A 231-MLM அரோமணியின் 7-வது விதி-
அரோமணி 7-வது விதி, நல்ல காற்றோட்டம் பல நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாகும்
அரோமணி 7-வது விதி, நல்ல காற்றோட்டம் பல நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாகும் என்பதை வலியுறுத்துகிறது. நல்ல காற்றோட்டம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களையும், இளப்பு (wheezing) சளி (sputam), காய்ச்சல் (fever), மலச்சிக்கல் (constipation), ஒற்றைத்தலைவலி (migraine) தூக்கமின்மை (insomnia) முதலிய நோய்களைக் குணப்படுத்தும், வராமலும் தடுக்கும்.
2. இறைவன், 06-03-2011 ந் தேதியை 7-வது அரோமணி விதியை வெளிப்படுத்தும் நாளாகக் குறித்திருந்தான்.
அந்த நாளில், வெகு காலையில், இளப்பின் கொடுமையைப் பொறுக்க முடியாமல், கொசுவலை
யிலிருந்து தலையை மட்டும் விடுவித்து, வெளியில் வைத்துக் கொண்டேன் .நான் ஆச்சரியப்
படும்படியாக, உடனே இளப்பிலிருந்து விடுவிக்கப்பட்டேன். அதே நேரத்தில், மின்னல் வேகத்தில், எல்லாம்
வல்லவன், 7-வது அரோமணி விதியை வெளிப்படுத்தினான்.
3. அரோமணி
7-வது விதி ( Aromani 7th Principle)
4. அதன்படி,,
”ஒருத்தருக்கு, ஒரு மணி நேரத்திற்கு. தேவையான 98 கன மீட்டர் காற்று (air) குறைவதற்கு தகுந்தாற்போல, எதிர் விகிதத்தில் (inversely proportional ),
அவரது உடல் பலவீனமும், புதிய நோய்களின் தாக்கமும், பழைய நோய்களின் கடுமையும்
அதிகரிக்கும்”.
5. எதிர்மறையாக: ”நமது சுவாசத்திலிருந்து
வெளிவரும் கார்பானிக் அமிலம் (carbonic acid) காற்றில் அதிகரிக்க, அதிகரிக்க நேர்
விகிதத்தில் (directly proportional) உடல் பலவீனமும், புதிய நோய்களின் தாக்கமும்,
பழைய நோய்களின் கடுமையும் அதிகரிக்கும்”.
6. பொதுவாக காற்றை ஒரு உணவாக கருதாவிட்டாலும்,
காற்றிலிருந்து பெறப்படும் ஆக்ஜிசன், வாழ்வதற்கு,
மிகவும் தேவையான ஒன்றாகும். உணவில்லாமல்
மாதக்கணக்கில் உயிர் வாழலாம். தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் கூட வாழலாம். ஆனால், ஆக்சிஜன் (oxygen)
இல்லாமல் 5 நிமிடங்கள் கூட உயிர் வாழ முடியாது. பொதுவாக இந்த உண்மையை யாரும்
உணர்வதில்லை. இதனால், அடைக்கப்பட்டுள்ள தூய்மைற்ற காற்றை மீண்டும் மீண்டும்
சுவாசிப்பதனால், பல மிகவும் மோசமான நோய்கள் வரக் காரணமாகிவிடுகிறது.
7. குளிர் மாதங்களில்,
வென்டிலேசன் மூலமாக காற்று வருவதற்கு வேண்டிய முன்னேற்பாட்டினை எந்த ஒரு
வீட்டிலும் எடுப்பதில்லை.
காற்று உண்மையிலேயே ஒரு
உணவுதான். அதனை ஒரு உணவாகத்தான் பார்க்க வேண்டும். ஏனென்றால், ஏற்கனவே மேலே
குறிப்பிட்டபடி, வாழ்வதற்கு, ஆக்சிஜன் மற்ற எந்த மூலத்தை விட (element) மிகவும்
முக்கியமான ஒன்றாக இருப்பதனால்தான்.
8. உடல் நலத்தைப் பேணிக் காக்க, சரியான அளவில், சரியான உணவு
சாப்பிட்டு, தண்ணீர் அருந்தினாலும், எல்லா நேரத்திலும், தூய்மையான காற்று
கிடைப்பதற்கு கவனம் எடுத்து கொள்ளா விட்டால், சிறிதளவுதான் பலன் கிடைக்கும்.
உலகில், வலிமை வாய்ந்த டானிக் (tonic) மருந்துகளில் தூய்மையான ஈரக் காற்றும் (cold air) ஒன்றாகும்.
வெப்பநிலை (temperature) மிகவும் குறைவாக இருந்து, நமது உடலை குளிருக்கு அதிக
நேரம் உட்படுத்தி, அதனால், உடலின் ஒரு பகுதி உறையக் கூடிய நிலை (freeze) ஏற்பட்டால் ஒழிய, மற்றபடி ஈரக் காற்று எவருக்கும் கெடுதல்
செய்வதில்லை.
9. .பல சமயங்களில், உடலை குளிருக்கு உட்படுத்துவதால், சளிப்
பிடிப்பது (Colds),,
வெளிப்படை யாகத் தெரிந்தாலும், உண்மையில் அந்த நேரத்தில் தூய்மை யில்லாத (impure condition) இரத்தம்
தான் காரணமாகும். மற்றபடி, நல்ல உடல் நலத்தில் சுகம் காணும் ஒருவருக்கு ஈரக்
காற்றினால் சளிப்பிடிக்கும் அபாயமில்லை. தூய்மையில்லாத காற்றுதான் (Impure air) கன்சம்ப்சன்
(consumption) நோய்க்கு முக்கிய காரணமாகும். இன்று இந்த நோயினால் ஆயிரக்கணக்கானோர்
இறக்கிறார்கள்.
10. “அவர்கள
“சளியைப் பிடித்துக்கொள்கிறார்கள் (catch a cold") சளிப்பிடித்த
நாளிலிருந்து, புத்தம் புதிய(fresh) தூய்மையான காற்றுக்கு நிரந்தரமாகப் பயந்து கொண்டே
இருந்தவர்கள்; அதன் முடிவு, சளி எப்பொழுதும் நீங்கவில்லை; படிபடியாக மோசமாகி
மேலும் மோசமாகி, உடலிலுள்ள அசுத்தங்களின் அளவும், நோய்க்கிருமிகளும்
கூடி,இறுதியில், நுரையீரல்களை வலிமையுடன் ஆக்கிரமித்ததின் விளைவாக அவர்கள் வேகமாக
இறப்பைத் தழுவுகிறார்கள்.
11. நீங்கள் உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம்
கொடுக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் தூய்மையான காற்றின் முக்கியத்தைப்
பற்றி உணராமல், எல்லாநேரமும் அக்காற்றுக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யாவிட்டால்,
பெரிய அளவில் உடல் வலிமை பெறுவதறகு சிறிதளவு கூட சந்தர்ப்பமில்லை.
12. சுவாசித்த காற்றையே மீண்டும் மீண்டும்
சுவாசிக்கும்பொழுது, அக்காற்று, ஒவ்வொரு உயிரினமும் அதன் நுரையீரல்களிலிருந்து (lungs) வெளித்தள்ளும்
கார்பானிக் அமில வாயுவின் (carbonic acid
gas) வலிமையான வாசனையை வெளியிடுகிறது. இந்தக் காற்று அதிக
மோசமான (baneful)
விளைவுகளை உண்டு பண்ணும் நச்சு வாயுவாகமாறுகிறது. இந்த மோசமான நிலையில், உடல்
பலவீனப்பட்டவருக்கு, நோய் சுலபமாகத் தொற்றிக் கொள்ளும்.
12A.. ஒருவர் உடல்நலத்தை நன்றாக காக்க வேண்டுமானால், கோடை
காலத்தில் இரவு நேரங்களில் மேல் கீழ் ஜன்னல்களையும், குளிர்காலத்தில் மேல்
ஜன்னல்களையும் திறந்து வைக்கவும். நீங்கள் அலுவலகத்திலோ, பள்ளி அறையிலோ, படுக்கை
அறையிலோ ஆக எங்கிருந்தாலும், அங்கு ஆக்ஜிசனை வழங்கும் காற்றைத் தாராளமாகக்
கிடைக்கச் செய்ய வேண்டும்.
13.
சில நேரங்களில் ஈரக் காற்று சளியை உண்டுபண்ணுகிறதே ஏன்?.
14. ஏனென்றால், ஈரக் காற்றின் தாக்கம், உடலின் ஒவ்வொரு
உறுப்பையும் (organ)
மிகச் சரியான முறையில், வேகமாகச் செயல்படும் நிலைக்குக் கொண்டுவருகிறது. மோசமடையும் நிலையிலிருந்து உடலை, மீண்டும்
சரியான நிலைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கும் ஒரு நடவடிக்கையாக ஈரக் காற்று
சளியைத் தோற்றுவிக்கிறது. சளி எவரையும், எப்பொழுதும், காயப் படுத்தியது இல்லை.
சளிக்காகவும், அதைத் தொட்ர்ந்து அடிக்கடி வரும் நிமோனியா, கன்சம்ப்சன் (consumption)
மற்றும் நூற்றுக் கணக்கான மற்ற மோசமான நோய்களுக்காக எடுக்கும் சிகிச்சை தான் இறப்புகள் உண்டாகக் காரணமாகி விடுகின்றது.
உடலமைப்பு முழுக்க, தூய்மையில்லாத நிலையைத் தோற்றுவிக்கக் காரணமாக இருக்கும்
காரணிகள்தான், சளிப் பிடிப்பதற்கு உண்மையான காரணமாகும்.
15. மேற்கூறிய நிலை, வழக்கமாக அதிக அளவு உண்ணுதல், பசி
எடுக்காமல் உண்ணுதல், சூடான, குளிர்ச்சியான உணவை மாறி மாறி உண்ணுதல், பழங்கள் போன்ற இயற்கை உணவை அடுப்புக்குக்
கொண்டுவராமல் உண்ணுதல், தாகம் எடுக்காமல்
தண்ணீர் அருந்துதல், அரை குறையாக மலம் கழித்தல், பகலில் தூங்குதல்,
உடலிலுள்ள துவாரங்கள் அடைபடும்படியான கெட்ட பழக்கங்களை மேற்கொள்ளுதல் உடற்பயிற்சி
இல்லாமை, அடைபட்ட காற்றை மீண்டும் மீண்டும் சுவாசித்து வெளிவிடுதல், அல்லது உடலை
அளவுக்கு அதிகமான துணிகளால் இரவு பகலாகப் போர்த்திக் கொள்ளுதல், அல்லது ஏதாவது ஒன்றில் அளவுக்கு மீறுதல், அல்லது
உடலின் வீரியத்தைக் குறைக்கும் தவறான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் தான்
ஏற்படுகிறது.
16. சளியை குணப்படுத்த,
உடலில் தேங்கியுள்ள தூய்மையற்றவைகளை வெளியேற்ற நீக்கும் நடவடிக்கைகளை
எடுத்தாலே போதும். இந்த எல்லா அசுத்தங்களும் நீங்கிய பிறகு சளிமறைந்துவிடும்.
காற்றோட்டத்திற்குப் பயப்படுவதற்குப் பதில், சிறப்பான முயற்சி எடுத்தாவது, முடிந்த
வரை, அதில் வாழப்பழகிக்கொள்ள வேண்டும்.; உடலை இலேசாக கதகதப்பாக வைக்கும்படியாக இலேசான துணியை
அணியவேண்டும். தவறான ஒன்றுக்கு தேவையில்லாமல் பதட்டப்படுதல், ஆகியவற்றோடு, அநேக உணவுகளைத் தவறவிட்டால் குணமாவது
வேகப்படுத்தப்படுகிறது. அதற்குக் காரணம் நீண்ட இடைவெளிதான்.
தவறாத வேகமான உடற்பயிற்சி, நீண்ட நடைப்பயிற்சி, உடலை காற்றுக்கு
உட்படுத்துதல், மனப்பயிற்சி போனற நடவடிக்கைகள் உடலில்
நிறைந்துள்ள தூய்மையற்றவைகளை (impurities) அகற்றி, நல்ல உடல்நலத்தைக் கொண்டு
வரும்.
17. நான் ஒரு திரைப் படம் பார்த்தேன். ஒருவன் தனது மனைவியை
விவாகரத்து செய்து விட்டான். விவாகரத்து பெற்ற மனைவி இரண்டாவது திருமணம் செய்து
மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள். அதைப்
பொறுக்காத முன்னாள் கணவன், அவளை கடத்திச் சென்று 3மீ*3மீ*3மீ (27 கன மீட்டர்)
அளவுள்ள அறையில் அடைத்து வைக்கிறான். உதவிக்காக உரக்க சத்தம் போடவே, ஒலி
கேட்காதபடி அனைத்து துவாரங்களையும் அடைத்து ஒலி புகாத (காற்றுப் புகாத) அறையாக மாற்றிவிடுகிறான்.
இந்த நிலையில், அதாவது காற்று இல்லாத நிலையில் அவள் எவ்வளவு நாட்கள்
உயிரோடிருப்பாள்?. ஒவ்வொருவரும் 0.000442 கனமீட்டர் (2 கன அங்குளம்) காற்றைச்
சுவாசிக்கிறோம். ஆகவே அவள் 0.000442 கனமீட்டர் அளவு காற்றைச் சுவாசிக்கிறாள்.
அறையில் 27 கனமீட்டர் அளவு காற்று இருக்கிறது (அறையின் கன அளவு 3*3*3=27 க.மீ ).
அதாவது அறையானது 61086 சுவாசங்களைப் (27/0.000442=61086) பெற்றிருக்கிறது. அதாவது
அவள் 61086 தடவை காற்றை உள்ளிழுத்து வெளிவிடமுடியும். என்ன ஆறுதல்! ஏராளமான
சுவாசங்கள் (breaths)!
இல்லையா! இப்பொழுது அந்தக் காற்றை சுவாசித்துக் கொண்டு அவள் எத்தனை நாளைக்கு
உயிரோடிருப்பாள் என்று கணக்கிடலாம். சராசரியாக ஒருவர் ஒரு நிமிடத்திற்கு 15
லிருந்து 20 முறை காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவார்கள். அவள் அந்த நேரத்தில்
மனவழுத்தத்திலிருப்பதால், ஒரு நிமிடத்திற்கு 20 முறை காற்றை உள்ளிழுத்து வெளியிட்ட
தாக(breathing)
வைத்துக் கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 20 சுவாசஙகள் (breath) என்றால், ஒரு
நாளைக்கு எத்தனை சுவாசங்கள் செய்யலாம்?.
18. 20 சுவா/நிமிடம்*60 நிமிடங்கள்/மணி * 24 மணி/நாள்
(20*60*24)=28,800 சுவாசங்கள். ஆகவே ஒரு நாளைக்கு 28,800 தடவை அவளால் சுவாசித்து
உயிர் வாழமுடியும். அந்த அறையில் மொத்தம் 61086 சுவாசங்கள் இருக்கின்றன.
அப்படியானால் அவள் 2 நாட்களுக்கு உயிர் வாழமுடியும் (61086/28800=2.12)
19. அசுத்தமான காற்று நிறைந்த அறையில் 10 அல்லது 15
நிமிடங்கள் இருந்தால் நாற்றத்தை ஒருவரால் உணரமுடியாது. வெளியிலுள்ள காற்றை
அனுமதிக்கும்பொழுதுதான் நாற்றம் அந்த அறையில் இருந்திருப்பதை அவரால் உணரமுடியும்.
இருந்தாலும், எவ்வளவு துர்நாற்றம் கலந்திருக்கிறது என்பதை கணக்கிடுவது இயலாது.
20. கார்பானிக் அமில வாயுவை உள்ளிழுத்து வெளியிடும்பொழுது,
10,000 ல் 2 பகுதியாக இருந்தால், காற்று முழுமையாக தூய்மையாக இருக்கிறது என்று
எடுத்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மிருக வாசனையோ அல்லது ஈரமடிக்கும் வாசனையோ உணர்ந்தால், வெளிவிடும் காற்று மோசமாகி, கார்பானிக் அமில வாயு 4 அல்லது 5 பகுதியை
அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம். விகிதாசாரம் 7 லிருந்து 8 பகுதியை அடைந்து விட்டால்,
காற்று மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், 10,000-ல் 12 பகுதிக்கு வந்துவிட்டால்,
மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம். இதற்கு மேல் போய்விட்டால்,
வாசனையின் வித்தியாசத்தை உணரக்கூடிய திறமையை மூக்கு இழந்து விடுகிறது.
21. நாம் வெளிவிடும் கார்பானிக் அமில வாயுவானது, எல்லா
நேரத்திலும், 10,000-ல் 2 க்கு கூடாமல் இருக்க, சரியான காற்றோட்ட வசதி
தேவைப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு தேவையான மேற்குறிப்பிட்ட தூய்மையான காற்றின்
அளவைப் பெற,, உடனே கணக்கிடமுடியும்
22. ஒவ்வொரு நல்ல உடல் நலமுள்ள இளைஞரும், ஒரு மணி
நேரத்திற்கு, 0.028 கனமீட்டர் கார்பானிக் அமிலத்தில் 0.7 பகுதியை வெளிவிடுகிறார்.
அதே நேரத்தில், 0.09 பவுண்டு தண்ணீரை, நுரையீரல்களும், தோலும் வெளியிடுகிறது.
மேலும் அவர், அவருடைய உடலிலிருந்து, ஒரு மணி நேரத்திற்கு, 400 யூனிட் வெப்பத்தை (heat), கடத்தல், மற்றும் கதிர்வீச்சல் (conduction and radiation) மூலமாக, அந்த அறைக்குத்
தருகிறார். ஆகவே காற்றோற்றத்தில் வரும் காற்றானது, மூன்று விதமான நோக்கங்களை
நிறைவேற்ற வேண்டும். 1) கார்பானிக் அமிலத்தை, சரியான அளவில் நீர்த்துப்போகச்
செய்யவேண்டும்; 2) வெளிவிடும் ஆவியை (vapors) ஈர்க்க (absorb) வேண்டும்.
அப்படி ஈர்க்கும்போது, காற்றின் ஈரத்தன்மையை (humidity)
உணரக்கூடிய அளவுக்கு அதிகரிக்க விடக்கூடாது 3) வெளிவிட்ட வெப்பத்தை, உடனே
கிரகிக்கவேண்டும், அதே சமயத்தில், கவனத்திற்கு வருகின்ற அளவுக்கு, வெப்பநிலையும்
உயரக்கூடாது.
23. 0.0196 கனமீட்டர் கார்பானிக் அமிலத்தை (ஒவ்வொரு நல்ல
உடல் நலமுள்ள இளைஞரும், ஒரு மணி நேரத்திற்கு, 0.028 கனமீட்டர் கார்பானிக்
அமிலத்தில் 0.7 பகுதியை வெளிவிடுகிறார்) ஒரு மணி நேரத்தில் வெளியிடுகிறார்..
(0.7*0.028=0.0196 கனமீட்டர்) 10,000 ல் 2 பகுதி விகிதாசாரத்தில் நீர்த்துப் போகச்
செய்ய, 98 கனமீட்டர் அளவு (0.0196*2/10000=98) காற்று தேவை. அதாவது 0.0196
கார்பானிக் அமிலத்தை நீர்த்துப் போகச்செய்ய 98 க.மீ காற்று தேவை. ஆகவே ஒவ்வொரு
இளைஞருக்கும் ஒரு மணி நேரத்திற்கு 98 கனமீட்டர் காற்று தேவை. குழந்தைகள்
வெளியேற்றும் சிறிய அளவு கார்பானிக் அமிலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால்,
பள்ளிக்கூடங்களிலும், அதேமாதிரியான இடங்களிலும் ஒரு ஆளுக்கு ஒரு மணி நேரத்திற்கு
85 கனமீட்டர் காற்று தேவை.
24. பருவகாலத்திற்கு தகுந்தாற் போலவும், குளிர்காலத்தில்
வெளிப்புற தட்பவெட்ப நிலைக்குத் தகுந்தாற்போலவும் பார்த்தால், நல்ல காற்றோற்றத்திற்கு
காற்றின் தேவை, 85 கனமீட்டர் காற்று போதுமானதாகும்; ஆனால், அதே நேரத்தில், அந்த
நாள், ஈரமான வானிலையுடன் கூடிய, ஒரு இலேசான வசந்த நாளாக இருக்கும்பட்சத்தில், அதிக
அளவு வெப்பம் கலக்காத, போதுமான காற்றுப் பெறுவது சிரமமான ஒன்றாகும்.
25. எங்கெல்லாம் கணிசமான அளவு மக்கள் கூடுகிறார்களோ
(உதாரணமாக பள்ளிக்கூடங்கள், சினிமா அரங்குகள் முதலியன) அங்கெல்லாம் அதிக அளவு
களைப்பை ( lassitude), ஏற்படுத்தும் சாத்தியமுண்டு; மயக்கம் மயக்கமாக (even fainting spells) வ.ரும். அந்தமாதிரி
சந்தர்ப்பங்களில், காற்றின் ஈரப்பதத்தைக் குறைக்க சில நடவடிக்கைகளை எடுப்பது,
மிகவும் சாலச்சிறந்தாகும்.
26. காற்றோட்ட வசதியில், இடத்தின் கன அளவு
முக்கியமல்ல; ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச இடம் தேவை
என்பது மறுக்கமுடியாத ஒன்றாகும். உடலிலிருந்து வெளிப்படும்,, கார்பானிக் அமிலம் மற்றும் வேறு வெளிப்பாடுகள் (exhalations) ஒன்றுக்கொன்று ஒப்பிடக்கூடும் வகையில், அவைகளாகவே மெதுவாக
காற்று மூலமாகப் பரவுகிறது. சரியான வேகத்தில் அட்மாஸ்பியரில் (atmosphere) சிதறிச்
செல்வதற்கு வசதியாக, ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவு ”சுவாச அறை (breathing room." பெற்றிருப்பது அவசியமாகிறது. ஒரு ஆளுக்குத்
தேவையான குறைந்த பட்ச இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு
லாட்ஜ் அல்லது ஒரு வீடு----- 8.5 கனமீ
பள்ளிக்கூடம்--------------------------------------
8 கனமீ
சாதாரண
மருத்துவமனை வார்டு— 28 கனமீ
காய்ச்சல்
அல்லது அறுவை----------- 40 கனமீ
சிகிச்சை
வார்டு
27.
தரைப் பகுதியை கன அளவு இடமாகத்தான்
எடுத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கும் கூட்டுத்தொகையின் 2.3 சதுர மீட்டர்
தரை அளவு இருக்க வேண்டும். மருத்துவமனையில் ஒவ்வொரு படுக்கையும் 9 சதுர மீட்டர்
இடம் வேண்டும்.
28.
மாட்டுக் கொட்டங்களில், ஒவ்வொரு பசு மாடும் 9 சதுர தரை அளவு வேண்டும். அதற்கு 34
கனமீட்டர் காற்றிடம் வேண்டும். பசு மாடு உணவுக்காக பால் கரப்பதால், அது நல்ல உடல்
நலத்துடனிருக்க, அதனைச் சுற்றியுள்ள காற்று தூய்மையாக இருக்க வேண்டும் என்பது
முக்கியம். பசுக்கள் வாழும் இடங்களை அதிகமான தூய்மையான காற்று கிடைக்கும்படி
செய்வது, நல்ல பலனைத் தரும் என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
முடிந்த
வரையில், படுக்கை அறை முதல் மாடியில் இருப்பது நல்லது அதனால், உடல் நலமாக
இருக்கும்; தூய்மையான காற்று கிடைக்க வழி ஏற்படும். மண் படிந்த அல்லது அழுக்குத்
துணிகள் படுக்கை அறையில் எந்த காரணத்தைக் கொண்டும் இருக்க அனுமதிக்கக் கூடாது.
அவைகள் துர் நாற்றத்தை எல்லா நேரமும் காற்றில் அனுப்பிக்கொண்டே இருக்கும்.
துவைப்பதற்கு வைத்திருக்கும் துணிகளை, படுக்கை அறைக்கு அப்பால் வைத்திருக்க
வேண்டும். வசந்த மாதங்களில் தூய்மையான காற்று எவ்வளவு
அவசியமோ, அவ்வளவு அவசியம் குளிர்மாதங்களிலும் வேண்டும்.
29.
ஒரு மனிதருடைய வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் கழிகிறது என்று
கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது அவனுடைய வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை
படுக்கை அறையில் கழிக்கிறான். இயல்பாகவே, படுக்கை அறைக்கும் , அதனைச் சுற்றியுள்ள
பகுதிக்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்படவேண்டும் என்பது தெளிவாகிறது. உடல்
நலத்தைப் பொறுத்த வரையில், வீடு முழுவதையும் ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டால்,
படுக்கை அறைக்கு முக்குயத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், விழித்திருக்கும்
நேரங்களில், நகர்ந்து கொண்டும், இடத்தை மாற்றிக் கொண்டுமிருக்கிறோம்; ஆனால்
தூங்கும்போது வாழ்க்கையை ஒரளவு நிறுத்தி வைத்து,
படுக்கை அறையில் நிறைந்துள்ள தூய
காற்றைப் பயன்படுத்தி உடலமைப்பைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.
30.
படுக்கை அறையில்தான் வேண்டாத பழைய சாமான்கள், பழைய செருப்புகள் போன்றவற்றை போட்டு,
கட்டிலுக்குக் கீழ், துணியை தொங்க விட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அந்த
மாதிரி அறையில் தூங்கும் ஒருவர் துர்பாக்கிய வானாகாத்தான் இருக்க வேண்டும். அறையை
அலங்காரம் பண்ணும்போது (decorative art) அறைமுழுக்க காற்று தடங்கள் இல்லாமல்
சுற்றிவரும்படியாக அலங்காரம் அமைவது நல்லது. காலையில் தூங்கி எழும்பொழுது,
புத்துணர்ச்சியுடனில்லாமல், மயக்கத்திலும் இலேசான மூச்சுத் திணரலுடனும் (a dazed and semi-suffocated state) அன்றைய வேலைக்கு
தகுதியற்ற நிலையிலும் இருந்தால், அந்த நிலைக்குக் காரணத்தைத் தேடி அலைய
வேண்டியதில்லை. மறுநாள் செய்யக்கூடிய வேலைக்குத் தகுந்தாற்போல ஓய்வெடுக்கும் காலம்
ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில், நரம்பு மண்டலம், மூளை அமைப்பு ஆகியவை
ஆற்றல் பெற்று மறுநாள் வேலையினால் ஏற்படும் சவாலை சமாளிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட
ஆற்றலைப் பெறுவதற்குரிய சூழ்நிலையை தூங்கும் நேரத்தில் படுக்கை அறையில்
ஏற்படுத்துவது, முக்கியமாகும். மூளைக்கும் நரம்புக்கும் தேவையான
காற்றோட்டத்தை ஏற்படுத்தி, தேவையான அளவு தூக்கமும் கிடைக்கும்படியான ஒரு நல்ல
சூழ்நிலையை நிலவச் செய்வது அவசியமாகும். அப்படியில்லாவிட்டால், மூளையால் வேலை
செய்பவராக இருந்தாலும் அல்லது உடலுழைப்பாளராக இருந்தாலும், (brain worker or muscle user) அவர்களுடைய
வேலைகளை நனறாக செய்து முடிக்க முடியாது.
31.
இந்தியா சம்பந்தப்பட்ட காரியங்களில் திறமையாளரான, சர் ஜேம்ஸ் ரனால்டு மார்டின்,
வெப்பமான வானிலையின் (hot climates) போது, கூடுதலாகத்
தூங்குவது அவசியம் என்கிறார்.
32.
குறைந்த பட்சம் 12 மாதங்களுக்கு ஒரு முறையாவது, பழையது, பயன்படாத பொருட்களை
அகற்றிவிட்டு, தூய்மைபடுத்துவது அவசியம். காற்றோட்டமில்லாத அறைகளில் தூங்கும்போது,
நுரையீரல் நோய்கள் (diseases of the lungs,) வருவதற்கு வாய்ப்புகள்
அதிகம். எட்மண்ட் ஏ பார்க்ஸ், பேராசிரியர், தனது
‘நடைமுறைத் தூய்மை’ என்னும் கைநூலில் (A
Manual of Practical Hygiene), “காற்றோட்டம்
சரியாக இல்லாததால் தோன்றும் சிறப்பான நொய்களில், பொதுவாகக் காணப்படுவது நுரையீரல் பாதிப்புகள்தான்” என்கிறார். இருதயத்தில்,
தூய்மையற்ற காற்றின் செயல்பாடுபற்றி, டாக்டர் கார்னெலியஸ் பிளாக் கூறுகிறார் “
மத்திய வயதிலிருப்பவர்களுக்கு, இருதயத்தின் வலது பக்க நோய்களுக்கு தூய்மையற்ற காற்றை சுவாசிப்பது,
மூலாதாரமாக விளங்குகிறது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன்” எத்தனை பேர்கள்,
காற்றோட்டமில்லாத அமரும் அறையில் (non-ventilated,
stuffy, sitting rooms), தங்களைத்
தாங்களே பூட்டிக் கொண்டு, , கார்பானிக்
அமிலம் நிறைந்து நச்சுக் காற்றாக மாறியிருக்கும் காற்றை சுவாசிக்க
விரும்புவார்கள்? எப்படி இந்த பேய்க் கெடுதல்களைத்
தடுக்கமுடியும் ? இதற்கு எளிய விடை, அறையில் நல்ல காற்றோட்டத்திற்கு (effectively ventilated) வழி செய்து அதன் வழியே தூய காற்று நுழையவும்,
எந்த நேரத்திலும் காற்றுப் பஞ்சம் (no draught) வராதவாறு காற்றோட்ட
அமைப்பை ஏற்படுத்துவதுதான்.
33. நலம்( Health)
34. நல்ல
காற்றோட்டம், நம்மை, நமது குடும்பத்தை, நமது விருந்தாளிகளை விரும்பத்தகாத
நாற்றத்திலிருந்தும்
(Unpleasant odors),, எரிச்சலூட்டும் மாசுக்களிடமிருந்தும் (irritating pollutants),, , கார்பன் மோனாக்ஸைடு (carbon monoxide ). போன்ற ஆற்றலுடைய ஆபத்தான வாயுக்களிடமிருந்தும்
பாதுகாக்கிறது மேலும் நன்கு திட்டமிட்ட காற்றோட்டமானது,
ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்குக் காரணமாக அல்லது தூண்ட
செய்யக்கூடிய பூஞ்சை காளான்
(mildew) வளர்ச்சியைத் தடுக்கிறது..
35. வீடு
36. நல்ல
காற்றோட்டம், காற்றிலிருந்து அதிகப்படியான ஈரத்தை நீக்கி, நமது வீட்டை
அழிவிலிருந்து பாதுகாக்கிறது அதிக ஈரப்பதம் பெயிண்டை உரித்துவிடுகிறது மற்றும் பூச்சிகளை
வரவழைக்கிறது. தரைவிரிப்புகள், வால்பேப்பர், மின்னணு சாதனங்கள், மற்றும் மரச்சாமான்கள்
ஆகியவற்றை அதிக ஈரப்பதம் சேதப்படுத்திவிடும்.
37. காற்றோட்டம்
38. காற்றோட்டம் என்பது புதிய காற்றாகும் (Ventilation means fresh air). காற்றோட்டம் நம்முடைய
வீட்டிற்கு புதிய காற்றை வழங்குகிறது; தேங்கி நிற்கும் காற்றை (stale air). நீர்த்துப்போகவோ (dilutes) அல்லது நீக்கவோ செய்கிறது.. இது நடக்க முடியும் ; அதற்கு பல வழிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, நம் வீட்டில் ஜன்னல்களை திறந்தவுடன் புதிய வெளிக்காற்று, புகுந்து உட்புறத்தில்
தேங்கி நிற்கும் காற்றுடன் கலந்து நீர்த்துப்போகச் (dilutes) செய்கிறது. சமையலறையிலோ அல்லது குளிக்கும் அறையிலோ உள்ள
மின்விசிறியை (Exhaust fan) ஓடவிட்டால் துர்நாற்றத்தையும் ஈரப்பதத்தையும் நீக்கிவிடும். மற்ற
பொதுவான வீட்டில் செய்யப்படும் காற்றோட்ட வசதிகளான, புகைக்கூண்டுகள் (chimneys,) எரிந்த வாயுக்களை (combustion gases) நீக்குகிறது; துணிகளை உலர்த்தும் மின்விசிறிகள் (clothes dryer fans),, வெதுவெதுப்பான, ஈரக்காற்றையும், துவைக்கும்
சோப்புக்ளினால் வெளியேறும் ரசாயன வாசனைகளையும் (chemicals from laundry
soaps. ) வெளியேற்றுகிறது.
39. படுக்கை அறை சுவர்களிலிருந்து
கெட்ட நாற்றம், பூஞ்சகாளான், அல்லது
பூச்சு (பெயிண்ட்) வாசனை வெளிப்புற சுவர்களிருந்தும் அல்லது, கப்போர்டுகளிருந்தும்
அல்லது உள்மேல்ப்புற சுவர்கள் ஆகியவற்றிலிருந்து விரும்பதகாத நாற்றம் வருகிறதா?.
உள்ப்புற ஜன்னல்களில் நீர் ஒட்டிக்கொண்டிருக்கிறதா அல்லது நீங்கள்
வீட்டிலிருக்கும் போது கண் எரிச்சல் ஏற்படுகிறதா? இந்த மாதிரி நிலைமையிருந்தால்,
காற்றோட்டம் ஏழ்மையிலிருக்கிறது என்று பொருள். காற்றோட்டம் ஏற்படுத்தமுடியாத மூலஸ்த்தானத்திலிருந்து வெளிப்படும்
மாசுக்களைக் (pollutants) கட்டுப்படுத்த
எல்லா நேரமும் மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருக்கும். உதாரணமாக,
மக்களும், வளர்ப்புப் பிராணிகளும் தோல் செதில்களையும் (flakes of skin) , பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும், ஈரப்பதத்தையும்,
உடல் வாசனைகளையும் (body
odors), செரிமான வாயுக்களையும் (digestive gases) தொடர்ச்சியாக வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. தரை
விரிப்புகள், மரச்சாமானகள், திரைச்சீலைகள் போன்ற சில ஆதாரங்களிலிருந்து துணி
இழைகள் பார்மாலிஹைட் போன்ற வாயுக்கள் அதிக அளவிலோ அல்லது பரவியிருந்தாலோ அந்த இடத்தில் காற்றோட்டம்
செய்யப்படவேண்டும்.
40. பொதுவான காற்றோட்டம் (General ventilation)
புதிய வெளிக்காற்று,
தேங்கியுள்ள உள்க்காற்றுடன் கலந்து மாசுக்களை நீர்த்துப்போகச் செய்கிறது.
மின்விசிறிகள் வெளிக்காற்றை வீட்டிற்குள் பரவச் செய்கிறது. இந்த காற்றானது
உள்க்காற்றை வீட்டை விட்டு அழுத்தத்தால் வெளியேற்றுகிறது.
41. வெளியேற்றம் மட்டும் (Exhaust-only)
வெளியேற்றம் மட்டும் செய்யும் காற்றோட்ட
அமைப்பில், வெளியேற்றும் மின்விசிறிகள் (exhaust fans) உள்ளிருக்கும் தேங்கிய காற்றை வெளித்தள்ளி, புதிய
வெளிக்காற்றை உள்ளே வரவழைக்கிறது.
42. ஆக்சிஜன் அனைத்து உயிரினங்களுக்கும்
முக்கியமான ஒன்றாகும். முக்கியம் என்றாலே அதில் ஆபத்தும் அடங்கியிருக்கிறது என்று
பொருள். காற்றில் ஆக்சிஜன் அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருந்தாலும் ஆபத்துதான். சரியான அளவு
21% ஆக்சிஜன் காற்றில் இருக்கவேண்டும் “ஒருவர், ஒவ்வொரு சுவாசத்திலும், தனது
நுரையீரலின் கன அளவில் 5% கன அளவு காற்றுதான்
பயன்படுத்துகிறார்” என்கிறார் டாக்டர்.கரிப்பீல்டு கிர்ச்னர். அதாவது 21%
ஆக்சிஜன் உள்சென்று, அதில் 5% ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளப்பட்டு, மீதம் 16%
ஆக்சிஜன் வெளித்தள்ளப்படுகிறது.
43. ஒரு சராசரி மனிதனுக்கு, வாழ்வதற்கு,ஒரு
நாளில் எவ்வளவு ஆக்சிஜன் (oxygen) தேவைப்படுகிறது.? ’நாசா’( NASA)வின் கணக்குப்படி, ஒரு சராசரி
மனிதனுக்கு ஒரு நாளைக்கு 0.84 கி.கி (kg) ஆக்சிஜன் (இரவு பகல் செயல்பாடுகளுக்கு) தேவைப்படுகிறது .
அவனுக்கு, ஓய்விலிருக்கும் போது 0.617 கி.கி ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
44. நோயாளிகளின் அறைகளில், காற்றோட்டத்திற்கு நல்ல கவனம் செலுத்த
வேண்டும். ஒவ்வொரு நோயாளியும், மாசுக் காற்றைச் சுவாசிப்பதால், அந்த நோய்
தீவிரமடையும். அப்படியிருந்தும், நோயாளிகளுக்கு சளிப் பிடிக்கும் என்று பயந்து,
கதவுகள், ஜன்னல்களை மூடி வைத்திருப்பதை பொதுவாக எங்கும் பார்க்கலாம், இது ஒரு
தவறான நடைமுறைப் பழக்கம். நோயாளிக்குத்தான் அதிக அளவு புதிய காற்று தேவை.
அதில்தான் அவர்கள் வசதியாக இருப்பர்; நோயிலிருந்தும் வேகமாகக் குணம் கிடைக்கும். மனித இனம் புதிய காற்றைக் கண்டு பயப்படுவது
விநோதமாக இருக்கிறது. அது மனிதர்களின் நண்பன்; எதிரி அல்ல. மாசுக் காற்றைத்தான்
தவிர்க்க வேண்டும்.
45. காற்று விநியோகம் நன்றாகவே இருக்கிறது. ஆகவே
கார்பானிக் அமிலம் கலந்த காற்றை சுவாசிக்க வேண்டிய அவசியமில்லை. பூமியைச் சுற்றிலும்
45 மைல் ஆழத்திற்கு ஊடுறுவி பரவியிருக்கிறது காற்றுக் கடல். இதை, கஞ்சத்தனமாக
பயன்படுத்தத்தேவையில்லை என்பதைத்தான் நமக்கு தெரியப்படுத்துகிறது.
46.
மர வளர்ப்பு.
நமது அநேக நகரங்களில்,
மரங்கள் வளர்ப்பில் அக்கறை காட்டாத குற்றத்தைச் செய்கிறோம். மரங்கள் மக்களுடைய
நலத்துக்கும், ஆயுள் நீடிப்புக்கும் காரணமாக இருக்கின்றன. ஒரு மரத்தின் இலைகள்
நுரையீரல்களாக செயல்பட்டு சுவாசிக்கின்றன. அது நச்சு கார்பானிக் அமிலத்தை
எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனை வெளியிடுகிறது. எல்லாம் வல்ல இறைவன் இந்த அண்டத்தைப் (Universe) படைத்து, உயிரினங்களின் வாழ்க்கையை நிலைநிறுத்திக்
கொண்டிருக்கிறான் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.
47.
மனிதனைப் போல, மரமானது, ஆக்சிஜனை
எடுத்துக் கொண்டு, கார்பானிக் அமிலத்தை வெளிவிடுவதாக வைத்துக் கொள்வோம்.
ஆக்சிஜனைப் பெறுவதற்கு மனிதனுக்கும், மரங்களுக்கும் ஒரு போராட்டமே நடக்கும்.
மனிதன் என்ன செய்வான்? உயிர் பிழைக்க, எல்லா மரங்களையும் வெட்டி விடுவான். அதன்
விளைவாக, மழை பெய்யாது; மனித இனமும் உலகில் இருக்காது. மனித இனமும், விலங்கினமும்
இந்த பூமியில் இல்லையென்றால், தாவர இனங்கள் சுவாசிக்க கார்பானிக் அமிலமே
இருக்காது; சுவாசிக்க ஒரு பொருளுமில்லாமல் இறந்துவிடும். மறுபக்கம் பார்த்தால்,
மரங்களோ அல்லது மற்ற தாவர இனங்களே இல்லையென்றால், மனித இனமும், விலங்குகளும்
சுவாசிக்க ஆக்சிஜன் இல்லாமல், அழிந்து விடும்.
48.
மேற்கூறிய விதமாக, இறைவனானவன், மனித இனத்தையும், விலங்குகளையும், தாவரங்களையும்
ஒன்றும் மற்றொன்றும் ஒன்றாக இணைந்து
காற்றை தூய்மையாக கிடைக்கும்படியாக படைத்திருக்கிறான். விலங்குகள்
தாவரங்கள் இவற்றிடையே உள்ள தொடர்புகளின் நடவடிக்கைகள், விளைவுகள் வித்தியாசமாக
இருக்கின்றன. அவைகளின் இயக்கங்கள் மாறான திசைகளில் விரோத சக்திகளைக் கொண்டுள்ளன.
அவைகளின் இயக்கங்களில் முரண்பாடு உள்ளது (The
relation of plants and animals, in all that relates to their peculiar actions
and effects, is a complete antagonism)
காய்கறிகள் சிதைந்து கார்பானிக் அமிலமாகவும்,
நீராகவும், அம்மோனியா கால்சியம் உப்புக்களாகவும் மாறுகிறது(decomposes).
|
மிருகங்கள், கார்பானிக் அமிலத்தையும்,
நீரையும், அம்மோனியா கால்சியம் உப்புக்களையும் உற்பத்தி செய்கின்றன.
|
காய்கறிகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது.. disengages
|
மிருகங்கள் ஆக்சிஜனை எடுத்துக்கொள்கின்றன.
|
காய்கறிகள் வெப்பத்தையும், மின்சாரத்தையும்
கிரகிக்கின்றன (absorbs )
|
மிருகங்கள் வெப்பத்தையும், மின்சாரத்தையும்
உற்பத்தி செய்கின்றன.
|
காய்கறிகள் ஆக்ஜிகரணி (de-oxidizer).இல்லை.
|
மிருகங்கள் ஒரு ஆக்ஜிகரணி( an oxidizer).
|
காய்கறி நகராதது (stationary).
|
மிருகம் நகரக்கூடியது (locomotive).
|
எல்லோரும்
கோயிலுக்கு இறைவனை வழிபடச் செல்கிறார்கள்; ஆனால் நானோ, அவனை வழிபடவும், சேவை செய்யவும்
கழிப்பறைக்குச் செல்கிறேன்!!
49. மனிதன் பெரிய மிருகமான யானையை
கட்டுப்படுத்துகிறான்; வானவெளியில் நடக்கிறான். ஆனால் ஒரு மிகச் சிறிய படைப்பான
கொசுவின் அட்டகாசத்தை அடக்க முடியவில்லையே!
‘ஜோக்’ ஒன்று நான் படித்தேன். “ ஒரு கொசு வலைக்குள் ஒரு மனிதன் படுத்திருக்கிறான்.
கொசுக்கள், வலைக்குள் நுழைவதற்கு, ஒரு சிறிய துவாரத்தைத் தேடி அதனைச் சுற்றிச்
சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. சோர்ந்து போனபிறகு ஒரு கொசு கோபத்துடன் சொல்கிறது
“நீ ஒரு தைரியமுள்ள ஆம்பளையாயிருந்தா வலையை விட்டு வெளிய வா பார்க்கலாம்!”
இந்தவிதமாக அறிவும் வலிமையும் கொண்ட 6 அறிவு மனிதன் ஒரு சிறிய படைப்பான கொசுவுக்கு
பயந்து கொண்டு, ஒரு கோட்டையைக் (வலையைக்) கட்டி, அதற்குள் வாழுகிறான்.
50. ‘கொசு, எறும்பு, ஈ போன்ற மிகச் சிறிய
உயிரினங்களை இறைவன் ஏன் படைத்து
மனிதர்களை வேட்டையாட வைத்தான்’ என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. அதற்கு இப்பொழுது
விடை கிடைத்திருக்கிறது. காரணம், இறைவனின் சுயநலம்தான்.
51. ‘மனிதனைப் படைத்த போது, தான்
வாடகைக்கிருக்கும் வீடும் (மனிதனின் உடலும்) சுற்றுபுறமும் எப்பொழுதும் தூய்மையாக இருக்க வேண்டும்;
அப்படியிருந்தால்தான், தான் நீண்ட காலம் அந்த வீட்டில் (மனிதனின் உடலில்)
குடியிருக்க முடியும்!’ என்று இறைவன் நினைத்தான். வலி, ‘தனக்கு ஒரு நோய் இருக்கிறது என்பதை மனிதனுக்கு
உணர்த்தி எப்படி டாகடருக்குப் போகச் சொல்லி தூண்டுகிறதோ’, அதைப் போல, அவன் தனது
வீட்டையும், அதன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள ஒரு தூண்டுகோல்
தேவை என்பதை இறைவன் உணர்ந்தான்.
ஆகையால்தான், கொசுவும் மேலே குறிப்பிட்ட உயிரினங்களும் தூண்டுகோளாக தோற்றுவிக்கப் பட்டன. தூய்மையில்லாத வீட்டிலேயும் அதன்
சுற்றுப்புறத்திலேயும் கொசு, எறும்பு, ஈ முதலியன ஏராளமாக பல்கிப் பெறுகின்றன. இந்த
விதமாக, இறைவன் மனிதனை, அவனுடைய வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக
வைத்திருக்கும்படி எச்சரிக்கிறான்.
52. மனிதனுடைய முழுமையான உடல் மன நலம்தான்
ஆன்மீகம் என்ற உண்மையை இறைவன் எனக்கு வெளிப்படுத்தினான். கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்வது
ஒரு முறை என்றாலும், கோவிலுக்குப் போகாமல் இறைவனை வழிபாடு செய்வதற்கு வேறு பயனுள்ள
முறைகளும் இருக்கின்றன. நாம் குடியிருக்கும் வீட்டையும், சுற்றுப்புறத்தையும்
தூய்மையாக வைத்திருப்பதற்காக நாம் செய்யும் செயல்கள் யாவும் கடவுளுக்குச் செய்யும்
வழிபாடும், சேவையுமாகும்.
53. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது எப்படி
கடவுள் வழிபாடாகும்? வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டால்,
கொசு, ஈ, எறும்பு அண்டாது. எப்பொழுதும் வீட்டிற்குள் புதிய காற்றோட்டம் இருக்கும்.
இந்த காற்றோட்டம் வீட்டிற்குள் குடியிருக்கும் ஆட்களுக்கு நல்ல உடல் மன நலத்தைக்
கொடுக்கும். நமது உடலை சில காலத்துக்கு இறைவன் வாடகைக்கு எடுத்து, அதில்
வாழ்ந்து வருகிறான். ஆகையினால்,
அவன்
தான் குடியிருக்கும் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் வீட்டின் உரிமையாளரான
நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறான்.
அவன்
குடியிருப்பதற்கு வாடகையாக, வாழ்க்கை சிறப்பாக அமைய அவன் அருள்புரிகிறான்.
ஆகவே மக்கள் சிறப்பாக பெண்கள், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக
வைத்திருப்பதுவும் இறைவனுக்குச் சேவை செய்து வழிபடுவதாகும் என்பதை கருத்தில் கொள்ள
வேண்டும்.
54. ஒருவர் முகத்தை மூடிக்கொண்டு தூங்கும்போது, மீணடும் மீணடும் அவர்
வெளிவிடும் தூய்மையற்ற கெட்ட காற்றான கார்பானிக் அமிலம் கலந்த காற்றையே
சுவாசிக்கிறார். ஏற்கனவே கூறியது போல, மூளையால் வேலை செய்பவராக இருந்தாலும் அல்லது
உடலுழைப்பவராக இருந்தாலும் மறுநாள் அவரது வேலையை சரியாகச் செய்யமுடியாது.
55. கொசுவலைக்குள் படுத்திருக்கும் போது இளப்பு (wheezing) ஏன்
வந்தது? கொசு வலைத்துவாரங்கள் மிகச் சிறியது. ஆகவே போதிய புதிய காற்று உள்ளே
புகமுடியவில்லை. எனவே ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஆளுக்குத் தேவையான 98 க.மீ க்குக்
குறைவான காற்றே கொசுவலைக்குள்ளே இருந்திருக்கிறது. நான் வெளிவிடும் கெட்ட
கார்பானிக் அமிலக் காற்று கொசுவலையின் சிறு துவாரத்திற்குள் நுழைந்து
வெளிவரமுடியவில்லை. காரணம், கொசுவலைக்கு மேலே ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறிக்
(fan) காற்றின் அழுத்துமும், கொசுவலையைச் சுற்றியுள்ள புதிய வெளிக்காற்றின் (fresh
air) அழுத்தமும், கொசுவலைக்குள்ளிருக்கும் காற்றின் அழுத்தத்தை விட அதிகம்.
சுருங்கச் சொன்னால், கொசுவலைக்குள்ளிருக்கும் அசுத்தக் காற்றை, வலைக்கு
வெளியிலிருக்கும், வெளிக்காற்று, வெளியில் வரவிடாமல், தடுத்துவிடுகிறது. இந்தத்
தடுப்புக்கு கொசுவலை அரணாக இருந்து செயல்படுகிறது. இதனால், நான் கெட்ட காற்றையே
சுவாசிக்க வேண்டியதாயிற்று. இந்த சூழ்நிலையில்தான் கொசுவலைக்குள் எனக்கு இளப்பு
(wheezing) விடாமலிருந்தது.
56. நான் தூத்துகுடி அனல்மின் நிலையத்தில் செயற்பொறியாளராக வேலை
செய்து கொண்டிருந்த பொழுது, அனல்மின் நகர் குடியிருப்பில் குடும்பத்துடன்
குடியிருந்து வந்தேன்.
கொசுக்களின் தொந்தரவு அதிகமாக இருந்தது. எப்படியென்றால், சாப்பிடும்போது கூட
கொசுவலைக்குள்தான் சாப்பிட வேண்டியதிருந்தது. வீட்டின் எல்லா ஜன்னல்களுக்கும் கொசு
வலைப் பின்னலை அடிக்க ஏற்பாடு செய்தேன். அடுத்த ஒரு
வாரத்திற்குள் எனக்குச் சளி பிடித்துக் கொண்டது. முதலில் எனக்கு திடீரென்று சளி
உண்டானதற்கு காரணம் தெரியவில்லை. மாத்திரைகள் எடுத்துக்
கொண்ட பிறகும் சளி கட்டுக்குள் வரவில்லை. ஒரு மாதத்
துயரத்திற்குப் பிறகு, மின்னல் வடிவில் ஒரு எண்ணம் தோன்றியது. என்னுடைய வீட்டில்,
புதிதாக அறிமுகப்படுத்திய கொசு வலைப் பின்னல் காரணமாக இருக்கலாம் என்பதுதான் அந்த
எண்ணம். அந்த எண்ணத்தைத் தொடர்ந்து, கொசுவலைப் பின்னல்
அனைத்தையும் எடுத்து விட்டேன். உடனே சளியிலிருந்து விடுதலை பெற்றேன். ஒருவருக்கு
, ஒரு மணி நேரத்திற்கு 98 க.மீ. காற்று தேவை.
கொசுவலைப் பின்னல் 98 க.மீ. காற்று
விநியோகத்தைத தடுத்து நிறுத்தி விடுவதால், நான் வெளியிட்ட காற்றையே, அதாவது
கார்பானிக் அமிலக் காற்றையே மீண்டும் மீண்டும் சுவாசித்ததால், எனக்குச் சளி
பிடித்துக் கொண்டது. பின்னாளில், தெர்மல் நகர் நிர்வாகம் கொசு உற்பத்திக்கான
காரணத்தைக் கண்டுபிடித்து அழித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
57.
சென்னையிலுள்ள எனது நண்பர் அவருடைய சொந்த கிராமத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு
அவர் இறவில் திறந்த மேல் மாடியில் படுத்திருக்கிறார். அவரே ஆச்சரியப்படும்படியாக,
மறுநாள் காலையில், சீக்கிரமாக விழித்துக் கொண்டிருக்கிறார்; மலம் சுலபமாக
வெளியேறியிருக்கிறது; புத்துணர்வை உண்ர்ந்திருக்கிறார். இதற்கு
காரணம் என்ன? மொட்டை மாடியில் அதிகமான, மாசு கலக்காத, புதிய காற்று கிடைத்ததுதான்
காரணம். சென்னையில் இந்த நிலை யில்லை.
58.
27-08-2011 அன்று, நானும் எனது மனைவியும் நாசிக்கில் ஒரு
திருமணத்தில் கலந்துவிட்டு, பம்பாயிலிருந்து ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம்.
ஒரு சக பயணி, ஒரு இளம் பெண் இரவில் தனது போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு
தூங்கினாள். மறு நாள் காலையில் சோர்வாகக்காணப்பட்டாள்.
.காலைச் சிற்றுண்டி சாப்பிட்டவுடன், தனது போர்வையால் முகத்தைப் போர்த்திக் கொண்டு
தூங்கிவிட்டாள். அவள் மதிய சாப்பாட்டிற்கு எழுந்த பொழுது,
அவளுக்கு கடுமையான சளிப்பிடித்துக் கொண்டு, மூக்கிலிருந்து நீராக ஒழுகிக்
கொண்டிருந்தது. அடிக்கடி சளியை சிந்தியும், ஒழுகிய நீரைத் துடைத்துக்
கொண்டிருந்தாள். அவள் ரயிலில் ஏறிய பொழுது நன்றாகத்தானிருந்தாள். ஆனால், அவள் மறுநாள்
சரியாக இல்லையே! ஏன்? முதல் நாள் இரவில்
அவள் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு தூங்கியதால், அவள் வெளியிட்ட கார்பானிக்
அமிலக் காற்றையே மீண்டும் மீண்டும் சுவாசித்திருக்கிறாள். நல்ல காற்று கிடைக்காமை
செரித்தலை (digestion) பாதித்திருக்கிறது. அதனால் மறுநாள் காலையில் சோர்வாகக
காணப்பட்டாள். இந்த சோர்வுதான் அவளை காலையில் சிற்றுண்டி
சாப்பிட்டவுடன் தூங்கத் தூண்டியது. சாப்பிட்டவுடன் சில நிமிடங்கள் கூட
இடவெளியில்லாமல் தூங்கியது மட்டுமில்லாமல்
முகத்தையும் மூடிக்கொண்டு தூங்கினார். இரவிலேயே நோய் ஆரம்பமாகி விட்டது.
காலையில் உடனே தூங்கியது செரித்தலை (digestion) மீண்டும் பாதித்துவிட்டது; முகத்தை
மூடித்தூங்கியதால் கார்பானிக் அமிலக்
காற்றை மீண்டும் மீண்டும் சுவாசிக்க நேர்ந்தது. இதனால் செரித்தல் மேலும்
பாதிக்கப்பட்டது. ஆகவே நோய் முற்றி சளிப்பிடிக்கவும், நீராக ஒழுகவும் ரம்பித்து
விட்டது.
59. எப்பொழுதெல்லாம் நாட்டின் தந்தை மகாத்மா
காந்தி அவர்கள், அவருடைய நண்பர்களுடைய வீட்டுக்குப் போகிறாறோ அப்பொழுதெல்லாம்,
அங்கு சென்று முதலில் பார்வையிடுவது அவ்வீட்டின் கழிப்பறையையும்,
சமயலறையையும்தானாம். அந்த இரண்டு இடங்கள்தான் ஒருவருக்கு உடல் நலத்தைக்
கொடுப்பதுவும், கெடுப்பதுவும் ஆகும். “பிரிட்டன்காரர்கள், அவர்களுடைய குற்றங்கள்
என்னவாக இருந்தாலும், அவர்களிடம் முதன்மையான நல்லொழுக்கம் (cardinal virtue); இருந்தது. அவர்கள் தூய்மையை கட்டி காக்கவும்,
எல்லா சட்டங்களின்படி நடக்கவும் போட்டி போட்டுச் செயல்பட்டனர். நான் ஆங்கில
மக்களிடமிருந்து தூய்மையை கற்றுக் கொண்டேன்” என்கிறார் அவர்.
60. இறைவனின் அருளால், என்னுடைய வீட்டிலிருந்து
கொசுக்களை விரட்டுவதற்கு ஒரு முறையைக் கண்டுபிடித்தேன்.
61. எல்லோரும் இறைவனை
வழிபாடுசெய்ய,சேவை செய்ய, கோவிலுக்குச் செல்வார்கள். ஆனால் நானோ அதற்கு
குளியலறைக்கும், கழிப்பறைக்கும் செல்கிறேன் !
a)
ஆம்! நான் தினசரி கழிப்பறைக்குச் செல்கிறேன். லைசால் (Lizol)
டப்பாவின் மூடியில் ஒரு மூடி லைசால் திரவத்தை ஒரு வாளி நீரில் ஊற்றி நன்றாக
கலக்கி, அந்த கலவை நீரை கழிப்பறைக்
கோப்பைக்குள்ளும், குளியலறை, சமயலறை, வாஸ் பேசின் ஆகியவற்றின் கழிவுநீர்க்
குழாய்களிலும் ஊற்றி விடுவேன்.
b)
நான் மற்ற வீடுகளின் கழிவுநீர் தேங்கியிருக்கும் இடத்திலும் லைசால்
கலந்த நீரை ஊற்றிவிடுவேன். இந்த
நடவடிக்கைகள் கழிப்பறைக் குழாய்கள், மலத்தொட்டி (septic tank), கழிவுநீர்க்குழாய்கள், கழிவுநீர்ப்பள்ளம்(பிற வீடுகளின் கழிவுநீர்
தேங்கி நிற்கும் பள்ளம்) ஆகியவற்றில் கொசுக்களின் பெருக்கத்தை தடுத்தது.
c)
மாலை 7 மணி அளவில் ,சிறிய மண் சுட்டியில் (கார்த்திகை தீப சுட்டி
விளக்கு) வேப்பெண்ணையுடன் வேறு எண்ணையை 2:98 என்ற விகிதத்தில் கலந்து 1 ½ மணி
நேரம் எரிய விடுவேன் அல்லது வேப்பெண்ணையுடன் மண்ணெண்ணையை 2:98 விகிதத்தில் கலந்து
மின்சார ஆவி குடுவையில் (electric vaporizer) ஊற்றி பயன்படுத்துவேன்.
d)
லைசால தண்ணீரை தெளிப்பான் (sprayer) மூலம் கழிப்பறை-குளியலறை
வெண்டிலேட்டரிலும், கழிப்பறைக் கோப்பையின் வெளிப்புறத்திலும், சமயலறை கழுவு
தொட்டியின் வெளிப்புறத்திலும், கழிவுக் கூடைகளிலும், சட்டை தொங்கபோடக்கூடிய
இடங்களிலும் தெளிப்பேன்.
e)
தினசரி காலையில் தவறாது சமயலறை கழிவை அகற்றி விடுவேன். இது மிகவும்
முக்கியம். ஏனென்றால் கழிவுக் கூடையில்தான் 12 மணி நேரத்தில் கொசு
உற்பத்தியாகிறது.
62. எனது ஆராய்ச்சிக்கு நல்ல பலன் ஒரு மாதத்தில் கிடைத்தது. எனது குடும்பத்தினர்
கொசுக்கடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். எனது குடும்பத்தினருக்கு எறும்புக்கடியினால் பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு தரையை லைசால் கலந்த நீரால் எனது மனைவி
துடைத்தார். இவ்வாறு இறைவனை வழிபட்டு சேவை செய்தோம். இப்பொழுது எறும்புத்
தொல்லையிலிருந்தும் விடுபட்டோம்.
65. அரோமணி 7-வது விதி, நல்ல காற்றோட்டம் பல நோய்களை குணப்படுத்தும்
அருமருந்தாகும் என்பதை வலியுறுத்துகிறது. நல்ல காற்றோட்டம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களையும், இளப்பு
(wheezing) சளி
(sputam), காய்ச்சல் (fever), மலச்சிக்கல் (constipation), ஒற்றைத்தலைவலி
(migraine) தூக்கமின்மை
(insomnia) முதலிய நோய்களைக் குணப்படுத்தும், வராமலும் தடுக்கும்.
இரட்டை மருத்துவம்-வாழும் தாய் மருத்துவம் (முதல் மருத்துவம்)
அரோமணி 7-வது விதி ( Aromani 7th Principle)
அரோமணி 7-வது விதி ( Aromani 7th Principle)
காற்று, (இயற்கை ஆற்றல்களில் ஒன்று [Air-one of 5 Natural Agents)]
நல்ல காற்றோட்டம் (good ventilation) பல நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாகும். .
Please visit websites: www.medicineliving.com; www.medicineliving.blogspot.com; Email:twinmedicine@gmail.com
0 Post a Comment: