிருந்த வியர்வை விரிவடைந்த துவாரங்கள் வழியாக வெளியேறுகிறது.

7. வெப்ப பரவலால், நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் ஏப்பம் வாய் வழியாக எப்படி வெளியேறுகிறது?
Aவெப்பத்தால், நெஞ்சு விரிவடைகிறது; அதனுள் அடைத்துக்கொண்டிருக்கும் வாயுவும் விரிவடைகிறது; வாயுவின் அழுத்தமும் அதிகரிக்கிறது. வாயுவின் அழுத்தம் அதற்கு மேலேயுள்ள (உணவுக்குழல், தொண்டை,வாய் முதலியன) காற்றின் அழுத்தத்தை விட அதிகரிப்பதால், வாயு ஒரு சத்தத்துடன் வாயிலிருந்து வெளியேறுகிறது. அந்த சத்தம்தான் ஏப்பமாகும்.

8. வெப்ப பரவலால், உமிழ்நீரும் சிறுநீரும்,  எப்படி சுரக்கிறது?
மருத்துவ மனப்பயிற்சியால் (ம.ம.பயிற்சி) ஏற்படும் வெப்ப பரவல் உடலுக்குள் வேதியல் செயல்பாட்டினால் (chemical reaction) அதிகமான உமிழ்நீரும் மற்றும்  சிறுநீரும் (saliva and urine) உற்பத்தியாகிறது. அதிகபடியான உமிழ்நீர் செரித்தல் குறைபாட்டினை நீக்குகிறது. உடலிலுள்ள, தாகம் எடுக்காமல் குடிக்கும்  தண்ணீர் சிறுநீராக, மற்றும் வியர்வையாக  வெளியேறுகிறது.

9. மருத்துவ மனப்பயிற்சியால் ஏற்படும் வெப்ப பரவலால், அடைபட்ட மலமிருந்தால் (faeces) வெளியேறும். எப்படி?
மலம் கெட்டியாக இருப்பதால் பெருங்குடலிலிருந்து மலத்துவாரத்தின் வழியே வெளியில் வரமுடியாமலிருக்கும். மருத்துவ மனப்பயிற்சியால் ஏற்படும் வெப்ப பரவலுக்கு பின்பு, வெப்பத்தினால் மலம் இலகி சுலபமாக வெளியில் வந்துவிடுகிறது.  

10. மருத்துவ மனப்பயிற்சியால் ஏற்படும் வெப்ப பரவலால், நெஞ்சிலிருந்தும், வயிற்றிலிருந்தும் சளி (sputum) எப்படி வாய் வழியாக வெளியேறுகிறது?
வெப்பமானது நெஞ்சு மற்றும் வயிறு ஆகியவற்றின் சுவர்களில் ஒட்டிக்கொண்டிருக்கிற சளியை இலகச் செய்கிறது; இதனால் சுவற்றின் பிடியிலிருந்து சளி விலகி வெளியேறி வாய் வழியாக வந்துவிடுகிறது.

11. மருத்துவ மனப்பயிற்சியால் ஏற்படும் வெப்ப பரவலால், மலஆசன வாயிலிருந்து (anus), குடல்களை (intestines) அடைத்துக் கொண்டிருக்கும் வாயு (gas) எப்படி வெளியேறுகிறது? (How would gas exit from anus  due to the heat spread? 

12. மருத்துவ மனப்பயிற்சியால் ஏற்படும் வெப்ப பரவலால், வயிறு மற்றும் குடல்களை (intestines) அடைத்துக் கொண்டிருக்கும் வாயு (gas) விரிவடைகிறது; அழுத்தமும் அதிகரிக்கிறது. இதனால் வாயுவின் அழுத்தம்,  மலஆசன வாய்க்கு வெளியிலிருக்கும் காற்றின் அழுத்தத்தைவிட அதிகமாவதால், வாயு மல ஆசன வாயிலிருந்து (anus) பீரிட்டுக் கொண்டு வரும்.

13. ம.ம.மருத்துவத்தில், ஆன்மீகப் பகுதி (Spiritual part).
வலிக்குரிய மருத்துவ மனப்பயிற்சியை (medicinal meditation) ஆரம்பித்தவுடன், மேல் மனசு வலியை எடுத்துக் கொண்டு, தனக்குள் கீழ்நோக்கி  ஆழத்தை நோக்கி பயணிக்கிறது. அப்படி பயணிக்கும்போது, தன்னிடமிருக்கும் வலியையும், மனவழுத்த எண்ணங்களையும் (stressed thoughts) வெளியேற்றிக் கொண்டே செல்லும். அது மிகவும் ஆழத்திற்குச் செல்லுகின்றபோது, தன்னிடமுள்ள வலி உணர்வையும், மனவழுத்த எண்ணங்களையும் முழுவதையும் வெளியேற்றிவிட்டு, காலியாக இருக்கும். இந்த காலியான மேல்மனது ஆழ்மனதுடன் (இறைவனுடன்) ஐக்கியமாகிறது. இணைந்த மனசு, நோய் குணமாகி (மனவழுத்தங்களும் இல்லாமல்)      முழு நித்திய ஆற்றலை (eternal energy) எடுத்துக் கொண்டு, பெரு மகிழ்ச்சியுடன், வேலை செய்வதற்கு தயாரான நிலையில் வெளிவருகிறது. இதுதான் ஆன்மீக இயக்கத்தின் மையக் கருத்தாகும்.

14; இதேபோல, உடற்பயிற்சி செய்யும்போதும் அறிவயற்பகுதி, ஆன்மீகப் பகுதி என்று இரண்டு பகுதிகளாக பிரிந்து ஒரே சமயத்தில் அதனுடைய செயல்பாடுகளை செய்து உடல் மன நலத்தைக் கொடுக்கிறது.  நோய்களை குணப்படுத்துவதில், மருத்துவ மனப்பயிற்சிக்கும், உடற்பயிற்சிக்கும் பொதுவான ஊடகமாக   (media) செயல்படுவது வெப்பமாகும் (heat).








முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: